என் மலர்
சினிமா செய்திகள்
விமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் சோழநாட்டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே முதல் பாடலை வெளியிட இருக்கிறார்கள்.
விமல் நடிப்பில் தற்போது சோழநாட்டான் என்ற படம் உருவாகி வருகிறது. வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் விமல் நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டில் உள்ள மலைப்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தஞ்சாவூர், ஹைதராபாத், வைசாக் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லராக உருவாக்கி வருகிறார்கள்.
பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு தான் அப்படத்தின் இசையை வெளியிடுவார்கள். ஆனால், தற்போது தஞ்சாவூரில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த படம் சோழநாட்டை மையப்படுத்தி உருவாவதால், படப்பிடிப்பு பணிகளின் இடையே குடமுழுக்கை முன்னிட்டு சோழநாட்டை பெருமைப்படுத்தும் விதமாக பிப்ரவரி மாதத்திலேயே முதல் பாடலை வெளியிட உள்ளார்கள்.

இப்படத்தில் விமலுடன் காருண்ய கேதரின், தென்னவன், நாகி நாயுடு, சீதா, பரணி, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், ராமர், தங்கதுரை, போஸ் வெங்கட், சௌந்தரபாண்டியன், எம்.எஸ்.குமார் இன்னும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்க நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் ஷங்கர் இசையமைக்க கலைக்குமார் மற்றும் சபரீஷ் பாடல்கள் எழுதுகிறார்கள். பாரிவள்ளல் தயாரித்து வருகிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த பணம் இல்லை என நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நாடக நடிகர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியாவது: நடிகர் சங்க சொத்து என்பது தனி நபருடைய சொத்தல்ல. அதற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. மீண்டும் நடிகர் சங்கத் தேர்தல் அறிவிக்கும் போது தான் ஏற்கனவே எங்கள் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவார்களா என்று தெரியவரும். நான் பதவி வெறி பிடித்தவன் அல்ல.
பதவிக்காக எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு நான் ஒன்றும் முட்டாளும் இல்லை. தற்போது சங்கமே முடங்கி போயுள்ளது. சங்கத்தில் பணமும் இல்லை. நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் தேர்தலை நடத்துவதற்கு சங்கத்தில் பணம் இல்லை’. இவ்வாறு அவர் கூறினார்.
அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சின்னத்திரை புகழ் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார். காதல், பேண்டசி படமாக உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

படம் பற்றி அஷ்வத் கூறியதாவது: நமது நாட்டில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்கு இந்த படம் ஒரு தீர்வு சொல்வதாக அமையும். நம் வாழ்க்கையில் நடந்து முடிந்த சில விஷயங்களை மாற்றுவதற்கு கடவுள் இரண்டாவது வாய்ப்பு கொடுத்தால் என்ன ஆகும் என்பதை காமெடியாக சொல்லி இருக்கிறோம். படத்தை பார்க்கும் கணவன் மனைவிக்கு புரிதல் அதிகமாகும்’ என்றார்.
கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தமிழ் ‘டுவீட்’களை பதிவு செய்வார். அதற்கு ரசிகர்களும் ஏராளம். இந்நிலையில் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.
இந்த படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங். அடுத்து ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பிரண்ட்ஷிப்’ என்று ‘டைட்டில்’ வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் ஹர்பஜன் சிங், நேற்று கீச்சு, சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று பிரண்ட்ஷிப் படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர் தல தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம்” என்று கூறியுள்ளார்.
சின்னாளப்பட்டி சரவணன் தான் ஹர்பஜன் சிங்கின் சமூகவலைதள கணக்குகளையும் நடிப்புக்கான தேதிகளையும் கவனித்து வருகிறார்.
ஒத்த செருப்பு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திய பார்த்திபன் அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் பார்த்திபன். அவர் நடித்து இயக்கி பெரிய வெற்றி பெற்ற புதிய பாதை படமும் புதுமையான கதையசம்சத்திலேயே வந்தது. பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன.
சமீபத்தில் இவர் மட்டும் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தினார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டினர்.

