என் மலர்
சினிமா செய்திகள்
மொட்டைமாடியில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியனின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய 'ஜோக்கர்', சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தவருக்கு, இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், இவர் தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இருப்பினும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுபோன்று மேலும் சில புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழ்ப் படங்களில் நடித்த மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை ஹனிரோஸ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். இப்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஹனிரோஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- சினிமாவில் ஒருவரை ஒருவர் அறிந்திருப்போம். நமக்கு எல்லோரையும் தெரியும். நான் ஒரு கதையை தேர்வு செய்தாலும் படத்தில் கமிட் ஆனாலும் முதலில் இயக்குனர் வினயன் சாரிடம் தான் சொல்வேன். அவர் எப்படி வழி காட்டுகிறாரோ அதையே பின்பற்றுகிறேன்.

ஆரம்பத்தில் சில தமிழ்ப் படங்களில் நடித்தேன். அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன்.
மானேஜர்கள் இந்த படத்தில் நடியுங்கள் என்று சொல்வார்கள். இதில் நடித்தால் பெரிய இடத்துக்கு போகலாம் என்பார்கள். அதை நம்பி கமிட் ஆவோம். படம் ஆரம்பித்த பின் தான் அது ஒரு விதத்திலும் உதவாது என்பது தெரியும்.
சிலர் மனரீதியாக துன்புறுத்த தொடங்குவார்கள் அது தாங்கமுடியாததாக இருக்கும். எல்லாவற்றையும் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, அமிதாப் சொன்ன ஒரு ஆலோசனையை மட்டும் பின்பற்ற முடியவில்லை என கூறினார்.
மும்பை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது நண்பரும் திரையுலகில் தனக்கு உத்வேகம் அளிக்கும் நட்சத்திரமுமான அமிதாப் பச்சன் குறித்து மனம் திறந்தார். அவர் பேசியதாவது:-
அமிதாப் பச்சன் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். நாங்கள் இருவரும் ஒரு முறை தமிழ்நாட்டில் இருந்தபோது, 60 வயதுக்குப் பிறகு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். 60 வயதில் 3 விசயங்களைக் கடைப்பிடிக்கும்படி அறிவுரை வழங்கினார்.

1. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், 2. ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக இருங்கள், 3. அரசியலில் நுழையக் கூடாது.
இவற்றையெல்லாம் நான் அமிதாப்பிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவரின் மூன்றாவது ஆலோசனையை என்னால் பின்பற்ற முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அமிதாப் பச்சன் நடித்த படங்களின் ரீமேக்கில் நடிக்க விரும்பினால், எந்த படத்தில் நடிப்பீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமிதாப், தனுஷ் ஆகியோர் நடித்த ஷமிதாப் படத்தை தேர்வு செய்தார் ரஜினி.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் யோகிபாபுவுக்காக ரஜினிகாந்த் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது.

இந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் ஷூட்டிங், சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெற்றனர். யோகிபாபு பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. அவருக்காக காத்திருந்து ஷூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. 'யோகிபாபு வரும்போது ஷூட்டிங்கை வைத்துக்கொள்ளலாம்' என்று ரஜினி சொல்லி இருக்கிறார். ரஜினியின் பெருந்தன்மையை பார்த்து யோகி பாபு வியந்து இருக்கிறார். தர்பார் படம் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தர்பார் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற தர்பார் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர். இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது.
Idhu namma Thalaivar Superstar @rajinikanth in Darbar 🤘🏻🤘🏻🤘🏻
— Anirudh Ravichander (@anirudhofficial) December 16, 2019
Feel the mass 🥳🥳🥳
Pongalo Pongal ku chumma kizhikarrom🥁🥁🥁 https://t.co/2JLvEUmyIL
An @ARMurugadoss sir special 🏆🏆🏆 @LycaProductions@RelianceEnt@santoshsivan#Nayanthara@SunielVShetty@gaana@divomovies
பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் திரைப்படங்களில் ஏராளமான நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமாகினர். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளான பல்லவி, மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது உறவினர் அளித்த புகாரில், “புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி, நேற்றிரவு தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. செல்போனையும் தொடர்புகொள்ள முடியவில்லை. போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும்” என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது புதிய படம் ஒன்றில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
காலா, விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். "களிறு" என்ற படத்தை இயக்கிய ஜி ஜே சத்யா இயக்கும் இந்தப் படத்துக்காக சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், படத்தை பற்றி இயக்குனர் ஜி ஜெ சத்யா கூறியதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப்பட செய்தார் என்றால் மிகை ஆகாது. அந்த மன உறுதியும், திடமும் என் கதையின் நாயகி அவரே என தீர்மானிக்க உதவியது.

