என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்த சுனைனா, பிரபல நடிகர் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.
சமீபகாலமாக நடிகைகள் தங்களை ஈர்த்த ஆண்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். பரதேசி, பேராண்மை, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாய் தன்சிகா, நடிகர் சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக கூறினார். அவரை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா தனக்கு நடிகர் விஜய் சேதுபதி மீது ஈர்ப்பு என கூறி அதிர வைத்தார்.
இந்நிலையில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சுனைனா ஈர்ப்பு குறித்து தெரிவித்திருப்பது ரசிகர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்தவர் சுனைனா. ட்விட்டரில், ரசிகர் ஒருவர் சினிமாத்துறையில் உங்களின் முதல் ஈர்ப்பு யார்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுனைனா, பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது தான் முதலில் ஈர்ப்பு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கோய் மில் கயா படம் ரிலீஸான போது அந்தப் படம் தனது வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கு வகித்தது என்றும் கூறியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இது என்ன மாயம் படம் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இப்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் அஜய் தேவகன் மனைவியாக, நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை பேசும் சினிமா. இது, எந்த குறிப்பிட்ட மொழி மற்றும் பகுதியைச் சேர்ந்த படம் இல்லை.

ஆனால், உலகம் அறிந்து கொள்ள வேண்டிய படம். சவாலான கேரக்டர்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது' என்று கூறியிருந்தார்.
யூடியூப்பில் மிகவும் பிரபலமான ராஜ்மோகன், பிளாக் ஷீப் குழுவினரை வைத்து மாணவர்களுக்கான படத்தை இயக்க இருக்கிறார்.
யூடியூப்பில் மிகவும் பிரபலமான பிளாக் ஷீப் குழுவினர் 6+1 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதில் முக்கிய அறிவிப்பாக புதிய படம் ஒன்றை அறிவித்தார்கள்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த பிளாக் ஷீப், தற்போது புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வெற்றிகரமான விநியோகஸ்தராக தன் முத்திரையை பதித்த ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிப்பில், பர்ஸ்ட் காபி அடிப்படையில், பிளாக் ஷீப் புரொடக்ஷன்ஸ் மூலம் புதிய படம் தயாரிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்ய இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பிளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க, பிளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இத்திரைப்படம் கோடை விடுமுறையை குறிவைத்து வெள்ளித்திரைக்கு தயாராகிறது.
தமிழில் மேயாதமான், பிகில் படங்கள் மூலம் பிரபலமான நடிகை இந்துஜா, ரஜினி நடிப்பில் வெளியான படத்தை விசிலடித்து பார்த்திருக்கிறார்.
நடிகை இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த நிலையில் இந்துஜா சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியான ரஜினியின் பாட்ஷா படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். முகத்தை மூடிக் கொண்டு ரசிகர்களுடன் ரசிகராக விசில் அடித்து பார்த்துள்ளார்.
பிளாக் ஷீப் குழுவினர் தயாரிக்கும் வலைத் தொடரில் ஐடி ஊழியர்களுக்கு திருக்குறள் சொல்லும் திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கிறார்.
தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
பிளாக் ஷீப் குழு புதிதாக 6 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.
அறிவிப்புகளில் ஒன்று, சிஎஸ்கே அணியில் சுழர்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை DUDE விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது. இந்த வலைத்தொடரின் 10 பகுதிகளை கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தற்போதுள்ள இளைய தலைமுறைகள், குறிப்பாக ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை திருக்குறள் வாயிலாக ஹர்பஜன் சிங், அவரது ஸ்டைலில் சொல்ல இருக்கிறார். இந்த வலைத் தொடருக்கு திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அதுபோல், ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சிதான் ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. 12 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.
இதைத்தவிர, பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள், பிளாக் ஷீப் வேல்யூ, பிளாக் ஷீப் F3 (FACES FOR THE FUTURE), பிளாக் ஷீப் ரீவேம்ப் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினியும்-தனுஷும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இது அவருக்கு 40-வது படமாகும், இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜும், 42 வது படத்தை ராம்குமாரும் இயக்க உள்ளனர். இந்தப் படங்களைத் தொடர்ந்து தனது 43-வது படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க தனுஷ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தைத் தொடர்ந்து, ரஜினி அடுத்ததாக நடிக்கவுள்ள படம் தனுஷின் 43-வது படமாக இருக்கும் எனத் கூறப்படுகிறது. தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகையான ராணி முகர்ஜி, தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார்.
‘ஹேராம்‘ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி. இவர் நடித்த “மர்தானி2” என்ற இந்தி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மும்பையில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமாவுக்கு வந்த புதிதில் தவறாக நடந்து கொண்டவர்களிடம் இருந்து எப்படி உங்களை பாதுகாத்து கொண்டீர்கள் என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ராணி முகர்ஜி, "என்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களை கன்னத்தில் அறைந்துள்ளேன். நான் துர்கா தேவியை பார்த்து வளர்ந்தவள். எனவே குழந்தையாக இருந்தபோதே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது அறைந்திருக்கிறேன். நான் பலரின் கன்னங்களை பழுக்க வைத்திருக்கிறேன். இதற்கான கணக்கு என்னிடம் இல்லை".
இவ்வாறு அவர் கூறினார்.
ரம்யா நம்பீசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரம்யா நம்பீசன். மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரம்யா நம்பீசன் திருமண புடவையில் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது. அதை பார்த்தவர்கள் ரம்யா நம்பீசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல் பரப்பினர். பலர் சமூக வலைத்தளத்தில் திருமண வாழ்த்துகள் கூறினார்கள். செல்போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினர்.
இந்த நிலையில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று ரம்யா நம்பீசன் மறுத்துள்ளார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “உங்களுக்கு எப்போது திருமணம்? கல்யாணம் முடிந்து விட்டதா? என்றெல்லாம் நிறைய பேர் என்னிடம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

