search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கணவருடன் சமந்தா
    X
    கணவருடன் சமந்தா

    கணவருடன் மனக்கசப்பா? - குடும்ப விழாக்களை புறக்கணிக்கும் சமந்தா

    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தன்னுடைய குடும்ப விழாக்களை புறக்கணித்து வருவதால் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நடிகர் நாகார்ஜுனாவின் வீட்டு மருமகளாக மாறிய சமந்தா, திருமணத்திற்குப் பின்பும் நடித்து வருகிறார். சமீபத்தில் அக்கினேனி தேசிய விருது விழா நடைபெற்றது. நாகார்ஜுனாவின் குடும்ப விழாவான இதில் சமந்தாவை தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். அப்போதே சமந்தா இந்த நிகழ்ச்சிக்கு வராதது சலசலப்பை ஏற்படுத்தியது.

    ஆனால், 'தி பேமிலி மேன்' படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதை தொடர்ந்து நாகார்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவிலும் சமந்தா மட்டும் கலந்து கொள்ளாதது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    சமந்தா

    மிகப்பெரிய குடும்பத்து மருமகளான சமந்தா, தனது குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்வதை தவிர்த்து ஏன் இப்படி செய்கிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் பலரின் மனதிலும் எழுந்துள்ளது. குறிப்பாக கணவன் நாகசைதன்யா இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது சமந்தா மட்டும் கலந்து கொள்ளாதது, திட்டமிட்டே குடும்ப விழாக்களை சமந்தா தவிர்க்கிறாரா என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×