என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம் மெல்ல மெல்ல ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடத் தொடங்கிய நிலையில் புதிய படங்களுக்காக அந்த படத்தை தங்களது திரையரங்குகளில் இருந்து உரிமையாளர்கள் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வேதனையடைந்த பார்த்திபன் திரையுலக நண்பர்களுடன் இணைந்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நடிகர் பார்த்திபன் நடித்து வெளிவந்துள்ள ஒத்த செருப்பு திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு அப்போது நடிகர் ராதா ரவி வேண்டுகோள் விடுத்தார். தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஒத்த செருப்பு திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய படங்கள் வருகையால் திரையிடுவதை நிறுத்துவது கருணைக் கொலையைவிடவும் கொடூரமானது என்றும் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் இருந்து பார்த்திபனுக்கு செய்தி ஒன்று வந்தது. தம்மை வீட்டில் வந்து சந்திக்குமாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார், அதனைதொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூவை அவரது இல்லத்தில் நடிகர் பார்த்திபன் சந்தித்து பேசினார். ஒத்த செருப்பு திரைப்படத்தினை தேசிய விருதுக்கு பரிந்துரைக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ அப்போது கூறினார். ஒத்த செருப்பு ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படம் என்றும் அவர் பாராட்டினார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’ஹீரோ’ படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ. இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 20ந் தேதி ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹீரோ படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டிரைபல் ஆட்ஸ் நிறுவனம் சார்பில் எம்.மணிகண்டன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நான் ‘டிரைபல் ஆட்ஸ்’ நிறுவனம் சார்பில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017 அன்று ‘ஹீரோ’ என்ற படத் தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன்.
‘ஹீரோ’ என்ற எங்களது தலைப்பில் ஆமந்த் அண்ணா மலையின் எழுத்து- இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான செய்திகள் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் தமிழ் மொழியில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.
தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகியபோது அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப் பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக்கூடாது என்று கவுரவ செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.
ஆனால் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர். ஆகவே இந்த கடிதத்தின் வாயிலாக கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான யஷ் நடிப்பில் உருவாகியுள்ள சூர்யவம்சி படத்தில் ஷாம் வில்லனாக நடித்துள்ளார்.
கே.ஜி.எப் படம் மூலம் தென் இந்திய ரசிகர்களை கவர்ந்த யஷ் நடித்த சூர்யவம்சி படம் தமிழில் வெளியாக உள்ளது. மகேஷ்ராவ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ராதிகா யஷ்சை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார்.

ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமை திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்சிற்கு தெரிய வருகிறது. ஷாம் ஒரு மிகப்பெரிய டான். அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார்கள்.
நடிகை சமீரா ரெட்டி தனது 2 மாத குழந்தையுடன் 6300 அடிஉயரம் கொண்ட முல்லயநாகிரி மலைமீது ஏறி சாகசம் செய்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார். பெண் குழந்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். சமீராவுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் அழகிய பெண்குழந்தை பிறந்தது.

அவர் தனது இரண்டு மாத குழந்தையுடன் கர்நாடகாவில் உள்ள முல்லயநாகிரி சிகரத்தில் ஏறினார். 6300 அடி உயரம் கொண்ட அந்த உயரமான மலையில் தனது கைக்குழந்தையுடன் ஏறியது உற்சாகம் அளிக்கும் வகையில் இருந்ததாக சமீரா கூறியுள்ளார். மலை ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மலை ஏறும்போதே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கவர்ச்சியை குறைத்துக்கொண்டு, நடிப்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாக யாஷிகா கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களை சீண்டிபார்ப்பது சிலரின் வேலையாக இருக்கிறது. அப்படி சீண்டுபவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துவிடுகிறார் யாஷிகா ஆனந்த். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “சினிமாவில் நடிப்பது போலத் தான் நிஜத்திலும் நடிகர்கள் இருப்பார்கள் என நினைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. சினிமாவில் நான் கவர்ச்சியாக
நடிப்பதால், என்னிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அர்த்தம் கிடையாது.
இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும். சிலர், போலி கணக்கு மூலமாக வந்து தவறாக கமென்ட் செய்யும்போது கோபம் வந்துவிடும். அதுதான் அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கிறேன். அதுக்கு பிறகு அவர்கள் வாலாட்ட மாட்டார்கள். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நான் நடித்தது கூட இப்படிப்பட்ட சீண்டல்களுக்கு காரணமாக இருக்கலாம். அந்த படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.

