என் மலர்
சினிமா செய்திகள்
இந்தியாவின் செல்வாக்குமிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல், தனுஷ் உள்பட 8 தமிழக பிரபலங்கள் இடம்பிடித்து உள்ளனர்.
அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ் திரைப்பிரபலங்களான ரஜினி, விஜய், அஜித், கமல்ஹாசன், தனுஷ், சிறுத்தை சிவா, ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த பட்டியலில் ரஜினி 13-வது இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் 16-வது இடத்திலும், விஜய் 47-வது இடத்திலும், அஜித் 52-வது இடத்திலும், ஷங்கர் 55-வது இடத்திலும், கமல்ஹாசன் 56-வது இடத்திலும், தனுஷ் 64-வது இடத்திலும், சிறுத்தை சிவா 80-வது இடத்திலும் உள்ளனர். கடந்த முறை தென்னிந்தியாவில் 15 நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை 13 பேர் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஹீரோ படத்தின் விமர்சனம்.
நாயகன் சிவகார்த்திகேயன், சிறுவயதில் சக்திமான் போன்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை பார்த்துவிட்டு, எதிர்காலத்தில் தானும் ஒரு சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். தன்னை சக்திமான் காப்பாற்றுவார் என நினைத்து விபரீத முடிவு ஒன்றை எடுக்கிறார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவரிடம், சூப்பர் ஹீரோ என்பது கற்பனை தான், நம்ம பிரச்சனையை நாம தான் பாத்துக்கணும் என அவரது தந்தை அட்வைஸ் பண்ணி புரிய வைக்கிறார்.
சிவகார்த்திகேயன், பெரியவன் ஆனதும் பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நடத்துகிறார். அதில் போலி சான்றிதழ்கள் அடித்து கொடுத்து சம்பாதித்து வருகிறார். இவரின் பகுதியில் வசித்து வரும் இவானா எனும் இளம்பெண், அர்ஜுன் மறைமுகமாக நடத்தி வரும் பள்ளியில் படிக்கிறார்.

திறமை இருந்தும் பெயில் ஆன மாணவர்களை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வருவதே அர்ஜுனின் நோக்கம். அந்த வகையில் இவானா, ஏரோநாட்டிக்கல் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரின் ஆசையை அர்ஜுனுக்கு தெரியாமல் சிவகார்த்திகேயன் நிறைவேற்றி விடுகிறார்.
இவானாவின் கண்டுபிடிப்பு வெளியுலகிற்கு தெரிய வந்தால் அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வில்லன் அபி தியோல், சில சூழ்ச்சி வேலைகள் செய்கிறார். இதனால் மனமுடையும் இவானா தற்கொலை செய்து கொள்கிறார். இதுபோன்ற செயல்களை தடுக்க ஒரு ஹீரோ வேண்டும் என அர்ஜுன் சிவகார்த்திகேயனிடம் கூறுகிறார். இதன் பின்னர் சூப்பர் ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன் என்ன செய்கிறார்? அர்ஜுன் மறைந்து வாழ்வது ஏன்? என்பதே மீதிக்கதை.

நாயகன் சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டே போகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் சூப்பர் ஹீரோவாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் காதல், காமெடி, இரண்டாம் பாதியில் ஆக்ஷன் என அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளார். நாயகிக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
படத்தின் மற்றொரு நாயகன் அர்ஜுன் தான், தனது அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார். அபி தியோல் தனது வில்லத்தனதால் மிரள வைக்கிறார். மேலும் இவானா, ரோபோ சங்கர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளனர்.
பலர் இயக்குனர்கள் எடுக்க தயங்கும் சூப்பர் ஹீரோ கதையை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் சிறப்பாக கையாண்டுள்ளார். நம் நாட்டின் கல்விமுறை வேலையாட்களை தான் உருவாக்குகிறதே தவிர அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்குவது இல்லை. குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர், அவர்களது திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லிய விதம் சிறப்பு. வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.

சிவகார்த்திகேயன், அர்ஜுன் மற்றும் வில்லன் அபிதியோல் ஆகியோர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் கைதட்டல் அள்ளுகின்றன. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
மொத்தத்தில் ’ஹீரோ’ சூப்பர் ஹீரோவாக மிளிர்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள மாநாடு படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடித்து கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் வெளியாகின. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் அவர் நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கிய பிறகு திடீரென்று படம் நின்று போனது.
சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறினர். வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது.

