search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரம் கோவில்"

    • கவர்னர் ஆர்.என்.ரவி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கு சென்றார்.
    • கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது குடும்பத்தினருடன் நேற்று கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று அவர் பார்வையிட்டார்.

    திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு விவேகானந்தர் மண்டபம் சென்று பார்வையிட்டார். இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி, குடும்பத்தினருடன் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் கோவிலில் உள்ள தட்சிணா மூர்த்தி, கொன்றையடி, நீலகண்ட விநாயகர், மூலஸ்தானத்தில் உள்ள தாணுமாலயன், திருவேங்கட விண்ணகர பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் தரிசனம் செய்தார். குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரெத்தின வேல் பாண்டியன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் கவர்னர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கு சென்றார். அங்கு அவரை கேந்திர துணைத்தலைவர் அனுமந்த ராவ், நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன் ஆகியோர் வரவேற்றனர். கேந்திராவில் உள்ள பாரதமாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை கவர்னர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். அதன் பிறகு 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து விமானத்தில் அவர் சென்னை செல்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    • மாசி திருவிழா 9 நாட்கள் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமா லயன் சுவாமி கோவி லில் மாசி திருவிழா 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 4-ந்தேதி அறம் வளர்த்த அம்மன், பறக்கை காசி விஸ்வநாதர் கோவிலில் கதிர் குளிப்பு நிகழ்ச்சியில் அலங்கார கோலத்தில் ஆசிரமம் கோவிலுக்கு எழுந்தருளு கிறார்.

    அன்று மாலை யில் ஆலய பணியா ளர்கள் அம்மனின் சார்பில் சீர் வரிசைகளை நான்கு ரத வீதிகள் வழி யாக ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மாலையில் அலங்கார கோலத்தில் ஆசிரமம் கோவிலில் இருந்து எழுந்தருளும் அறம் வளர்த்த அம்மன் பக்தர்கள் புடை சூழ, மேள தாளங்கள் முழங்க வாகன பவனி யாக சுசீந்திரம் கோவில் வந்த டைகிறார்.

    திருக்கல்யாணம் தொடர்ந்து அன்று இரவு 7.30 மணிக்கு விஷ்ணு சுவாமி முன்னிலையில் அலங்கார மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் அறம்வளர்த்த அம்மன் கழுத்தில் சிவ பெருமான் மங்கல நாண் பூட்டும் திருக்கல் யாண வைபவம் நடக்கிறது.

    திருக்கல்யாண நிகழ்ச்சி யில் கலந்து கொள் ளும் பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மங் கல கயிறு, தேங்காய், வெற்றிலை, பாக்கு சேர்ந்த தாம்பூலப்பை வழங்கப்படுகிறது. மறுநாள் மாலை 5 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தினமும் மாலையில் கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா இன்று (28-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நேற்று மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை மேளம், தாளம், வெடிமுழக்கத்துடன், முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வந்தனர். சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இன்று (28-ந் தேதி) காலை 9.15 மணிக்கு தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைத்தார். வட்டப் பள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்தார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    9-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஞ்ச நேயர் ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. கணபதி ஹோமம், நீலகண்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தாணுமாலய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் ஜெயந்தி யான இன்று காலை 5 மணிக்கு ராமர் சீதைக்கு சிறப்பு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆஞ்சநேய ருக்கு 1500 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மஞ்சள் பொடி, நெய், இளநீர், நல்லெண்ணெய், பன்னீர், களபம், அரிசி மாவு, விபூதி, தயிர், எலுமிச்சைச்சாறு, குங்குமம், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்களால் ஷோடச அபிஷேகம் நடை பெற்றது. பகல் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை யொட்டி இன்று காலை முதலே சுசீந்திரம் கோவி லில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிக மாக இருந்தது. தரிச னத்திற்கு வந்த பக்தர் களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.

    கோவிலில் கூட்டம் அலைமோதியதையடுத்து இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் கோவில் ரத வீதிகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தரிசனத்திற்கு வந்த பக்தர் கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் விட்டுவிட்டு சென்றனர்.

    பாதுகாப்பு பணி

    நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த அனைத்து வாகனங்களும் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. நாகர் கோவில் மற்றும் கன்னியா குமரியில் இருந்து சுசீந்தி ரம் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட் டது. சுசீந்திரம் பேரூ ராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வசதியாக தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இன்று மாலை 6 மணிக்கு ராமர் சீதைக்கு புஷ்பாபிஷேகமும் 6:30 மணிக்கு பஜனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு 18 அடி உயர ஆஞ்ச நேயர் சுவாமிக்கு புஷ்பா அபிஷேகம் நடைபெறு கிறது. இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபா ராதனை நடை பெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
    • உண்டியல் மாதத்திற்கு ஒருமுைற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மாதத்திற்கு ஒருமுைற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதையொட்டி கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் ராமலெட்சுமி, கோவில் கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.32 ஆயிரத்து 15 வசூலாகி உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    ×