அவரை அணுகிய போது சற்றே தயங்கினாலும் பின்னர் முழு மனதுடன் ஒப்புக்கு கொண்டார். நாயகியின் பாத்திர தன்மைக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுப்பட்டு தன் திறமையை மெருகேற்றிக் கொண்டார். இந்த அர்ப்பணிப்பு இவரை மென்மேலும் உயர்த்தும் என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை. விரைவில் மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரங்களையும் வெளியிடுவோம்" என்றார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தன்னை காண வந்த கர்ப்பிணி ரசிகை ஒருவருக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தம்பதிகள் ராகவா விக்னேஷ் - ஜெகதீஸ்வரி. இவர்கள் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களாவர். ஜெகதீஸ்வரி கர்ப்பமாக இருந்து உள்ளார். கர்ப்பமாக இருந்த மனைவியிடம், அவரது ஆசை குறித்து ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

4-வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்கு நேரம் கேட்க ராகவா விக்னேஷ் முயன்றுள்ளார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய படப்பிடிப்பு நடந்து வரும் தளத்துக்கு தம்பதியரை வரவழைத்து சந்தித்துள்ளார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரிக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடியுள்ள பல பாடல்கள் ஹிட்டான நிலையில், தற்போது மீண்டும் ஒரு பாடலை பாடியுள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹீரோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் அர்ஜுன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். இப்பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். சிவகார்த்திகேயன் படத்திற்காக இளையராஜா பாடியுள்ளது இதுவே முதல்முறையாகும். இப்படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி திரைக்கு வருகிறது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி உள்ள தம்பி படம் அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் தம்பி, அக்காள் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் தம்பி. சத்யராஜ், இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து கார்த்தி அளித்த பேட்டி வருமாறு:- “தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. இந்த படம் குடும்ப கதையை மையப்படுத்தி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு உள்ளது. ‘பையா‘ படத்தை போன்று தனித்தன்மையான, வித்தியாசமான கதையாகவும் நடிப்பிற்கு வாய்ப்புள்ள படமாகவும் தம்பி அமைந்துள்ளது.
அண்ணி ஜோதிகா படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும்? என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராக வருவார்.

அவருடைய கலாசாரம் எனக்கு பிடித்திருந்தது. அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் பெரிய உழைப்பு தெரிந்தது. இப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்திற்கு ஒன்றி இருப்பதால், நடிப்பது சுலபமாக இருந்தது.
இப்படத்தின் கதை கோவாவில் ஆரம்பிக்கும். அங்கிருக்கும் மக்களுக்கேற்ப பார்வையை மட்டும் சிறிது மாற்றினோம். அங்கிருந்து கதை மாறும்போது என்னுடைய கதாபாத்திரமும் மாறும். அனைவரும் கொண்டாடக்கூடிய படமாகவும், புது அனுபவமாகவும் இந்த படம் இருக்கும்.” இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.
நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நயன்தாராவும், அவரது காதலன் விக்னேஷ் சிவனும் குமரியில் தங்கியிருந்து அம்மாவட்டத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
இந்தநிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் இருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சென்ற நேரத்தில் ஸ்ரீபலி பூஜைக்காக மூலஸ்தான நடை மூடப்பட்டது. இதையடுத்து நயன்தாராவும், அவரது காதலனும் சுமார் ½ மணி நேரம் காத்திருந்து நடை திறந்த பின்பு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவுடன் செல்பி எடுக்க முயன்றனர். ஆனால், அவருடன் வந்த காவலர்கள் ரசிகர்கள் யாரும் நெருங்காதவாறு தடுத்து இருவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். நயன்தாராவின் வருகையால் கோவில் வளாகத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் ஒன்று, தற்போது சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.
பாபநாசம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல் தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்கள மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்தியில் அஜய்தேவ்கானும், தெலுங்கில் வெங்கடேசும், கன்னடத்தில் ரவிசந்திரனும் நடித்து இருந்தனர்.

தற்போது இந்த படம் சீன மொழியிலும் ‘எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு‘ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வருகிறது.






