என் மலர்
சினிமா

ராஜ்மோகன்
மாணவர்களுக்கான படத்தை இயக்கும் ராஜ்மோகன்
யூடியூப்பில் மிகவும் பிரபலமான ராஜ்மோகன், பிளாக் ஷீப் குழுவினரை வைத்து மாணவர்களுக்கான படத்தை இயக்க இருக்கிறார்.
யூடியூப்பில் மிகவும் பிரபலமான பிளாக் ஷீப் குழுவினர் 6+1 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதில் முக்கிய அறிவிப்பாக புதிய படம் ஒன்றை அறிவித்தார்கள்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த பிளாக் ஷீப், தற்போது புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வெற்றிகரமான விநியோகஸ்தராக தன் முத்திரையை பதித்த ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிப்பில், பர்ஸ்ட் காபி அடிப்படையில், பிளாக் ஷீப் புரொடக்ஷன்ஸ் மூலம் புதிய படம் தயாரிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்ய இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பிளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க, பிளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இத்திரைப்படம் கோடை விடுமுறையை குறிவைத்து வெள்ளித்திரைக்கு தயாராகிறது.
Next Story






