என் மலர்
சினிமா செய்திகள்
ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், மீண்டும் ரஜினியுடன் பணிபுரிய கதையுடன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பீட்சா, ஜிகர்தண்டா படத்தின் மூலம் திரைத்துறையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். அதன் பிறகு, மேயாத மான் மற்றும் மெர்குரி படங்களை தயாரித்துள்ளார். ரஜினியின் பேட்டைப்படத்தை இயக்கி டாப் இயக்குனர்களின் வரிசையில் வந்தார் கார்த்திக் சுப்புராஜ். நண்பர்களுடன் இணைந்து குறும்படம், இணைய தொடர்களை தயாரித்து வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் தற்போது அல்லி எனும் சுயாதீன படத்தை தயாரித்துள்ளார். செக்ஸி துர்கா எனும் மலையாளப்படத்தை இயக்கிய சனல் குமார் அல்லி படத்தை இயக்க உள்ளார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ். புதிய கலைஞர்களின் படைப்பை ஆதரித்ததால் தான், நான் இன்று இயக்குனராக ஆனேன்.

அதனால் தான் நானும் ஸ்டோன் பென்ஞ்ச் மூலம் பல புதிய முயற்சிகளை ஆதரித்து வருகிறேன். அல்லிப்படம் தான் தமிழில் முதன்முறையாக வெளியாகப்போகும் சுயாதீனப்படம் என்று கூறினார். இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது ஆனால் படவிழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் மட்டுமே வெளியாகும் என்றார். இப்படத்தில் பாடல்கள், நகைச்சுவைகள், சண்டைக் காட்சிகள் என்று எந்த ஒரு விசயமும் இருக்காது படம் முழுவதும் மிக எதார்த்தமாக தான் இருக்கும்.
இந்த படம் எடுக்க எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லை என்று கூறினார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு காதலனுடன் ஊரைவிட்டு செல்லும் பெண் வழியில் சந்திக்கும் பிரச்சினையே ’செக்ஸி துர்கா’ படத்தின் கதை, அதை மிகவும் ஆழமாகவும், அழகாகவும் சொல்லி இருப்பார் இயக்குனர் சனல் குமார். அதே போல, அல்லியும் ஒரு பெண்ணின் பயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது தான் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார். தனுசை வைத்து படம் இயக்கி வரும் இவர் அடுத்து மீண்டும் ரஜினியுடன் பணிபுரிய கதையுடன் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
டி.எஸ். திவாகர் இயக்கத்தில் யோகேந்திரா, அக்ஷதா நடிப்பில் உருவாகி இருக்கும் ”லோகா” படத்தின் முன்னோட்டம்.
ஜெ.பி.எஸ்.சினிமேக்ஸ் தயாரிப்பில் டி.எஸ். திவாகர் இயக்கி இருக்கும் படம் "லோகா". யோகேந்திரா, அக்ஷதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க விஷ்மயா விஸ்வநாதன், கிரேன் மனோகர், விஷ்ணு, நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிசைனர் ஸ்ரீதரின் மகன் ஸ்ரீ ஆகாஷ் ஸ்ரீதர் இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
35 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்தவனுக்கு 20 வயது டீன் ஏஜ் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. புது மனைவியை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊருக்கு வருகிறான் அவன். தேன் நிலவை கொண்டாட வந்தவன் ஊரில் அடுத்தடுத்து பிரபல தொழில் அதிபர்கள் மர்மமான கொலை செய்யபடுகின்றனர்.

கொலை செய்தவனை கண்டு பிடிக்க வந்த துப்பறியும் போலீஸ்காரனுக்கு இந்த கொலைகளில் புதுமண ஜோடி ஈடுபட்டிருக்கலாம் என்ற துப்பு கிடைக்கிறது. ஏன்?எதற்கு? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட காவல்துறைக்கு பல அமானுஷ்யமான திகில்லான நிகழ்வுககளை பார்க்கின்றனர்? அதன் பரபரப்பான பல சம்பவங்கள் திரில்லாக இருக்கிறது. அதன் நடந்தது என்ன? கொலைகளை செய்தது யார் என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வருகிறது. அது என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு கிளைமாக்ஸில் பதில் கிடைக்கும் என்கிறார் இயக்குனர்.
ஜேக் காஸ்டன் இயக்கத்தில் டிவைன் ஜான்சன் - காரன் கில்லன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் விமர்சனம்.
ஸ்பென்சர், பிரிட்ஜ், மார்தா, பெதானி ஆகியோர் முந்தைய ஜுமான்ஜி விளையாட்டிற்குப் பிறகு அவரவர் வழியில் சென்று விடுகின்றனர். காதல் தோல்வியில் இருக்கும் ஸ்பென்சர், மீண்டும் ஜுமான்ஜி உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, உடைந்த வீடியோ கேமை சரி செய்து ஜுமான்ஜி உலகத்திற்கு செல்கிறார்.
ஸ்பென்சரை தேடி அவரது நண்பர்களும் ஜுமான்ஜி உலகத்திற்கு செல்கின்றனர். எதிர்பாராத விதமாக ஸ்பென்சரின் தாத்தாவும் இந்த விளையாட்டில் இணைந்து விடுகிறார். இதையடுத்து ஜுமான்ஜி விளையாட்டை விளையாடும் அவர்கள், கடினமான சவால்களை எதிர்கொள்கிறார்கள். இறுதியில் இவர்கள் அனைவரும் சவால்களை எப்படி சமாளித்தார்கள்? டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

