என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்று வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது ஹாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷுடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள். சர்வதேச தரத்தில் இருக்கும் இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films), நாசிக் ராவ் மீடியா (Nasik Rav Media) மற்றும் கிங்டம் ஓவர் ஏவரிதிங் (Kingdom Over Everything - KOE) என மூன்று சிறந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இப்படத்தில், ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன் (Percy Jackson) மற்றும் பிக் மாமா ஹவுஸ் (Big Momma House) போன்ற பிரபலமான ஆங்கில படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சனும் (Brandon T Jackson) நடித்துள்ளார்கள். ரிக்கி பற்செல் (Ricky Burchell) இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 

    படக்குழுவினருடன் ஜி.வி.பிரகாஷ்

    ஏழ்மையில் வாடும் ஒரு ராப் (Rap) பாடகனின் கதைதான் ட்ராப் சிட்டி. இந்த பாடகன், வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான். வேலைக்கு சேர்ந்தபின், அவன் எழுதிய ஒரு பாடல் உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால், துரதிஸ்டவசமாக, அவன் பாடல் பிரபலமாகும் போது அவன் கைது செய்யப்படுகிறான். அவன் குற்றத்தின் நிமித்தம் அவன் புகழும் பரவுகிறது. இப்படி இருக்க, அவனை கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்த பாடகன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

    இந்த சுவாரசியமான கதை அமெரிக்காவில் உள்ள நேஷவில் (Nashville) என்னுமிடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள். ட்ராப் சிட்டி இந்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் சதீஷ், தற்போது புதிய படத்தின் மூலம் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.
    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தமிழ்ப்படம் மூலம் ரசிகர்களை ஈர்த்த சதீஷ், தனது காமெடியால் தமிழ் சினிமாவில் பலரையும் கவனிக்க வைத்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் மட்டுமில்லாமல் இளம் ஹீரோக்களுடன் இணைந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

    தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்திலும் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    இந்நிலையில் ராஜவம்சம் படத்திற்காக சாம்.சி.எஸ் இசையில் ஒரு பாடலை பாடி இருப்பதுபோல் சதீஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் சதீஷ் பாடுவதை கேட்டு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தலையில் அடித்து கொள்வது போன்ற அப்புகைப்படத்தை பதிவிட்டு, for your information என்று ஏ.ஆர்.ரகுமான், ஜிவிபிரகாஷ், அனிருத், தமன், இமான், விஜய் ஆண்டனி, தேவிஶ்ரீபிரசாத், சியான் ரோல்டன் என அனைத்து இசையமைப்பாளர்களையும் டேக் செய்துள்ளார். 
    மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் நடித்திருந்த நித்யா மேனன், கெட்ட வார்த்தைகள் பேச தயங்கினேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சைக்கோ. டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் இப்படத்தை தயாரித்திருந்தார். 

    இப்படம் குறித்து நித்யா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படம் என்றாலே பிடிக்கும். காசை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது எனக்கு பிடிக்கும். மிஷ்கின் போன்ற இயக்குநர்களின் கதையில் நடிப்பது நடிப்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

    நித்யா மேனன் - மிஷ்கின்

    படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்ததுதான் என்றாலும் சில கெட்ட வார்த்தைகளை பேச வேண்டியிருந்தது. அவற்றை என் வாழ்க்கையில் நான் பேசியதே இல்லை. பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே பேசியிருந்தேன். பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. மிஷ்கின் என்னை அவர் குழந்தைபோல பார்த்துக் கொண்டார். பாப்பா என்றுதான் அழைப்பார்” என்றார்.
    ஓ மை கடவுளே படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், காதல் கதைகள் எதுவும் தற்போது வருவதில்லை என்று கூறியிருகிறார்.
    அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

    இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறும்போது, ‘ஓ மை கடவுளே’ என் வாழ்வில் முக்கியமான படம். பல வருடமாக இயக்குனர் அஷ்வத்தை எனக்கு தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம். தமிழில் ரொமான்ஸ் கதைகள் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால காதல் கதை பண்ணலாம்னு முடிவு செய்து இப்படத்தை உருவாக்கினோம். 