இப்படத்தை பாலிவுட்டிலும் ரீமேக் செய்கிறார் பார்த்திபன். அதில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார். இந்நிலையில், ஒத்த செருப்பு படத்தை பார்த்த ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் தன்னை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்ததாகவும், இதன்மூலம் தான் நேரடி ஆங்கில படத்தில் நடிக்க உள்ளதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதற்காக மார்ச் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் பாம்பாட்டம் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்த ஜீவன் அடுத்ததாக நடிக்கும் படம் ‘பாம்பாட்டம்’. ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கிறார். இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் இப்படத்தில் ராணி வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க அவருக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் தசாவதாரம், ஒஸ்தி போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ராஜ், சிங்கம் புலி, அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சைக்கோ’. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “ஹிட் படம் கொடுத்து 3 ஆண்டுகளாகிவிட்டது. கடைசி 4 படங்களான ‘இப்படை வெல்லும்‘, ‘பொதுவாக எம்மனசு தங்கம்‘, ‘நிமிர்’ மற்றும் ‘கண்ணே கலைமானே’ ஆகியவை சரியாக போகவில்லை. ஆனால் எதுவும் மோசமான படமல்ல. இந்த விழாவுக்கு 3 முக்கிய நபர்களான இசைஞானி இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் வரவில்லை.

அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு அதிதி ராவ் தான் ஜோடி. ஆனால், எனக்கும் அவருக்கும் 2 நாட்கள் தான் படப்பிடிப்பு இருந்தது. அப்படியொரு ஒரு காதல் கதை இது. இந்தப் படத்தில் ராஜுக்கும் அவருக்கும் தான் கெமிஸ்ட்ரி அதிகம். கடைசியில் அவரிடமே சாவியைக் கொடுத்துவிட்டு என்னை டம்மி ஆக்கிவிடுவார்கள். அப்படியே ‘காதல் கொண்டேன்’ படம் தான். அதில் தனுஷ் தான் கடத்திக்கொண்டு போவார்.
இறுதியில் அவர் இறந்துவிடுவார். அவர் தான் படத்தின் நாயகன். அப்படிப் பார்த்தால் படத்தில் ராஜ் தான் ஹீரோ. நான் அவருடன் நடித்துள்ளேன். அன்றிலிருந்தே ‘சைக்கோ 2’ பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாகப் பண்ணுவோம். இந்தப் படத்தின் வெற்றிக்காக மிஷ்கின் சாருக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கேன். கண்டிப்பாக ‘சைக்கோ 2’ நடக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்ததாக இளம் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
‘துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்த படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இதைதொடர்ந்து, அருண் விஜய்யை வைத்து மாஃபியா எனும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் கார்த்திக் நரேன். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் 21-ந் தேதி மாஃபியா படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தனுஷுடன் அவர் இணையும் 5-வது படம் இதுவாகும். இப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி கடவுள் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அஷோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ். பாஸ்கர், ஷாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காதல், பேண்டசி படமாக உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி கடவுளாக தோன்றி இருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது.

வரும் காதலர் தினத்தன்று வெளியாகும் இந்த படம் பற்றி அஷ்வத் கூறியதாவது: நமது நாட்டில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்கு இந்த படம் ஒரு தீர்வு சொல்வதாக அமையும். நம் வாழ்க்கையில் நடந்து முடிந்த சில விஷயங்களை மாற்றுவதற்கு கடவுள் இரண்டாவது வாய்ப்பு கொடுத்தால் என்ன ஆகும் என்பதை காமெடியாக சொல்லி இருக்கிறோம். படத்தை பார்க்கும் கணவன் மனைவிக்கு புரிதல் அதிகமாகும்’ என்றார்.
ஹரி இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா ‘காப்பான்’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரை போற்று’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து சூர்யா படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வெற்றி மாறன், கவுதம் மேனன், ஹரி ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது.
இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம் படங்கள் வந்தன. சிங்கம் படத்தில் சூர்யாவின் துரை சிங்கம் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிங்கம் 2-ம் பாகம் மற்றும் 3-ம் பாகங்கள் வெளிவந்தன. தற்போது மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் நடிப்பதால் இது சிங்கம் 4-ம் பாகமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இது வேறு கதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் தமிழ், தெலுங்கில் வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து பிரபலமானார். தற்போது கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா என்ற படத்தில் நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.

இந்நிலையில், அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கேரக்டரில் பிரியாமணி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக திருநெல்வேலியில் நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்தில் நடிகை அமலாபாலும் இணைந்துள்ளார். இவர், தனுஷை காதலிப்பவராக நடித்த அம்மு அபிராமி கேரக்டரில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க பயந்ததாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான கனா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் ஆனது, அதிலும் அவரே நடித்தார். இந்நிலையில், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் வேல்டு பேமஸ் லவ்வர் என்ற படத்தில் அவரது மனைவியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், வேல்டு பேமஸ் லவ்வர் படத்தில் விஜய் தேவரகொண்டா அற்புதமாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் அனைவரையுமே கவர்ந்திழுப்பார். நிஜத்தில் மிகவும் நல்லவராகவும், நேர்மையானவராகவும் இருக்கிறார். அதனால் அவர் மீது ஒரு அச்சம் இருந்து கொண்டே இருந்தது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.