2017இல் வெளிவந்த ஜுமான்ஜி வெல்கம் டூ தி ஜங்கிள் படம் நல்ல வரவேற்பைப் வெற்றது. தற்போது இந்த படத்தின் அடுத்த பாகமாக வெளிவந்திருக்கிறது ’ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்’.
டிவைன் ஜான்சன் இந்த படத்தில் வயதானவரின் உடல் மொழியுடன் கூடிய பலசாளியாக நடித்து அசத்தியுள்ளார். இதேபோல் காமெடியிலும் கலக்கி இருக்கிறார். அவர் காட்டும் சீரியஸ் லுக் கூட சிரிப்பை வர வைக்கிறது. கெவின் ஹார்ட் காமெடியில் சிரிக்க வைக்கிறார். காரன் கில்லன், ஜேக் பிளாக், நிக் ஜோனஸ், பாபி கேனவல் என அனைவருமே அவர்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.
கடந்த பாகத்தை ஒப்பிடுகையில் இதில் சாகச காட்சிகள் சற்று குறைவுதான். ஒவ்வொருவரும் உடல் விட்டு உடல் மாறுவதைத் தொடர்ந்து நடக்கும் உரையாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. தமிழ் டப்பிங் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

இயக்குனர் ஜேக் கஸ்டன், சாகச காட்சிகளைப்போல், மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. கியூலா படோஸின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கிறது. ஹென்ரி ஜாக்மேனின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
மொத்தத்தில் ’ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்’ வேற லெவல்.
கையில் மது வைத்திருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகை மாளவிகாவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகை மாளவிகா தமிழில் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே, வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மாளவிகா.
பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

அதாவது பார்ட்டியில் பங்கேற்றுள்ள மாளவிகா கையில் சரக்குடன், தனது தோழியுடன் நெருக்கமாக உள்ளார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா. அவரது இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை திட்டி வருகின்றனர்.
கமல் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சென்னையில், நேற்று நடிகர் கமலை சந்தித்து, ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார்.
ரஜினி நடித்த, தர்பார் பட இசை விழா, சென்னையில் நடந்தது. இதில், பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ‘சிறு வயதில், ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்தபோது, கமல் பட போஸ்டர் மீது சாணியடித்தேன்’ என்றார். இதற்கு, கமல் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தன் பேச்சுக்கு, லாரன்ஸ் விளக்கம் அளித்தபோதிலும், தொடர்ந்து அவர் பேசிய பேச்சுகள், சமூக வலைதளத்தில் வலம் வந்தன.

இந்நிலையில், நடிகர் கமலை, அவரது வீட்டில், நேற்று லாரன்ஸ் சந்தித்து பேசினார். லாரன்ஸ், ‘டுவிட்டரில்’ கூறியுள்ளதாவது: கமல் குறித்த என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. என் பேச்சு, வேண்டுமென்றே தவறாக திரித்து பரப்பப்படுகிறது. இது குறித்து, நான் ஏற்கனவே விளக்கமளித்தேன். தற்போது, கமலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். என் விளக்கத்தை ஏற்ற கமல், என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றி. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கடந்தாண்டு டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்ட சின்மயி, தற்போது ஒரு வருடத்திற்கு பின் தமிழ் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார்.
மீடூ மூலம் பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்ததிலிருந்து சின்மயியைப் பற்றி ராதாரவி விமர்சிப்பதும் அதற்கு சின்மயி பதிலடி கொடுப்பதுமாக இருந்து வந்தது. இதையடுத்து சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் சின்மயி.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு சின்மயி டப்பிங் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒரு எழுச்சி போருக்குப் பிறகு, ஒரு வருடம் மற்றும் சில நாட்களுக்குப் பிறகு - நான் ஒரு தமிழ் திரைப்படத்தில் டப் செய்கிறேன்.

