search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினி - ரக்‌ஷித் ஷெட்டி
    X
    ரஜினி - ரக்‌ஷித் ஷெட்டி

    ரஜினியுடன் நடிக்க காத்திருக்கிறேன் - ரக்‌ஷித் ஷெட்டி

    அவனே ஸ்ரீ மன் நாராயணன் படத்தில் நடித்திருக்கும் ரக்‌ஷித் ஷெட்டி, ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக கூறியிருக்கிறார்.
    கன்னட சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் "அவனே ஸ்ரீ மன் நாராயணா'. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம், தமிழில் "அவனே ஸ்ரீமன் நாராயணா' என்ற பெயரிலேயே வெளியாகிறது. 

    கன்னடத்தில் வேகமாக வளர்ந்து வரும் ரக்‌ஷித் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தனது நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற கிரிக் பார்ட்டி படத்துக்கு கதை எழுதிய கதாநாயகன் ரக்‌ஷித் ஷெட்டியே "அவனே ஸ்ரீமன் நாராயணா' படத்துக்கும் கதை எழுதியுள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் சச்சின் இயக்கியுள்ளார்.

    ரக்‌ஷித் ஷெட்டி 

    இந்த படத்தின் நிகழ்ச்சிக்காக சென்னை வந்த ரக்‌ஷித் ஷெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’அமராவதி என்னும் கற்பனை ஊரில் 1980-களில் நடப்பது போல் சுவாரசியமான கதை. காமெடி, ஆக்‌ஷன், காதல் எல்லாமே கலந்து இருக்கும். கன்னட சினிமா வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம். 198 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

    தமிழ் படங்கள் மிகவும் பிடிக்கும். நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க என்னஈ அணுகினார்கள். ஆனால் இந்த பட வேலைகளில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×