என் மலர்tooltip icon

    சினிமா

    சதீஷ் - சாம் சிஎஸ்
    X
    சதீஷ் - சாம் சிஎஸ்

    இசையமைப்பாளர்கள் கவனத்திற்கு - பாடகராக அவதாரம் எடுத்த சதீஷ்

    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் சதீஷ், தற்போது புதிய படத்தின் மூலம் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.
    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தமிழ்ப்படம் மூலம் ரசிகர்களை ஈர்த்த சதீஷ், தனது காமெடியால் தமிழ் சினிமாவில் பலரையும் கவனிக்க வைத்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் மட்டுமில்லாமல் இளம் ஹீரோக்களுடன் இணைந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

    தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்திலும் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    இந்நிலையில் ராஜவம்சம் படத்திற்காக சாம்.சி.எஸ் இசையில் ஒரு பாடலை பாடி இருப்பதுபோல் சதீஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் சதீஷ் பாடுவதை கேட்டு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தலையில் அடித்து கொள்வது போன்ற அப்புகைப்படத்தை பதிவிட்டு, for your information என்று ஏ.ஆர்.ரகுமான், ஜிவிபிரகாஷ், அனிருத், தமன், இமான், விஜய் ஆண்டனி, தேவிஶ்ரீபிரசாத், சியான் ரோல்டன் என அனைத்து இசையமைப்பாளர்களையும் டேக் செய்துள்ளார். 
    Next Story
    ×