அதில் நடிக்க ஒப்புக்கொண்டது என்னுடைய தவறுதான். என்னிடம் கதை சொன்னபோது இல்லாத விஷயங்களை எல்லாம், ‘இப்படி பண்ணா நல்லாருக்கும், அப்படி பண்ணா நல்லாருக்கும்’ என்று சொல்லி படம்பிடித்தனர். படப்பிடிப்பு தளத்தில் அதை என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால், இனிமேல் இந்த மாதிரி தவறுகளை செய்ய மாட்டேன். கவர்ச்சியை குறைத்துக்கொண்டு, நடிப்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன்” என்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் மற்ற கதாநாயகர்களுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார். மாதவனுடன் விக்ரம் வேதா படத்திலும், சிம்பு, அரவிந்தசாமி, அருண் விஜய்யுடன் செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார். பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக வந்தார். மலையாளத்தில் ‘மார்கோனி மாதை’ படத்தில் ஜெயராமுடனும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து விஜய்யின் 64-வது படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வந்தனர். அவரும் சம்மதித்துள்ளார்.
இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று டுவிட்டரில் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய்க்கு வில்லனா? நண்பனா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இதில் விஜய் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் ராமேசுவரத்தில் தொடங்க உள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது குழுவினருடன் சென்று படப்பிடிப்பு நடக்கும் இடங்களை நேரில் பார்த்து வருகிறார். வெளிநாட்டில் ஓய்வெடுக்க சென்ற விஜய்யும் சென்னை திரும்பி இருக்கிறார். விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய்யின் ரசிகரான இளம் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லி இயக்கியுள்ள இப்படம் தீபாவளி விடுமுறையில் வெளியாக இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதனிடையே தொடர்ந்து மூன்று நாட்கள் இப்படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில் கடந்த செப். 30ந் தேதி விஜய் சேதுபதி படத்தில் இணைந்ததை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நேற்று மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இப்படத்தில் இணைத்துள்ளதை படக்குழு உறுதி படுத்தியது.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டில் நடிகரும் விஜய்யின் ரசிகருமான சாந்தனு இப்படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெரிப், வாணி கபூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வார்’ படத்தின் விமர்சனம்.
இந்திய ராணுவத்தில் உள்ள ரகசிய உளவு டீமின் தலைவராக இருக்கிறார் ஹிரித்திக் ரோஷன், இவர் டீமில் புதிதாக வந்து இணைகிறார் டைகர் ஷெரிப். இவரது தந்தை ராணுவத்தில் இருந்தபோது நாட்டுக்கு செய்த துரோகத்தால் இவர் குடும்பம் அவப்பெயருக்கு ஆளாகிறது. இதனை போக்க ரகசிய உளவுத்துறையில் இணைந்து தனது குடும்பத்தின் மீதுள்ள அவப்பெயரை நீக்கவும், நாட்டின் பாதுகாப்பை காக்கவும் துடிப்போடு இருக்கிறார் டைகர் ஷெரிப்.

