என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இஸ்லாமிய மதகுருமார்கள் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்கள்.  

    இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் டிவிட்

    இதுகுறித்து தனது டுவிட்டரில் மேலும் கருத்து தெரிவித்த ரஜினி, “இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைச் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்காமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
    ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் முன்னோட்டம்.
    ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். மேலும் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஜிப்ஸி படக்குழு


    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: ‘ஜிப்ஸி என்றால் நாடோடிகள் என்று அர்த்தம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள மக்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது, மனித நேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாய சூழல் உள்ளிட்ட வி‌ஷயங்கள் பற்றி இப்படம் பேசுகிறது. இதில் பல மொழிகள் பேசி நடித்திருக்கிறார் ஜீவா’ என அவர் கூறினார்.
    பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் தன்னிடம் கேட்டதாக நடிகை வரலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது நடக்கிறது. சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீடூ மூலம் நடிகைகள் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும், தான் இதுபோன்ற பிரச்சினையை சந்தித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    வரலட்சுமி சரத்குமார்

    அதில், ‘’தான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம் கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தயார் செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    வீடில்லா திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.
    தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் லாரன்ஸ் இயக்கி வருகிறார். அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    நடிகர், இயக்குனர், டான்சர் என பன்முகத்திறமை கொண்ட ராகவா லாரன்ஸ், சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதற்காக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். 15 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் அவர், வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டிருந்தார். 

    திருநங்கைகளுடன் ராகவா லாரன்ஸ், அக்‌ஷய் குமார்

    லட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த திட்டம் தொடர்பாக அக்‌ஷய் குமாரிடம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். உடனே அக்‌ஷய் குமார் இந்த திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாய் கொடுத்து உதவியதாக ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
    ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
    சூர்யா- ஹரி காம்போவில் உருவான வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘அருவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

    ஹரி, சூர்யா


    இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இதன்மூலம் சூர்யா படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார். ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். அருவா திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
    ஒத்த செருப்பு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.
    வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வென்று வருகிறது. புது முயற்சியாக இப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்தை கோலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். இப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. 

    பார்த்திபன்

    வழக்கமாக சினிமாவில், ஒரு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றால், அதன் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழும், அந்த வகையில், ஒத்த செருப்பு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர் ஒருவர் பார்த்திபனிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு தனது ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன், ‘நான் ever ready... தயாரிக்க எவர் ready?' என பதிலளித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்புவும் விஜய்சேதுபதியும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    சிம்பு தன்னுடைய தந்தையான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான 'உறவை காத்த கிளி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வெள்ளித்திரையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். `மாநாடு'  படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்சன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

    சிம்பு, விஜய்சேதுபதி, சேரன்


    மாநாடு படத்தை தொடர்ந்து சேரன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து விஜய்சேதுபதியும், நடிக்கப்போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படம், மிக பிரமாண்டமான முறையில் தயாராகப்போவதாக பேச்சு அடிபடுகிறது. இவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் இன்னும் முடிவாகவில்லை. சிம்புவும் விஜய் சேதுபதியும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். அவருடன் ஊர்வசி, மவுலி, இந்துஜா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

    வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    மூக்குத்தி அம்மன் பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அம்மன் தோற்றத்தில் இருக்கும் நயன்தாராவின் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது. 

    விஜய் சேதுபதி, விஜய்

    இதனிடையே சமீபத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்க்கு விஜய்சேதுபதி முத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    மாஃபியா-2 படத்தை விட அஜித் படத்துக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.
    நடிகர் விஜயகுமாரின் மகனான அருண்குமார்,1995-ல் `முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், முன்னணி நாயகனாக முடியாமல் போராடி வந்தார். இதையடுத்து தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார். 

    அதன்பிறகு அவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அமைந்தன. குறிப்பாக, அஜித்குமாரின் `என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்த பின், அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது. தொடர்ந்து அவர் நடித்த `தடம்,' `குற்றம் 23,' `செக்கச் சிவந்த வானம்' ஆகிய படங்களின் வெற்றிகள், அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன. 

    அஜித், அருண்விஜய்

    சமீபத்தில் திரைக்கு வந்த `மாஃபியா' படமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த அருண் விஜய்யிடம், ``உங்களுக்கு அஜித்குமாருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பும், மாபியா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பும் ஒரே சமயத்தில் வந்தால், எந்த வாய்ப்பை ஏற்பீர்கள்?'' என்று கேட்கப்பட்டது.

    அருண்விஜய் கொஞ்சம் கூட யோசிக்காமல், “மாஃபியா-2 எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு அபூர்வமாகவே அமையும். எனவே அந்த படத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன்'' என்று பதில் அளித்தார், அருண் விஜய்!
    களவாணி, கலகலப்பு படங்களில் நடித்த விமலின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கடிதம் எழுதி உள்ளார்.
    களவாணி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விமல். நான்கு கோடி ரூபாய் கடன்பாக்கி வைத்துள்ளதால், அவரை வைத்து படம் தயாரிப்போர், என்னிடம் ஆலோசிக்க வேண்டும்‘ என, தயாரிப்பாளர் சங்கத்திற்கு, தயாரிப்பாளர் கோபி என்பவர் கடிதம் எழுதி உள்ளார்.

    அரசு பிலிம்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கோபி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விமல் தயாரித்த, மன்னர் வகையறா படத்திற்கு, அவர் கேட்டதால், 5.35 கோடி ரூபாய் கடன் கொடுத்தேன். படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு பின், 1.35 கோடி ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்தார்.

    விமல்

    மீதித்தொகையை, படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் சம்பளத்தில் இருந்து தருவதாக கூறினார். அதை நம்பி, நானும் பொறுமையாக இருந்தேன்.

    ஆனால், மன்னர் வகையறா படத்திற்கு பின், ஏழு படங்களில் விமல் நடித்து விட்டார். என் பணத்தை, இதுவரை தரவில்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி, என் அனுமதி இல்லாமல், அவர் நடித்த எந்த படத்தையும் வெளியிட முடியாது.

    விமலை வைத்து படம் தயாரிப்பவர்களும், படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளவர்களும், என்னை அணுகி, ஆலோசிக்க கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நலனுக்காகவே, இந்த கடிதத்தை அனுப்புகிறேன்; வேறு எந்த உள்நோக்கமும் இல்லை’.

    இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். 
    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜாக்கி சானுக்கு இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
    போலீஸ் அதிகாரியின் ஓய்வு பெறும் விழாவில் நடிகர் ஜாக்கிசான் உள்பட 60 பேர் கலந்து கொண்டதாகவும் அந்த விழாவில் பங்குபெற்ற 49 வயதான ஒரு போலீஸ் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அப்போது ஜாக்கிசானுக்கு கொரோனா பரிசோதனை நடந்ததாகவும் செய்தி பரவியது.

    இதனால் ஜாக்கி சான் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியை ஜாக்கி சான் வெளியிட்டிருக்கிறார்.

    தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் ஜாக்கிசான் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    ஜாக்கி சான்

    “என்னைப் பற்றி கவலைப்பட்ட அனைவருக்கும் நன்றி. நான் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். தயவு செய்து கவலைப் படாதீர்கள். என்னை எங்கும் அடைத்து வைக்கவில்லை.

    மற்ற எல்லோரும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். எனக்கு உலகம் முழுவதிலிருந்தும் பலவிதமான பரிசுப் பொருட்களை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அதில் நிறைய மாஸ்குகளும் இருந்தது மகிழ்ச்சியான செய்தி. அவற்றையெல்லாம் என் நிறுவனத்திடம் சொல்லி தேவையானவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்”.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
    ×