என் மலர்
சினிமா

கைதி படத்தில் கார்த்தி
இந்தியில் ரீமேக்காகும் கைதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ஆக்ஷன், அப்பா - மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்து ஆந்திரா மாநிலத்தில் மாஸ் காண்பித்தது. நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகராக இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வந்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியில் ரிலைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
Next Story






