என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கே.ஜி.எப். படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எப். சாப்டர் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

    கே.ஜி.எப் 2

    தற்போது கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    பாரி.கே.விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நாயர் நடிப்பில் உருவாக இருக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
    விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து ஆலம்பனா படத்தை தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். 

    மக்களை என்டெர்டெயின்மென்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார். மேலும் காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.

    ஆலம்பனா படக்குழுவினர்

    ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க, வினோத் ராமசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.

    பூஜையில் வைபவ், பார்வதிநாயர், இயக்குநர் பார்.கே விஜய் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார், முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களின் இயக்குநர் ராம்குமார், குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களின் இயக்குநர் கல்யாண் பலூன் படத்தின் இயக்குநர் சினிஸ், டோரா படத்தின் இயக்குநர் தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
    ஒரு படத்திற்காக தலைமுடியை வளர்த்து வெட்டிய சம்பவத்தால் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் மலையாளர் நடிகர் ஷேன் நிகம்.
    மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் சர்ச்சையில் சிக்கி உள்ளார். வெயில் என்ற படத்தில் ஷேன் நிகமுக்கு தலைமுடியை நீளமாக வளர்த்து நடிக்கும் கதாபாத்திரம். ஆனால் படப்பிடிப்பு முடியும் முன்பே தலைமுடியை வெட்டி தோற்றத்தையும் மாற்றியதால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து மலையாள தயாரிப்பாளர் சங்கம் ஷேன் நிகம் சினிமாவில் நடிக்க தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷேன் நிகம் தயாரிப்பாளர்கள் மனநலம் பாதித்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என்று சாடினார். ஷேன் நிகமை தமிழில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

    ஷேன் நிகம்

    விக்ரம் படம் உள்ளிட்ட எந்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஷேன் நிகமை நடிக்க அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மலையாள திரைப்பட வர்த்தக சபை கடிதம் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் ஷேன் நிகம் தான் பேசியதை தவறாக சித்தரித்து விட்டனர் என்று முகநூல் பக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கருத்து பதிவிட்டார்.

    ஆனால் அவரது மன்னிப்பை ஏற்க முடியாது என்று மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடைவேளை பாபு தெரிவித்துள்ளார். ஷேன் நிகம் பிரச்சினை குறித்து வருகிற 22-ந்தேதி நடக்கும் நடிகர் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
    ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் காளிதாஸ் படத்தின் விமர்சனம்.
    போலீஸ் அதிகாரியாக இருக்கும் பரத், தனது மனைவி குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இந்த கேசை பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அடுத்த சில நாட்களில் இதேபோன்று சில பெண்கள் இறந்துபோகின்றனர். இதையடுத்து விசாரணையில் தீவிரம் காட்டும் பரத், இது கொலையா? தற்கொலையா? என ஆராய தொடங்குகிறார்.

    அசிஸ்டண்ட் கமிஷனராக இருக்கும் சுரேஷ் மேனனின் அறிவுறுத்தலின் பேரில் பரத் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய இரவு பகல் பாராது சின்சியராக வேலை பார்க்கும் பரத், குடும்பத்தை சரிவர கவனிக்காமல் விடுகிறார். இதனால் அவருக்கு அவரது மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் பரத், பெண்கள் இறப்பிற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? பரத்தின் திருமண வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.

    காளிதாஸ் படக்குழு

    நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த பரத், காளிதாஸ் படத்தில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அழகு, பதுமையுடன் இருக்கும் நாயகி அன் ஷீத்தல் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

    அசிஸ்டண்ட் கமிஷனராக வரும் சுரேஷ் மேனன் தனது யதார்த்தமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார். ஆதவ் கண்ணதாசன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். விறுவிறுப்பான கதைகளத்தில் போலீஸ் ஏட்டு கதாபாத்திரத்தின் மூலம் ஆங்காங்கே வரும் டைமிங் காமெடிகள் சிரிக்க வைக்கிறது. 

    காளிதாஸ் படக்குழு

    அறிமுக இயக்குனரான ஸ்ரீ செந்தில், முதல் படத்திலேயே அசர வைக்கிறார். எந்த விதத்திலும் படம் பார்ப்பவர்களை யூகிக்க விடாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர், கிளைமாக்ஸில் எதிர்பாரத டுவிஸ்ட் வைத்து அசத்தியிருக்கிறார். 

    விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். சுரேஷ் பாலாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

    மொத்தத்தில் ‘காளிதாஸ்’ விறுவிறுப்பு. 
    சுசீந்திரன் இயக்கத்தில் விஸ்வா, நரேன், மிருனாளினி நடிப்பில் வெளியாகி இருக்கும் சாம்பியன் படத்தின் விமர்சனம்.
    கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் மனோஜ். கவுன்சிலருக்கு அடியாளாக வேலை செய்து வருவதால், தனது மகனையாவது சிறந்த கால் பந்தாட்ட வீரராக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு போட்டியின் போது, மனோஜுக்கு அடிப்பட்டு இறந்து விடுகிறார். இதனால், மனோஜின் மனைவி, நாயகன் விஸ்வாவிடம் இனிமேல் நீ கால்பந்தாட்டம் விளையாட கூடாது என்று கூறி வேற ஏரியாவிற்கு அழைத்து சென்று விடுகிறார்.