இவரை பல சோதனைக்கு பிறகு டீமில் இணைத்து அவருக்கு சிறப்பான பயிற்சி தருகிறார் ஹிரித்திக் ரோஷன். ஒரு கட்டத்தில் ஒரு பயங்கரவாதியை பிடிப்பதற்கான பணியில் இருந்த போது நாயகியை சந்திக்கிறார் ஹிரித்திக் ரோஷன். நாயகி வாணி கபூர் திருமணமாகி கணவனை பிரிந்து தனது 6 வயது மகளுக்காக வெளிநாட்டில் பணிபுரிகிறார். ஹிரித்திக் ரோஷன் தனது பணிக்காக நாயகியை பயன்படுத்துகிறார். அப்போது நாயகி பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார்.
இதனால் மனவேதனை அடையும் ஹிரித்திக் ரோஷன் இந்த சம்பவத்தில் நாட்டை காக்ககூடிய அதிகாரிகளே நாட்டை காட்டி கொடுக்கிறார்கள் என்பதை உணர்கிறார். இம்மாதிரியான தேச துரோகிகளை கண்டுபிடித்து தீர்த்துக்கட்டும் முயற்சியில் இறங்குகிறார் ஹிரித்திக். இதனை அறிந்த பிற அதிகாரிகள் ஹிரித்திக் ரோஷனை தேச துரோகி என முடிவு செய்து அவரை கொல்வதற்கு டைகர் ஷெரிப்பை அனுப்புகிறார்கள். இறுதியில் உண்மை நிலவரம் டைகர் ஷெரிப்புக்கு தெரிய வந்ததா? எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து ஹிரித்திக் ரோஷன் தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஹிரித்திக் ரோஷன், ஆக்ஷன், டான்ஸ், செண்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். இவருக்கான தமிழ் டப்பிங்கும் அழகாக பொருந்தி இருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறது. ஹிரித்திக் ரோஷனுக்கு இணையாக டைகர் ஷெரிப்பும் தனது பங்களிப்பை மிக சிறப்பாக கொடுத்திருக்கிறார். படத்தில் இருவேறு கதாபாத்திரங்களாக வந்து இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார். இறுதி காட்சியில் ஹரித்திக் ரோஷன் உடனான ஆக்ஷன் காட்சியில் இவரின் பங்கு பிரம்மிக்க வைக்கிறது.
நாயகி வாணி கபூர் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மேலும் அசுதோஷ் ராணா, அனில் ஜார்ஜ், அனு பிரியா, கீத் டல்லிசன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த், ராணுவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்துள்ளார்.
பெஞ்சமின் ஜாஸ்பரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷால் தத்லானியின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது.
மொத்தத்தில் “வார்” ஆக்ஷன் விருந்து.
கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் படமாகி வரும் இந்தியன் - 2 படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் படமாகி வருகிறது. காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோரும் உள்ளனர். இந்த படம் ரூ.200 கோடி செலவில் தயாராகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது.
சித்தார்த், ரகுல் பிரீத் சிங் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வயதான சேனாதிபதி தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் வருவதுபோன்ற காட்சியை எடுத்தனர். வளசரவாக்கத்தில் வில்லன்களை வயதான கமல்ஹாசன் வர்ம கலையால் தாக்கி சண்டை போடும் காட்சியும் படமாக்கப்பட்டது. இப்போது ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்குள்ள ஜெயிலில் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வந்தனர். தற்போது அனில்கபூர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனில் கபூர் ஏற்கனவே முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்-2 படப்பிடிப்பு அரங்கில் அனில்கபூர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகையும், மாடலுமான அபிராமி ’இரு துருவம்’ என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், குணச்சித்திர நடிகை என பன்முக கலைஞராக வலம் வந்துகொண்டிருப்பவர், அபிராமி. இவர் சமீபத்தில் வெளியான `நேர்கொண்ட பார்வை' படத்தில் பமீதா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.

போட்டியிலிருந்து வெளியேறிய அபிராமி, இயக்குநர் கௌதம் மேனன் எடுத்துக்கொண்டிருக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்தது. இந்நிலையில் சோனி லிவ் செயலியில் வெளியாகியுள்ள ’இரு துருவம்’ என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிரைம் திரில்லராக இந்த தொடர் உருவாகி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.
`வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் `அசுரன்'. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜாக்கி கலை பணிகளை மேற்கொள்கிறார்.
நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்த உடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இந்தி மட்டும் அல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே கவர்ச்சி காட்டுவதில் குறையே வைப்பது இல்லை. இதனால் இயக்குனர்களின் தேர்வு பட்டியலில் இவருக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
போதாத குறைக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். தமிழில் நடிகர் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ராதிகா ஆப்தே. அப்போது அவர் அணிந்திருந்த உடை பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கறுப்பு நிற உடை அணிந்துள்ள ராதிகா ஆப்தே அதற்கு உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இதேபோல் வலை போன்ற உடையில் தொடை தெரியும் அளவுக்கு ஆடை உடுத்தியிருக்கிறார். ராதிகா ஆப்தே அணிந்து வந்த இந்த உடையை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்துள்ளனர். அதே நேரத்தில் ராதிகா ஆப்தேவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