பி எஸ் மித்ரன், டப்பிங் யூனியன் மற்றும் ராதா ரவி ஆகியோருடன் எவ்வாறு பணியாற்றினர் என்பது எனக்குத் தெரியும், மித்ரன் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் என் ஹீரோக்கள்’ என்றும் இரும்புத்திரை படத்தில், நவீனத்தின் அழிவுகளை இவ்வளவு அழகாக இவரைத்தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது என்றும் புகழ்ந்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், அதன் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். நடிகர் சாம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தை வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் மீண்டும் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்-ஷங்கர் கூட்டணியில் 2012-ல் வெளியான நண்பன் படம் பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் அது நேரடி தமிழ் படம் இல்லை. இந்தியில் அமீர்கான் நடித்து வசூல் அள்ளிய 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கி இருந்தனர். இருவரும் புதிய படத்தில் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். இதுவரை அது நடக்கவில்லை.
இந்த நிலையில் ஷங்கரிடம் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, நானும் விஜய்யும் தயார். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் புதிய படத்தில் இணைய தயாராக இருக்கிறோம் என்று கூறினார். ஷங்கரின் பதில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் விஜய்க்கான கதையை ஷங்கர் தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கதையை விஜய்யிடம் சொல்லி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கரும் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இருவரும் பட வேலைகளை முடித்து விட்டு புதிய படத்தில் இணைவது குறித்து முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிப்பில் பாலாஜி வைரமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் பஞ்சராக்ஷ்ரம் படத்தின் முன்னோட்டம்.
பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் பஞ்சராக்ஷ்ரம் படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்', 'சந்திரமௌலி' மற்றும் 'பொது நலம் கருதி' போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக தனக்கு ஒரு நல்ல வரவேற்பை உருவாக்கிய நடிகர் சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் நாயகனாக நடிக்க, கோகுல் (சென்னை டூ சிங்கப்பூர், ஜாக் அண்டு ஜில் புகழ்), அஸ்வின் ஜெரோம் (யானும் தீயவன், நட்பே துணை புகழ்), மது ஷாலினி (அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி), சனா அல்தாஃப் (சென்னை 28 - 2, ஆர்.கே.நகர்) முக்கிய வேடங்களில் நடித்தவர். சீமான், ராஜா மற்றும் ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘பஞ்சராக்ஷரம்’ தலைப்பு குறிப்பிடுவது போல, படம் சுமார் 5 நபர்கள், அதன் கதாபாத்திரங்கள் இயற்கையின் 5 வெவ்வேறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஐதன் (தீ) ஒரு ஆர்வமுள்ள இசைக்கலைஞர், சமீரா (காற்று) ஒரு அறிவுசார் எழுத்தாளர், ஜீவிகா (நீர்) ஒரு உன்னத மனிதாபிமானி, தர்ணா (பூமி) ஒரு ஆர்வமுள்ள பந்தய வீரர் மற்றும் திஷ்யந்த் (வானம்) ஒரு உற்சாகமான ஆராய்ச்சியாளர். இந்த கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானதும் அவர்களுக்குள் நல்ல பிணைப்பு ஏற்படுகின்றது. அவர்கள் ஒன்றாக ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது, ஒரு புத்தகத்திலிருந்து ஒரு விளையாட்டை சமீரா பரிந்துரைக்கும் வரை விஷயங்கள் நன்றாகவே இருக்கிறது. நடைமுறைக்கு மாறாக மற்றும் தற்செயலாக எனத் தொடங்கும் விஷயம் விரைவில் அனைவரையும் நம்பமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு பயங்கரமான கொந்தளிப்பாக மாறுகிறது.
படத்தின் கதைக்களம் மிகவும் விதிவிலக்காகவும் தனித்துவமாகவும் காணப்பட்டாலும், இது இந்திய திரைப்படத் துறையில் முதல் முறையாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட பல வகைகளின் தொகுப்பாகும். இது ஒரு உளவியல் சூப்பர்நேச்சுரல் சாகச த்ரில்லர் திரைப்படமாக இருக்கும். கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 2 ரெட் டிராகன்கள், 2 ஏ.ஆர்.ஆர்.ஐ அலெக்சாஸ், 7 கோ ப்ரோஸ் மற்றும் 2 டி.ஜே.ஐ ட்ரோன்கள் போன்ற பல சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். 'பஞ்சராக்ஷ்ரம்' நேரடி கார் ஃபிளிப் ஸ்டண்ட் இடம்பெறும் முதல் இந்திய திரைப்படமாக இருக்கும். இசைக்கலைஞருடன், சிறப்பாக அமைத்த மேடை விளக்குகளில் குழு லைவ்-இன் கச்சேரியாக ஒரு பாடலை படமாக்கியுள்ளது. 75 வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஒரு பைக் மற்றும் பல கார்களின் துரத்தல்கள் என்று மூச்சடைக்கக்கூடிய அதிரடி காட்சிகளை பெரிய பட்ஜெட்டில் படமாக்கியுள்ளது.
இப்படத்தின் இசை டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் உலகளவில் டிசம்பர் 27, 2019 அன்று வெளியிடப்படும்.
மம்முட்டி, உன்னி முகுந்தன், மாஸ்டர் அச்சுதன், அனு சித்தாரா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாமாங்கம்’ படத்தின் விமர்சனம்.
வல்லவநாட்டை சேர்ந்த சாவேரி இனத்தின் உரிமையையும், ஆட்சியையும் சாமுத்ரி இனத்தை சேர்ந்தவர்கள் பறிக்கிறார்கள். தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமையையும் ஆட்சியையும் மீட்டெடுக்க சாவேரி இனத்து ஆண் பிள்ளைகளை தற்கொலைப் படையாக வளர்க்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாமாங்கம் திருவிழாவில் இந்த பகையை தீர்க்க செல்கிறார் மம்முட்டி. சாமுத்ரி தலைமையை அழிக்கப் போராடி தோல்வியடைகிறார். இதனால் சொந்த ஊர் மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் மம்முட்டி, நாடு திரும்பாமல் தலைமறைவாகிறார்.

