என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தொகுத்து வழங்கும் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “பிக்பாஸ் சீசன் 13” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற புதிய போட்டியும் உள்ளது.

    இதற்கு கர்ணிசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தப் போட்டி இந்திய கலாசாரத்துக்கு எதிராகவும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

    பிக்பாஸ் சீசன் 13

    இந்த நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கான் வீட்டு அருகே கர்ணிசேனா அமைப்பை சேர்ந்தவர்களும் பிற அமைப்பில் உள்ளவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் இருக்க நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த் இன்று காலை ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்தி நடிகர்கள் பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

    மும்பையில் கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இடைப்பட்ட நேரத்தில் ரஜினி தனது அடுத்த புதிய படத்தை இறுதிசெய்யும் வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்ததும் வழக்கம்போல இமயமலை சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்கவும் திட்டமிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இன்று காலை இமயமலை புறப்பட்டுச் சென்றார். இமயமலை செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகை அக்‌ஷரா ஹாசன் தனது பிறந்த நாளை அக்னி சிறகுகள் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
    விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அக்னி சிறகுகள்’.  ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

    அக்னி சிறகுகள் படக்குழு

    மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றுள்ளார்கள். இந்நிலையில் நடிகை அக்‌ஷரா ஹாசனின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
    விஜய்  - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

    பிகில் படக்குழு 

    கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

    தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது. யூடியூபில் வெளியான சில நிமிடங்களில் இந்த டிரைலர் வைரலானது. 

    ரஞ்சித் பாரிஜாதம் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’ படத்தின் முன்னோட்டம்.
    மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனர் தினேஷ், மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். 

    நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர். 

    நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். 
    ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் சம்பவம் படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்க உள்ளனர்.
    மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனர் தினேஷ், மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். 

    நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்க உள்ளனர். 

    சம்பவம் படக்குழு

    நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். 
    ’மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆப் ஈவில்’ என்ற ஹாலிவுட் படத்திற்காக நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு ஐஸ்வர்யா ராய் குரல் கொடுத்துள்ளார்.
    நடிகை ஐஸ்வர்யா ராய் ’இருவர்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார். 

    ஐஸ்வர்யா ராய்

    இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சின்ன இடைவெளிக்கு பின் நடித்திருக்கும் படம் ’மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆப் ஈவில்’. இந்த படத்தை படக்குழு இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தி மொழியில் ஏஞ்சலினாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்க உள்ளார். 
    கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகைகளையும், கிரிக்கெட் வீரர்களையும் இணைத்து காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது நடிகை அஷ்ரிதா ஷெட்டியும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அஷ்ரிதா ஷெட்டி தமிழில் சித்தார்த் ஜோடியாக உதயம் என்.எச்.4, அருள்நிதியுடன் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், கவுதம் கார்த்திக் ஜோடியாக இந்திரஜித் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது நான்தான் சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு துளு படத்திலும் நடித்துள்ளார். 

    மனிஷ் பாண்டே, அஷ்ரிதா ஷெட்டி

    அஷ்ரிதா ஷெட்டிக்கும் மனிஷ் பாண்டேவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் வெளி உலகத்துக்கு தெரியாமலேயே இருந்தது. தற்போது மனிஷ் பாண்டே உறவினர்கள் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

    இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடப்பதாகவும் அடுத்த மாதம் மும்பையில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான டி20 தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வசதியாக திருமணத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
    இண்ஸ்டாகிராமில் நடிகை சமந்தாவின் சர்ச்சைக்குறிய பதிவுக்கு நடிகர் நாக சைதன்யாவின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படத்தில் அறிமுகமானவர் சமந்தா. விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையானார். சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். 

    திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமந்தா 2 நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில், செல்ல நாயின் படத்தை வெளியிட்டார். 

    சமந்தா, நாக சைதன்யா

    அந்த நாயின் கழுத்தில் ‘நெம்பர் 1 ஹஸ்பண்ட் ‘என்று எழுதிய பேட்ச் அணிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாக சைதன்யாவின் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். கணவர் நாகசைதன்யாவை சமந்தா அவமதித்து விட்டார் என்று விமர்சித்து வருகின்றனர். பொது வெளியில் கணவரை பற்றி மரியாதையாக பேச கற்றுக் கொள்ளுங்கள் என்று சமந்தாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
    பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸில் பங்கேற்று பிரபலமான நடிகை ஒருவரின் கவர்ச்சிக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் சீசன் 2 மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாலாஜி மீது குப்பையை கொட்டியது, ஆபாசமாக உடையணிந்தது உட்பட பல சர்ச்சைகளில் சிக்கினார். நிகழ்ச்சி முடிந்ததும் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

    ஆனால் ஓர் ஆண்டாகியும் இன்னமும் அவரது ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. இருந்தபோதும் அவ்வப்போது தனது சமூகவலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்து கொண்டிருக்கிறார். தற்போது அதில் இருந்து ஒருபடி மேலே போய், கவர்ச்சியான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 

    ஐஸ்வர்யா தத்தா

    அரைகுறை ஆடையில் மிக மோசமாக பல காட்சிகளில் அவர் தோற்றமளிக்கிறார். கவுன் போன்ற அந்த ஆடை ஆங்காங்கே கிழிந்தது போன்று, உடலை வெளிக்காட்டும்படி உள்ளது.இந்த வீடியோவிற்கு, "நான் ஒரு ராணி. என்னை எப்படி ஆளுவது என எனக்குத் தெரியும்" என ஐஸ்வர்யா ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதைப் பார்த்து விட்டு பல ரசிகர்கள் அவரது அழகைப் பாராட்டினாலும், சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
    ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, முனீஸ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் பெட்ரோமாக்ஸ் படத்தின் விமர்சனம்.
    சென்னையில் பிறந்து வளர்ந்து மலேசியாவில் செட்டில் ஆனவர் பிரேம். இவரது தாய், தந்தை சுற்றுலா சென்றபோது கேரள வெள்ளத்தில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டை விற்க முயற்சிக்கிறார் பிரேம். ஆனால் அங்கே வசிக்கும் தமன்னா உள்ளிட்ட 4 பேய்கள் வீட்டை விற்க விடாமல் தடுக்கின்றன. வீடு வாங்க வருபவர்களை பயமுறுத்தி அனுப்பவே வீட்டை விற்கும் முயற்சி தடைபடுகிறது. 