    ஆனால், தந்தையின் கனவை நிறைவேற்ற தாய்க்கு தெரியாமல் கால்பந்தாட்டம் விளையாடி வருகிறார் விஸ்வா. நன்றாக விளையாடி சிறந்த வீரராக இருந்து வருகிறார். மனோஜின் நண்பரான நரேனிடம் பயிற்சி பெற்று வரும் நிலையில், தந்தை மனோஜ் விபத்தில் சாகவில்லை என்றும், அது திட்டமிட்ட கொலை என்றும் விஸ்வாவிற்கு தெரிய வருகிறது.

    சாம்பியன் படக்குழு

    இதனால் கோபமடையும் விஸ்வா, கால்பந்தாட்டத்தை மறந்து தன் தந்தையை கொலை செய்தவனை பழி வாங்க நினைக்கிறார். இறுதியில் விஸ்வா, தந்தையை கொன்றவனை பழி வாங்கினாரா? தந்தையின் கனவை நிறைவேற்றினானா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஸ்வா, புதுமுகம் என்று சொல்ல முடியாதளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புட்பால் விளையாடும் போதும் சரி, பழி வாங்க நினைக்கும் போதும் சரி நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருகிறார். இவருடைய குரல் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் மிருனாளினி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    சாம்பியன் படக்குழு

    புட்பால் கோச்சராக மனதில் பதிந்திருக்கிறார் நரேன். தான் பயிற்சி செய்த மாணவன் கெட்ட வழியில் செல்லகூடாது என்று துடிக்கும் இவரது நடிப்புக்கு பெரிய கைத்தட்டல். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருகிறார் மனோஜ். ஒரு தந்தைக்குண்டான கனவை நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார். 

    கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அதில் காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக வேகம் எடுத்திருக்கிறது. 

    சாம்பியன் படக்குழு

    விஸ்வாவிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அரோல் கரோலி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். சுஜித் சாராங்கின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘சாம்பியன்’ கைதட்டல் வாங்குகிறான்.
    நடிகை காஜல் அகர்வால் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    காஜல் அகர்வால் 2004-ல் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இந்த வருடம் அவரது நடிப்பில் வந்த கோமாளி படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இப்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

    பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தணிக்கை குழு கெடுபிடியால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காஜல் அகர்வாலுக்கு இப்போது 34 வயது ஆகிறது. இந்த நிலையில் காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை காஜல் அகர்வாலுக்கு நெருக்கமானவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்துக்கு பிறகு புதிய படங்களுக்கு அவர் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    காஜல் அகர்வால்

    இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் நின்று கைவிரல்களை இதய வடிவத்தில் விரித்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மூலம் தனக்கு திருமணம் ஆகப்போவதை உணர்த்தி உள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
    எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், வைபவி, அதுல்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் கேப்மாரி படத்தின் விமர்சனம்.
    ஐ.டி. ஊழியரான ஜெய் ஊருக்கு செல்லும் போது, ரெயிலில் நாயகி வைபவியை சந்திக்கிறார். இந்த பயணத்தின் போது மது அருந்தும் ஜெய், வைபவியிடம் வேண்டுமா என்று கேட்க, அவரும் வேண்டும் என்று சொல்ல, இருவரும் மது அருந்தி போதையில் தவறு செய்து விடுகிறார்கள். அதன்பின் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள்.

    சில மாதங்களுக்குப் பிறகு சென்னையில் சந்திக்கும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் அதுல்யாவின் வண்டி பஞ்சராக அவரை வீட்டில் கொண்டு விடுகிறார் ஜெய். அப்போது இருவரும் போதையில் தவறு செய்து விடுகிறார்கள்.

    கேப்மாரி படக்குழு

    அதுல்யா கர்ப்பமாக ஜெய் வீட்டுக்கே வந்து விடுகிறார். இதனால், ஜெய் - வைபவி - அதுல்யா இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் ஜெய் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய், இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இரண்டு பெண்களிடம் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கும் காட்சியில் பளிச்சிடுகிறார். நாயகிகளாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, வைபவி இருவரும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போதுள்ள இளைஞர்களுக்கான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். நான் இன்னும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். 

    கேப்மாரி படக்குழு

    சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியது. பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஜீவனின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது படம் மிகவும் கலர்புல்லாக இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘கேப்மாரி’ ரசிக்க வைக்கிறான்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், தோல்வியை கண்டு துவள கூடாது என தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:- “வாழ்க்கையில் தோல்விகள் வந்தால் துவள கூடாது. தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் முதல் படி என்பதை புரிந்து கொண்டால் இன்னும் பல வெற்றிகள் நம்மிடம் கைகுலுக்க வரும். நான் செய்ய வேண்டும் என்று நினைத்த வேலையை தன்னம்பிக்கையோடு ஆரம்பிப்பேன். என் மீது எனக்கு நம்பிக்கை அதிகம்.