அடுத்த முறை நடக்கும் மாமாங்கத்தில் உன்னி முகுந்தன் மற்றும் மாஸ்டர் அச்சுதன் செல்கிறார். அதில் இவர்கள் வெற்றி கண்டார்களா? இல்லையா? மம்முட்டி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் மம்முட்டிக்கு காட்சிகள் குறைவாகவே உள்ளது. அதுபோல் ஆக்ஷன் காட்சிகளும் குறைவு. அறிமுக காட்சியில் பெண்ணைப் போன்று உடலசைவு செய்ய முயற்சி செய்திருக்கிறார். அது அவருக்கு பெரியதாக எடுபடவில்லை.

உன்னி முகுந்தன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாஸ்டர் அச்சுதன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இனியா நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாராவின் நடிப்பு சிறப்பு.
மாமாங்கம் என்பது மன்னர்களின் ஆட்சி காலத்தில் கேரளாவின் மலபார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் பல ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஒரு திருவிழா. இந்த விழாவை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பத்மகுமார். வரலாற்று படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாததுபோல் இருக்கிறது.

மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. ஜெயசந்திரனின் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணியை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மாமாங்கம்’ மிரட்டல் குறைவு.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார், தனது மனைவிக்கு வெங்காய தோடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கரீனா கபூர் உடன் இணைந்து பங்கேற்றுள்ளார்.
நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வு எதிரொலிப்பதால் அந்த நிகழ்ச்சியில் கரீனா கபூருக்கு பரிசாக வெங்காய தோடு வழங்கப்பட்டது. அந்த வெங்காய தோட்டை கரீனா கபூர் பெரிதாக விரும்ப வில்லை.
இதனால் தனது மனைவிக்காக அதை கேட்டு வாங்கி வந்துள்ளார் அக்ஷய். இதுகுறித்து அக்ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டுவிங்கிள் தனது பதிவில், ’எனது கணவர் எனக்காக இந்தப் பரிசை வாங்கி வந்துள்ளார். முதலில் அந்த நிகழ்ச்சியில் கரீனாவுக்கு வழங்கப்பட்ட இந்தக் காதணியை அவர் பெரிதும் விரும்பவில்லை போல. எனக்கு பிடிக்கும் என நினைத்து இதை அக்ஷய் வாங்கி வந்துள்ளார்.
சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் மனதை கவரலாம்” என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் கூட கணவர் அக்ஷய் குமார் தனக்காக செய்த காபியைப் புகைப் படம் எடுத்து வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப் படமும் வைரல் பட்டியலில் இடம்பெற்றது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.
2017ம் ஆண்டே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பலமுறை தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இப்படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#NenjamMarappathillai coming soon. @iam_SJSuryah@selvaraghavan@thisisysr@ReginaCassandra@Nanditasweta@divomovies
— U1 Records (@U1Records) December 14, 2019
▶️ https://t.co/g4lgvlO7RZpic.twitter.com/esT6t9so4G
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.