இதற்கான உறுதிமொழி பத்திரத்திலும் சிம்பு கையெழுத்திட்டு கொடுத்தார். இதையடுத்து மாநாடு பட வேலைகள் தொடங்கி உள்ளன. கதாநாயகியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார்.
மாநாடு படத்தில் நடிக்க டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். வில்லன் வேடத்தில் நடிக்க சுதீப்பிடம் பேசி வருகிறார்கள். மேலும் சில நடிகர் நடிகைகளும் நடிக்க உள்ளனர். படத்தில் நடிப்பவர்கள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
நடிகை அஞ்சலியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் தொடர்ந்து பரவி வந்த நிலையில், நடிகர் ஜெய் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜோடியாக நடித்த காலத்தில் இருந்தே இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் உள்ளன. நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவது, சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிடுவது, மகளிர் மட்டும் படத்துக்காக நடந்த தோசை சுடும் போட்டியில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது என்று காதலை உறுதிப்படுத்துவதுபோல் நடந்து கொண்டனர்.
ஜெய்யும், அஞ்சலியும் கொடைக்கானல் படப்பிடிப்பில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் பேசப்பட்டது. ஜெய் ஒரு பேட்டியில் “அஞ்சலிக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்து இருக்கிறது” என்றார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள கேப்மாரி படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள நிலையில், காதல் கிசுகிசுக்களுக்கு ஜெய் மீண்டும் விளக்கம் அளித்து கூறியதாவது:- “என்னையும் அஞ்சலியையும் இணைத்து அடிக்கடி செய்திகள் வருகின்றன. திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம். எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அதை மறைக்க மாட்டேன். அஞ்சலியை நான் காதலிக்கவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை.”
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தலைவர் 168’ படத்தில் கபாலி படத்தில் நடித்த நடிகர் இணைந்திருக்கிறார்.
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களுடன் கபாலி படத்தில் நடித்த விஸ்வாந்தும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளுத்துக்கட்டு படம் மூலம் நடிகராக அறிமுகமான விஸ்வாந்த் தொடர்ந்து ’தடையறத் தாக்க’, ’அட்டக்கத்தி’, ’தோனி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் விஸ்வநாத் நடித்த ’கபாலி’ திரைப்படம் அவருக்கு புகழை பெற்றுத் தந்தது.
அவனே ஸ்ரீ மன் நாராயணன் படத்தில் நடித்திருக்கும் ரக்ஷித் ஷெட்டி, ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக கூறியிருக்கிறார்.
கன்னட சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் "அவனே ஸ்ரீ மன் நாராயணா'. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம், தமிழில் "அவனே ஸ்ரீமன் நாராயணா' என்ற பெயரிலேயே வெளியாகிறது.
கன்னடத்தில் வேகமாக வளர்ந்து வரும் ரக்ஷித் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தனது நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற கிரிக் பார்ட்டி படத்துக்கு கதை எழுதிய கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டியே "அவனே ஸ்ரீமன் நாராயணா' படத்துக்கும் கதை எழுதியுள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் சச்சின் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் நிகழ்ச்சிக்காக சென்னை வந்த ரக்ஷித் ஷெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’அமராவதி என்னும் கற்பனை ஊரில் 1980-களில் நடப்பது போல் சுவாரசியமான கதை. காமெடி, ஆக்ஷன், காதல் எல்லாமே கலந்து இருக்கும். கன்னட சினிமா வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம். 198 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் படங்கள் மிகவும் பிடிக்கும். நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க என்னஈ அணுகினார்கள். ஆனால் இந்த பட வேலைகளில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.
கார்த்தியுடன் தம்பி படத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தம்பி. இப்படம் குறித்து ஜோதிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சூர்யா, கார்த்தி யாருடன் நடிப்பது கஷ்டம்?
சூர்யாவுடன் நடிப்பது தான் கஷ்டம். கார்த்தியுடன் நடிப்பது எளிது. சூர்யாவுடன் நடிக்கும்போது அடிக்கடி செல்ல சண்டைகள் வரும்.
சூர்யா ஏதும் டிப்ஸ் கொடுப்பாரா?
அப்படி எதுவும் எனக்கோ, கார்த்திக்கோ கொடுத்தது இல்லை.

