என் மலர்
சினிமா செய்திகள்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜாக்கி சானுக்கு இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியின் ஓய்வு பெறும் விழாவில் நடிகர் ஜாக்கிசான் உள்பட 60 பேர் கலந்து கொண்டதாகவும் அந்த விழாவில் பங்குபெற்ற 49 வயதான ஒரு போலீஸ் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அப்போது ஜாக்கிசானுக்கு கொரோனா பரிசோதனை நடந்ததாகவும் செய்தி பரவியது.
இதனால் ஜாக்கி சான் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியை ஜாக்கி சான் வெளியிட்டிருக்கிறார்.
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் ஜாக்கிசான் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

“என்னைப் பற்றி கவலைப்பட்ட அனைவருக்கும் நன்றி. நான் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். தயவு செய்து கவலைப் படாதீர்கள். என்னை எங்கும் அடைத்து வைக்கவில்லை.
மற்ற எல்லோரும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். எனக்கு உலகம் முழுவதிலிருந்தும் பலவிதமான பரிசுப் பொருட்களை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அதில் நிறைய மாஸ்குகளும் இருந்தது மகிழ்ச்சியான செய்தி. அவற்றையெல்லாம் என் நிறுவனத்திடம் சொல்லி தேவையானவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்”.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாயை சேவை வரியாக செலுத்த வேண்டும் என, ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் சம்மந்தப்பட்ட இளையராஜாவின் வழக்கை 2 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் ஒலிப்பதிவுக் கூடம் வைத்துள்ளார். இந்த வளாகத்தை காலி செய்ய கோரி பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவுக்கு உத்தர விட்டது. இதனை எதிர்த்து இளையராஜா சார்பில் சென்னை 17-வது உதவி மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் 42 ஆண்டுகளாக ஒலிப்பதிவுக்கூடம் வைத்துள்ளேன். இந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசை அமைத்து உள்ளேன்.
இப்போதும் கூட அங்குதான் பல திரைப் படங்களுக்கு இசையமைப்பு பணிகளை செய்து வருகிறேன். தொடர்ந்து அமைதியான முறையில் இசையமைப்பு பணிகளை மேற்கொள்ள இந்த ஒலிப்பதிவுக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ள கீழமை நீதிமன்றம் எனக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

எனவே பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் எனக்கு இடைக்கால நிவாரணம் வழங்காமல், விசாரணை தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகிறது.
எனவே இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உதவி மாநகர உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. சமரசத் தீர்வு மையத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தமிழில் மெட்ராஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை கேத்ரின் தெரசா, திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துவதாக கூறியிருக்கிறார்.
தமிழில் மெட்ராஸ், கதக்களி, கடம்பன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கேத்ரின் தெரசா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“என்னை சந்திக்கிறவர்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். மணமகன் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன். பொருத்தமான மணமகனுக்காக காத்து இருக்கிறேன். திருமணத்துக்கு முன்கூட்டியே திட்டமிடுவது எனக்கு பிடிக்காது. எனது வீட்டிலும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள்.

காதல் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அதே நேரம் காதலிக்க ஏற்ற மாதிரியான ஆணை எனது வாழ்க்கையில் இதுவரை சந்திக்கவில்லை. காதல் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதை விளக்குவது கஷ்டம். நான் காதல் திருமணம் செய்து கொள்வேனா? அல்லது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேனா? என்பதை இப்போதே சொல்ல முடியாது.
இரண்டு மூன்று கதாநாயகிகளுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. இந்தியில் நிறைய கதாநாயகர்கள், கதாநாயகிகள் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். அதுபோல் தென்னிந்திய படங்களிலும் நடித்தால் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது. எத்தனை பேர் நடித்தாலும் அவரவருக்குள்ள தனித்துவம் குறைந்து போய் விடாது.”
இவ்வாறு கேத்ரின் தெரசா கூறினார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டார்.
அதில் உடல் மெலிந்த தோற்றத்தில் ஆளே மாறிப்போய் இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் விமர்சித்தனர். உடல் இளைத்து அழகை கெடுத்து விட்டீர்களே நன்றாக சாப்பிட்டு எடையை கூட்டுங்கள் என்றனர். இன்னும் சிலர் ஸ்ருதியின் தோற்றத்தை கேலி செய்தனர். “கமல் சார் ஸ்ருதி மேடம் சாப்பிடாமல் இருக்கிறார். என்னவென்று கேளுங்கள்” என்றனர். ரசிகர்களின் இந்த கருத்துகளுக்கு ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து கூறியதாவது:-

“குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். என்னை பற்றி மற்றவர்கள் சொல்வதை கவனத்தில் கொள்ள மாட்டேன். இது எனது முகம். எனது வாழ்க்கை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உடல் மாற்றங்கள் என்பது சுலபமான விஷயம் இல்லை. நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதை சொல்வதற்கு வெட்கப்படவில்லை. மனதின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படத்தின் முன்னோட்டம்.
உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது.
இயக்குநர் பாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக்.
இப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற தி கிரேட் சினிமா நவ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் நடந்த 7 கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச மாதாந்திர திரைப்பட விழா, கொலம்பியா சினிமே லேப் மற்றும் இரானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலிலும் கயிறு திரைப்படம் இடம்பெற்றது.
சுருக்கமாக, இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் தன்னுடைய முத்திரையை பதிவு செய்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்த பிறகு தற்போது அது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த தமிழ் ரசிகர்களின் இதயங்களை வெல்ல வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. இதில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கௌரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியீடு என்று திட்டமிடப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியமான திரையரங்குகளிலும் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் தணிக்கையாகவில்லை என்பதால் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவிக்காமல் உள்ளது.