நான் திருமண புடவை அணிந்து வெளியான புகைப்படம் பத்ரி வெங்கடேசன் இயக்கும் தமிழ் படத்தில் நடிப்பதற்காக எடுக்கப்பட்டது. எனக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகிவிட்டதாக நான் சொல்லவும் இல்லை.” இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார். இதன்மூலம் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகி இருக்கும் “தபாங் 3” படத்தின் முன்னோட்டம்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” உருவாகியுள்ளது. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார். அர்பாஸ்கான், மாஹி கில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லன் வேடத்தில் ’நான் ஈ’ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.

படம் குறித்து இயக்குனட் பிரபுதேவா கூறியதாவது: இந்தப் படம் செய்ய முடிவான போது என்னை இயக்குவதற்கு அழைத்தார் சல்மான். படம் ஆரம்பிக்கும்போதே இதை நான்கு மொழிகளிலும் செய்யலாம் என்று சொல்லிவிட்டார். அப்போது முதலே அதற்காக உழைத்தோம். இது அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் கதை, எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.
தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தனக்கு திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மும்பையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார். இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினி, தனக்கு போலீஸ் வேடத்தில் நடிக்க பிடிக்காது என்று கூறினார்.

தாங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது என கேட்டதற்கு, தனக்கு திருநங்கையாக நடிக்க ஆசை என கூறிய ரஜினி, தர்பார் படத்தில் இடம்பெறும் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரம், மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கும் தனுஷின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினியின் பேட்ட படத்தை இயக்கி வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் 3 படப்பிடிப்பு லண்டனை களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து 70 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் எஞ்சியுள்ள காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்கான படப்பிடிப்பு சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக தனுஷ் புது லுக்கில் நடித்து வருகிறார். தேவர்மகன் கமல் போன்ற தோற்றத்தில் இருக்கும் தனுஷின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள விஜய்யை காண ரசிகர்கள் தினந்தோறும் குவிந்து வருகின்றனர்.
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இதற்காக விஜய் அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
விஜய்யை காண தினமும் ஓட்டல் முன்பும் சிறைச்சாலை எதிரிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மணிக்கணக்கில் காத்து நிற்கிறார்கள். அவர்களை சந்திக்க விஜய் நேரம் ஒதுக்குகிறார். படப்பிடிப்புக்கு புறப்பட்டு செல்லும்போது சில நிமிடங்கள் வெளியே கூடி நிற்கும் ரசிகர்களை பார்த்து கையசைக்கிறார்.

அதுபோல் படப்பிடிப்பு முடிந்து ஒட்டலுக்கு திரும்பும்போது சிறைச்சாலை எதிரில் நிற்கும் ரசிகர்களை பார்த்தும் சில நிமிடங்கள் கையசைக்கிறார். கர்நாடகாவிலும் விஜய்க்கு ஏராளமாக ரசிகர்கள் திரள்வது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ரசிகர்களை பார்த்து கையசைக்கும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.