எப்படி கதைகள் தேர்வு செய்கிறீர்கள்?
எனக்கு நடிக்க வாய்ப்பு இருக்கும் கதைகளாக தேர்வு செய்கிறேன். பழைய குறும்பு நடிப்புகளை குறைத்துக்கொள்கிறேன். எனக்கும் வயதாகிறது எல்லவா?
தம்பி தயாரிப்பில் நடித்த அனுபவம்?
17 வயதிலேயே நடிக்க வந்து அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் செட்டிலாகி விட்டேன். இந்த படத்தின்போது தான் தம்பியுடன் அதிக நேரம் செலவழித்தேன். நிறைய பேசினோம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தன்னுடைய குடும்ப விழாக்களை புறக்கணித்து வருவதால் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நடிகர் நாகார்ஜுனாவின் வீட்டு மருமகளாக மாறிய சமந்தா, திருமணத்திற்குப் பின்பும் நடித்து வருகிறார். சமீபத்தில் அக்கினேனி தேசிய விருது விழா நடைபெற்றது. நாகார்ஜுனாவின் குடும்ப விழாவான இதில் சமந்தாவை தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். அப்போதே சமந்தா இந்த நிகழ்ச்சிக்கு வராதது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால், 'தி பேமிலி மேன்' படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதை தொடர்ந்து நாகார்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவிலும் சமந்தா மட்டும் கலந்து கொள்ளாதது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிகப்பெரிய குடும்பத்து மருமகளான சமந்தா, தனது குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்வதை தவிர்த்து ஏன் இப்படி செய்கிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் பலரின் மனதிலும் எழுந்துள்ளது. குறிப்பாக கணவன் நாகசைதன்யா இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது சமந்தா மட்டும் கலந்து கொள்ளாதது, திட்டமிட்டே குடும்ப விழாக்களை சமந்தா தவிர்க்கிறாரா என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தில் குடியுரிமை விவகாரம் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து உருவாகும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தின் மூலம் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் நாயகியாக மேகா ஆகாஷ், வில்லனாக மகிழ் திருமேனி நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ரகு ஆதித்யா, விவேக், மோகன் ராஜா, கனிகா, ரித்விகா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடித்து வரும் இந்த படம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கியது. கமர்சியல் படமாக உருவாகும் இதில் ஒரு சர்வதேச அளவிலான பிரச்சினையைப் பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்த படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் இந்த படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். சமீபகாலமாக நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் குடியுரிமை பிரச்சினை தான் படத்தில் பேசப்பட்டுள்ள விவகாரம் என்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்சேதுபதியின் பிறந்தநாள் அன்று வெளியாக இருக்கிறது.
விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து மிகவும் பிரபலமான ராஷ்மிகா, பிரபல நடிகருடன் நடனமாட மிகவும் சிரமப்பட்டேன் என்று கூறியிருக்கிறார்.
விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்த கன்னட நடிகை ராஷ்மிகா, அதையடுத்து மகேஷ்பாபுவுடன் சாரிலேரு நீகேவரு என்ற படத்தில் நடித்துள்ளார். கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
மகேஷ்பாபுவுடன் நடித்த அனுபவம் பற்றி ராஷ்மிகா அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘மகேஷ்பாபு ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார். இந்த படத்தில் நடிக்கும்போது அவர் எனக்கு உத்வேகம் கொடுத்தார். அவருடன் நடனமாடும்போது நான் நிறைய சிரமப்பட்டேன்.

அவரது வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதால் ஒவ்வொரு முறையும் நடனத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டுதான் நடனமாடினேன். சினிமாவில் எனது கேரியரை தொடங்கிய போதே மகேஷ்பாபுவுடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் துணை நடிகர்-நடிகைகள், பெப்சி தொழிலாளர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் அஜித் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. தற்போது அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஜித்துக்கும் வில்லன்களுக்கும் நடக்கும் மோதல் காட்சிகளை வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்குகின்றனர்.

இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதை போனிகபூர் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பதை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. இலியானா, யாமிகவுதம், ரகுல்பிரீத் சிங் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. அஜித் தோற்றம் மற்றும் படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க துணை நடிகர்-நடிகைகளும், பெப்சி தொழிலாளர்களும் படப்பிடிப்பு அரங்குக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ரைசா, செல்பி மோகத்தால் காயமடைந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதற்காக படுத்துக்கொண்டு செல்பி எடுக்க முயன்றபோது, போன் அவரின் வாய் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதையும் புகைப்படம் எடுத்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.