    படத்தில் நாயகி ரோல் முக்கியமானது. ரித்திகா சிங் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இரண்டு பேரும் நினைத்தோம். அவங்க தேர்ந்தெடுத்து படங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால ஒத்துக்குவாங்களானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் கதை கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சது. படமே அவங்கள சுத்திதான் நடக்கும். 

    அசோக் செல்வன் - ரித்திகா சிங்

    ரித்திகா மிக நட்பாக இருந்தார். அது நடிக்கும் போது எனக்கு உதவியாக இருந்தது. வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவங்களுக்கு இது தமிழ்ல முதல் படம். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடித்திருக்கிறார்.

    எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர் கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு, எல்லாருக்கும் பிடிக்கும்’ என்றார்.
    துருவங்கள் 16 படத்திற்குப் பிறகு மாஃபியா படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் நரேன், அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும் என்று கூறியிருக்கிறார்.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. இதில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படம் குறித்து கார்த்திக் நரேன் கூறும்போது, ‘மாஃபியா - பாகம் 1’ என்னோட 3 வது படம். போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன். அவருக்கு அந்தளவு திறமை இருக்கிறது. இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப்படத்தின் மையக்கதை.

    கார்த்திக் நரேன் - அருண் விஜய் - பிரசன்னா

    பிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவங்களை தேர்ந்தெடுத்தோம். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

    இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பிப்ரவரி 5ம் தேதி இந்தப்படத்தின் முதல் பாடல் வெளியிட இருக்கிறோம். முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம் மூன்று நாட்கள் மட்டும் தாய்லாந்தில் எடுத்திருக்கிறோம். பட வேலைகள் மொத்தமாக முடிந்து விட்டது வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார்.
    விஜய சேகரன் இயக்கத்தில் நபிநந்தி, ஷரத், நிகாரிகா, சுவாசிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’எவனும் புத்தனில்லை’ படத்தின் முன்னோட்டம்.
    வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’. இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடித்துள்ளார். இன்னொரு நாயகனாக ஷரத் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடித்துள்ளார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடித்துள்ளார். 

    எவனும் புத்தனில்லை படக்குழு

    மேலும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலுக்கு சினேகன் நடனம் ஆடியிருக்கிறார். 200 நடனக் கலைஞர்களுடன் அவர் நடனமாடியுள்ளார். இந்தப் படத்தை விஜய சேகரன் என்பவர் இயக்கி இருக்கிறார். மரியா மனோகர் இசையமைத்திருக்கிறார். 
    புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வெப் தொடரின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தையும் புஷ்கர் - காயத்ரி இயக்குகிறார்கள். 

    புஷ்கர் காயத்ரி

    அதே சமயத்தில், தமிழில் வெப் தொடர் ஒன்றையும் அவர்கள் இயக்குகின்றனர். அந்த வெப் தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அமேசான் பிரைம் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் தொடருக்கு சுழல் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில், விஜய் பட வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 12-ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 

    மாநாடு பட போஸ்டர்

    பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதர நடிகர்கள் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் சிம்புக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம், கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

    சூர்யா

    இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கில் மட்டும் உருவாகியுள்ள இப்படத்தை கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க சூரரைப் போற்று திரைப்படம் கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத், மீண்டும் அவருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். தலைவி படத்தை ஜூன் 26-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

    கங்கனா ரனாவத்

    இந்நிலையில், தலைவி படம் வெற்றி அடைந்தால், இயக்குனர் ஏ.எல்.விஜய் மீண்டும் ஒரு பயோபிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது கண்ணகியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்றும், அதிலும் கங்கனா ரனாவத்தையே ஹீரோயினாக நடிக்க வைக்க ஏ.எல்.விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. 

    விக்ரம்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கோப்ரா திரைப்படம் ரமலான் பண்டிகையை ஒட்டி வருகிற மே மாதம் 21-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    மணிரத்னம்

    ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பாண்டிச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் ஜெயம் ரவி நடிக்கும் காட்சிகள் 6 நாட்கள் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். 
    ×