    எல்லோருக்கும் இருக்க வேண்டிய அளவு தன்னம்பிக்கை தான் எனக்கும் இருக்கிறது. அந்த தன்னம்பிக்கையோடு தான் எனக்கு கொடுத்த வேலையை நான் ஆரம்பிக்கிறேன். ஆனால் அளவு கடந்த தன்னம்பிக்கை நல்லது இல்லை. நமக்கு என்ன சக்தி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். சில நேரங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தோல்விகள் வந்து கவலையை கொடுக்கும்.

    ரகுல் பிரீத் சிங்

    அதை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதனால் தோல்வி வந்தது. நாம் அதில் என்ன தவறு செய்தோம் என்று யோசித்தால் அதன்பிறகு வரும் வாய்ப்புகளை நன்றாக உபயோகித்துக் கொள்ளலாம். நமக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதை தெரிவிப்பது தோல்விகள்தான். அந்த தோல்விகளில் இருந்து வெளியே வர நமது முழு பலத்தையும் அப்போது தான் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். வாழ்க்கையில் பாடங்கள் கற்றுக்கொள்ள தோல்விகள்தான் சரியான வழி.”

    இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.
    17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய பாக்யராஜ், பழமொழி சொல்லவே பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று கலைவாணர் அரங்கில் துவங்கியது. 19ம் தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவிற்கு, தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது. முதல் படங்களாக, கொரிய படமான 'தி பாரசைட்' மற்றும் ஜெர்மன் படமான 'கண்டர்மான்' படமும் திரையிடப்படுகின்றன. 

    பாக்யராஜ்

    முன்னதாக 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாக்யராஜ் பேசியதாவது:- அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். திரைப்படத்துறைக்கு தமிழக அரசு அதிக நிதியுதவி வழங்கி வருகிறது. 'ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது' என சொல்லி சம்மன் வாங்கியதால் இப்போது பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது என்று கூறினார். விழாவில் முக்கிய நிகழ்வாக தனது 90-வது வயதிலும் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
    பிரபல இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து பேப்பர் பாய் என்ற படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்துள்ளார்.
    சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் தற்போது சசிகுமாரை வைத்து கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி வருகிறார். தற்போது இவர் சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக பழனிராஜன் தயாரிக்கும் ‘பேப்பர் பாய்’ படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்துள்ளார்.

    விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீதர் கோவிந்தராஜ் இப்படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக சுவாதிஷ் ராஜா, நாயகியாக யாமினி பாஸ்கர், முக்கிய கதாபத்திரத்தில் வடிவுக்கரசி, தலைவாசல் விஜய், சுஜாதா, ரேகா, சரவணன், எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன், அக்ஷயா, பாலா, அமுதவாணன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அருணகிரி இசையமைக்க, ஜெகதீஷ் வி.விஸ்வா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். 

    பேப்பர் பாய்

    அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர நாயகிக்கும் உருவாகும் காதல், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் இப்படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். தமிழில் காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை இவ்வரிசையில் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். 

    இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி, கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
    எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரைலரை தனுஷ் வெளியிட இருக்கிறார்.
    ஜிவி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்', 'ஜெயில்', 'அடங்காதே', 'காதலிக்க யாருமில்லை', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் எழில் இயக்கி இருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ஈஷா ரெபா, சாக்‌ஷி அகர்வால், நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இவர்களுடன் சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். 

    தனுஷ்

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் டிரைலரை நடிகர் தனுஷ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    குண்டு படத்தின் நன்றி விழாவில் பேசிய பா.ரஞ்சித், ரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் என்று கூறியிருக்கிறார்.
    நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் கடந்த 6-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியிருந்தார். 

    இப்படத்தின் நன்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், ஸ்ரீகணேஷ், கவிஞர் அறிவுமதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் பா.ரஞ்சித் பேசும்போது, ‘படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை, காலேஜ் படிக்கிற வரைக்கும். நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். “சில்ட்ரென் ஆப் ஹெவன்” போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள் தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளை படமாக பதிவுசெய்யத் தூண்டியது. 

    நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். புத்தகங்கள் வாசிக்கிறது பிரச்சனையாக இருந்த காலத்தில்தான் நான் வந்தேன். தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும் போது ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேர்களுக்கு பிரச்சனை இருந்தது.

    குண்டு படக்குழுவினர்

    அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாத் தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன். மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

    ரஜினி சாரை படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாததுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு” என்று பேசியது நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன்.

    “பரியேறும் பெருமாள்” படம் எடுக்கும் போது பெரிய பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்தார்கள். எனக்கு கைகால்கள் உதறத் துவங்கியது. அந்தப்படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப்படம் கமர்சியலாகவும் பெரிய வெற்றிபெற்றது.

    அந்தப்படம் தான் “குண்டு” படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது. அதியன் உழைப்பு எனக்குத் தெரியும். இந்த டீம் திறமைமிக்க மனிதர்கள். தகுதி திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில் தான் பிரச்சனை இருக்கிறது. இந்தப்படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள். 

    சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு விசயத்தை ஈசியாக கடத்த முடியும் என்றால் அது சினிமாவில் தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும்" என்றார்.

    ×