    இந்த சூழலில் பார் ஒன்றில் வேலை பார்க்கும் முனீஸ்காந்த் வீட்டில் பேய் இல்லை என்று நிரூபித்து விற்று தருவதாக உறுதி தருகிறார். அவசர பண தேவை உள்ள காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் மூவரையும் இந்த பணிக்கு சேர்த்துக்கொள்கிறார். இவர்கள் நால்வரும் பேய் வீட்டில் சில நாட்கள் தங்குகின்றனர். இதன்பின் நால்வருக்கும் என்ன ஆனது? அந்த 4 பேய்களும் யார்? பிரேமின் பெற்றோர் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு படம் பதில் தருகிறது.

    பெட்ரோமாக்ஸ் விமர்சனம்

    சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பேயை வைத்து நிறைய காமெடி செய்துவிட்டார்கள். பேய் படம் என்றாலே வழக்கமான கதை என்று ஆகிவிட்டது. பெட்ரோமாக்ஸ் படத்தின் கதையும் வழக்கமான கதை தான். ஆனால் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் திரைக்கதை, வசனத்தால் படம் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக மாறி இருக்கிறது. இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கும் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத்துக்கும் பாராட்டுகள். 

    தமன்னா படத்தின் நாயகி என்றாலும் துணை கதாபாத்திரம் தான். மற்ற கதாபாத்திரங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம். இருந்தாலும் பிற கதாபாத்திரங்கள் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பதால் அது பெரிய குறையாக தெரியவில்லை. ஆனால் காட்சிகளில் மிகவும் அழகாக தெரிகிறார் தமன்னா. 

    பெட்ரோமாக்ஸ் விமர்சனம்

    படத்தின் கதாநாயகனே முனீஸ்காந்த் தான். நெஞ்சு வலி காரணமாக பயம் வரும்போது அவர் சிரிக்கும் காட்சிகள் சிரிப்பூட்டுகின்றன. அவருடன் சேர்ந்து காளி வெங்கட், திருச்சி சரவணகுமார், சத்யன் மூவரும் வயிறு குலுங்க வைக்கிறார்கள். முதல் பாதியை விட இரண்டாம் பாதி வயிறை அதிகம் பதம் பார்க்கிறது. பேய்களை நால்வரும் வெறுப்பேற்றும் காட்சிகளில் சிறுவர்களாகவே மாறி விடுகிறோம். 

    யோகி பாபு, மைனா நந்தினி வரும் காட்சிகளும் சிரிக்க வைக்கின்றன. கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் தனது குணச்சித்திர கதாபாத்திரத்தால் தனித்து தெரிகிறார். பிரேம், மைம் கோபி, பேபி மோனிகா, பேய் கிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். 

    பெட்ரோமாக்ஸ் விமர்சனம்

    டேனி ரேமண்டின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருக்கின்றன. ஜிப்ரானின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. லியோ ஜன பலைன் படத்தொகுப்பும் கச்சிதம். தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றவாறு ரோகினும் சுரேந்திரநாத்தும் திரைக்கதையை மாற்றி இருக்கிறார்கள். 

    வசனங்களும் நன்றாக சிரிக்க வைக்கின்றன. வழக்கமாக பேய் படத்தில் இருக்கும் லாஜிக் மீறல்களும் பிளாஷ்பேக் காட்சியும் மட்டும் தான் சின்ன சின்ன குறைகள். நீண்ட நாள் கழித்து 2 மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஒரு நல்ல கருத்தையும் சொல்லி அனுப்புகிறது இந்த பெட்ரோமாக்ஸ்.

    மொத்தத்தில் “பெட்ரோமாக்ஸ்” சிரிப்பு விருந்து.  
    பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, பெண்களை சுதந்திரமாக வளருங்கள் என்று பேட்டியளித்துள்ளார்.
    விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ‘த ஸ்கை இஸ் பிங்க்’ என்ற இந்தி படத்திலும், ஹாலிவுட் படமொன்றிலும் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:-

    ‘பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் பெரிய அளவில் சாதிப்பார்கள். இந்தியில் திறமையான நடிகைகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஹாலிவுட் படங்களிலும் முத்திரை பதிப்பார்கள். நான் அதற்கு உதாரணமாக இருக்கிறேன். எனக்கு சிறுவயதிலேயே பெற்றோர் சுதந்திரம் கொடுத்து வளர்த்தனர்.

    பிரியங்கா சோப்ரா

    எனக்கு பிடித்த பாடத்தை படித்தேன். சினிமாவில் நடிக்கவும் தடை சொல்லவில்லை. அதனால்தான் உயர முடிந்தது. பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். எல்லோரும் என்னை மாதிரி வர முடியாமல் போகலாம். ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சாதிக்க முடியும். அதற்கு பெற்றோர்களும், திருமணமான பெண்களுக்கு கணவன்மார்களும் உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கை பாழாகி விடும் என்ற காலம் மலையேறி விட்டது. சுதந்திரம் கொடுத்தால் எந்த உயரத்துக்கும் அவர்களால் போகமுடியும் என்பதை உலகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது.’’ 

    இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.
    ×