என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. 

    விக்ரம்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கோப்ரா திரைப்படம் ரமலான் பண்டிகையை ஒட்டி வருகிற மே மாதம் 21-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    மணிரத்னம்

    ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பாண்டிச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் ஜெயம் ரவி நடிக்கும் காட்சிகள் 6 நாட்கள் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். 
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியர், தனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    மலையாளத்தில் 1995–ல் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சுவாரியர் 50–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் குடும்ப பிரச்சினையால் திலீப்பை விவாகரத்து செய்து 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

    மஞ்சுவாரியரின் ஹவ் ஓல்டு ஆர் யூ தமிழில் ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே என்ற பெயரில் வெளியானது. தனுஷ் ஜோடியாக அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடிக்க மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை மம்முட்டியுடன் இணைந்து அவர் நடிக்கவில்லை. திலீப்புடன் உள்ள நெருக்கம் காரணமாக மஞ்சுவாரியர் தனது படங்களில் நடிப்பதை மம்முட்டியும் விரும்பவில்லை. தற்போது முதல் முறையாக மம்முட்டி படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார். 

    இந்த படத்தை ஜோபின் டி சாக்கோ டைரக்டு செய்கிறார். படத்துக்கு ‘தி பிரீஸ்ட்’ என்று பெயர் வைத்துள்ளனர். திகில் படமாக தயாராகிறது. படப்பிடிப்பில் மம்முட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ‘‘எனது கனவு நனவாகிறது. நன்றி மம்முட்டி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    சிவா - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    ரஜினியின் தர்பார் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. தற்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிக்கு 168–வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக  தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    குஷ்புவும், மீனாவும் ரஜினிகாந்த் மனைவிகளாக வருகிறார்கள் என்றும் முதல் மனைவியான குஷ்புவை பிரிந்து மீனாவை 2–வது திருமணம் செய்து கொள்வதால் ரஜினியை பழிவாங்க குஷ்பு முயற்சிப்பதுபோல் அவரது கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. 

    நயன்தாரா

    இந்த படத்தில் நயன்தாராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. படத்தில் அவர் வக்கீலாக நடிக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுவரை நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. 

    சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். முந்தைய தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.
    பிரபல ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன், காதலித்து திருமணம் செய்த 5வது கணவரை விவகாரத்து செய்திருக்கிறார்.
    பிரபல ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். இவருக்கு வயது 52. பாடகர்கள் டாம்மி லீ, கிட் ராக், ‘போக்கர்’ விளையாட்டு வீரர் ரிக் சாலமன் ஆகியோரை திருமணம் செய்து, விவாகரத்து செய்தவர்.

    12 நாட்களுக்கு முன்னர் பிரபல ஆலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது ஐந்தாவது திருமணம். ஏற்கனவே நான்கு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள்.

    30 வருடங்களுக்கும் மேலாக காதலித்துவந்த இருவரும் கடந்த ஜனவரி 20-ந்தேதி அன்று, மலிபுவில் திருமணம் செய்து கொண்டார்கள். மலிபு நகரில், தனிப்பட்ட முறையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    ஜான் பீட்டர் - பமீலா ஆண்டர்சன்

    திருமணம் ஆகி, இரண்டு வாரங்களே ஆன நிலையில், இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பமீலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருமண உறவில் நமக்கு என்ன வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவர் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை பரிசீலிக்க சில காலமாகும். ஆகையால், நாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் பெயரை வெளியிட்டிருக்கிறார்கள்.
    சிம்பு நடிப்பில் தற்போது ‘மஹா’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் அறிவித்தனர். 

    சிம்புவின் கதாபாத்திர பெயர்

    இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் பெயர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
    கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் இணைந்து நடிக்க இருக்கிறார்.
    கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.

    இந்த படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங். அடுத்ததாக ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

    லாஸ்லியா

    இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக வந்த செய்திக்கு காமெடி நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.
    காமெடி நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்தவர் போண்டா மணி. நடிகனாக ஆக வேண்டும் என்று இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்தவர். இவர் இதுவரை 190-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். 

    உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சென்னையில் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முதல் செய்தி பரவியது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    போண்டா மணி

    நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவலை பரப்பியுள்ளனர். இது முற்றிலும் வதந்தி. நான் நலமாக உள்ளேன். படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்து வருகிறேன். என்னைப் பற்றி தவறாக வரும் பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ஆக்‌ஷன், அப்பா - மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. 

    இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்து ஆந்திரா மாநிலத்தில் மாஸ் காண்பித்தது. நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகராக இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வந்ததாக செய்திகள் வெளியானது. 

    கைதி படத்தில் கார்த்தி

    இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியில் ரிலைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
    தமிழ்நாட்டை நடிகர் ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
    சென்னை:

    தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது:-

    அசாமை ஒரு அசாமியர் ஆளுவதைப்போல் மராட்டியத்தை மராட்டியர் ஆள்வதுபோல், கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல், கேரளாவை ஒரு கேரளக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும்.

    தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்கமுடியாதோ அது போல் தமிழகத்தை ரஜினிகாந்த் ஆள்வதை ஏற்க முடியாது.

    தான் தமிழன் தான் என ரஜினிகாந்த் சொன்னாலும். அவர் வாழ வந்தவர் என கூறினார்.
    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் தலைப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார்.
    ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

    அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு தற்போது ‘அயலான்’ என்று பெயர் வைத்து மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார்.


    இது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்த அமலாபால் போல், தற்போது பிரபல நடிகை ஒருவர் ஆடையில்லாமல் நடித்திருக்கிறார்.
    அமலாபால் நடிப்பில் வெளியான படம் ஆடை. இதில் அவர் ஆடை இல்லாமல் மிக தைரியமாக நடித்ததால் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் அவருக்கு பாராட்டுகளும் குவிந்தது. தற்போது இவரைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் ஆடையில்லாமல் நடித்திருக்கிறார்.

    ஐஸ்வர்யா தத்தா

    ஐஸ்வர்யா தத்தா தற்போது ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் ஆடையில்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தை தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார்.
    ×