இன்னும் படப்பிடிப்பு முழுமையாக முடியவில்லை என்பதால், இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது. இதனால், விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சிறு குழப்பம் உருவானது. இது தொடர்பாகப் படக்குழுவினரிடம் விசாரித்தபோது, 95% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்றும், டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்கள். மேலும், ஏப்ரல் 9-ம் தேதி வெளியீட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி வெளியாகும் எனவும் குறிப்பிட்டார்கள்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, எல்லா மொழிகளும் எனக்கு ஒன்றுதான் என்று பேட்டியளித்திருக்கிறார்.
கன்னட திரையுலகில் அறிமுகம் ஆகி, இந்தி பட உலகிற்கு சென்று, அங்கு முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர், தற்போது கபீர்கான் இயக்கத்தில் 83 என்ற படத்தில் தன்னுடைய கணவர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கின்றனர். இந்தப் படத்தில் கபில் தேவாக ரன்வீர் கபூர் நடிக்க, அவருடைய மனைவி ரெமி தேவ்வாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
அதேபோல, மகாபாரதம் கதையை திரவுபதி கண்ணோட்டத்தில் படமாக்க இருக்கின்றனர்; அந்தப் படத்திலும் தீபிகா படுகோனே நடிப்பார் எனத் தெரிகிறது. இந்நிலையில், மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பீர்களா? என ஒரு பத்திரிகை பேட்டிக்காக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார்.

அதில், தீபிகா படுகோனே கூறியிருப்பதாவது: வாய்ப்பு வரும் பட்சத்தில் நான் நடிப்பதில் எந்தத் தடையும் இல்லை. எல்லா மொழிகளும் எனக்கும் ஒன்று தான். நல்ல கதையம்சம் இருக்கும் படங்கள் தான் எனக்கு முக்கியம்.
ஒவ்வொரு நாளும் சூட்டிங் முடித்துவிட்டு நான் வீட்டுக்குத் திரும்பியதும், தற்போது நாம் நடித்துக் கொண்டிருக்கும் படம், நல்ல கதையம்சத்தை கொண்டிருக்கிறதா என்றுதான் யோசிப்பேன். இப்போதும், பல தென்னிந்திய இயக்குனர்கள், வித்தியாச வித்தியாசமான கதைகளுடன் என்னை அணுகுகின்றனர். கதைகளைக் கேட்டிருக்கிறேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் நிச்சயம் நடிப்பேன்’. இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி, சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. இப்படத்தை தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிப்ரவரி 29ம் தேதி (நாளை) வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது விக்ரமை வைத்து ’கோப்ரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரக்ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் துல்கர் சல்மானும், ரக்ஷனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வேலைக்கு போகாமல், வீட்டில் இருந்து கொண்டு ஆப் மூலம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நாயகி ரிது வர்மாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் துல்கர் சல்மான்.
இருவரும் காதலித்து வரும் நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனன் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அதன்பின் துல்கர் சல்மானின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படமாக எடுத்திருக்கிறார்கள்.
இந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுக்க என்ன இருக்கிறது என்று தியேட்டரில் போய் உட்கார்ந்தால், முழு நேரமும் உங்களை எழுந்திரிருக்க விடாமல் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள். இதுதான் இந்த கதையின் சிறப்பம்சம்.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானுக்கு இப்படம் 25-வது படம். சத்தமே இல்லாமல் வெளியானாலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவிற்கு நடித்திருக்கிறார். நண்பராக வரும் ரக்ஷன் ஆங்காங்கே காமெடியில் கலக்கி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மா அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பிற்பாதியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் நிரஞ்சனிக்கு கொஞ்சம் சீரியசான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் நடிகராக முத்திரை பதித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். இவரது குரல் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் பெற்ற இவரை, இனிமேல் ஸ்டைலிஷ் நடிகர் என்றே அழைக்கலாம்.

முதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை சுவாரஸ்யமாக எடுத்து சென்றிருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி. திரைக்கதையில் பல திருப்பங்கள் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களை மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
மசாலா காஃபி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும் ரகம். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கண்களுக்கு விருந்து.
ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் வாணி போஜன், லவ் யூ சொன்னவங்க நிறையப்பேர் என்று பேட்டியளித்திருக்கிறார்.
தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் 'ஓ மை கடவுளே' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிப்புக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். 'ஓ மை கடவுளே' படத்தில் அவருடைய கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வாணி போஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘சினிமாவுக்கு வந்ததுமே 5 படங்கள் நடிக்கிறேன். அடுத்து வைபவ்வுடன் 'லாக்கப்', விதார்த்துடன் ஒரு படம் வெளியாகவுள்ளது.
சினிமாவில் எனக்கான வரவேற்பு நன்றாக உள்ளது. ஏராளமான பட வாய்ப்பு வருகிறது. அதில் சில பயோபிக் கதைகள் கூட வந்தது. பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். அதனால் அவசரம் காண்பிக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறேன்.

காதல் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். சின்ன வயதில் 'லவ் யூ' சொன்ன பசங்க நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லாமே அறியாத பருவத்தில் நடந்தவை என்பதால் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. காதலர் தினமும் கொண்டாடியதில்லை. ஆனால் இந்த காதலர் தினம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், நான் நடித்த 'ஓ மை கடவுளே' ரிலீசாகியுள்ளது.
இந்த வருடம்தான் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளேன். அதனால் 2020 காதலர் தினத்தை வாழ்க்கையில் மறக்கமாட்டேன். எனது சினிமா பயணத்தில் என் பெற்றோர் குறுக்கீடு செய்வதில்லை. நாம் சரியான முடிவுகளை எடுத்தால், அவங்க நிச்சயம் சந்தோஷப்படுவாங்க. அவங்களை பெருமைப்படுத்தும் விதமாகவே நான் நடந்து கொள்வேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






