search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாக்கி சான்"

    • நடிகர் ஜாக்கி சான் நேற்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார்.
    • ஜாக்கி சானின் மிகவும் வயதான தோற்றம் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

    நடிகர் ஜாக்கி சானிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது, தனித்துவமான சண்டை காட்சிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

    இந்நிலையில், நடிகர் ஜாக்கி சான் நேற்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். முன்னதாக, ஜாக்கி சானின் மிகவும் வயதான தோற்றம் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பலரும், ஜாக்கி சானின் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளும்படி வருத்தம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தனது பிறந்த நாள் முன்னிட்டு நன்றிகளுடன், விளக்கமும் அளித்துள்ளார்.

    இதுகுறித்து ஜாக்கிசான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்து பலரும் எனது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருவதை பார்த்தேன்.

    யாரும் வருத்தப்பட வேண்டாம். வயதான கதாபாத்திரத்தில் நான் நடித்து வரும் புதிய படத்துக்கான தோற்றம்தான் அது. புதிய விஷயங்களை முயற்சிப்பது எப்போதும் எனக்கு பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனக்கென ஒரு பாணியை வகுத்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ப்ரூஸ் திகழ்ந்தார்
    • ஒவ்வொரு நொடியையும் அவருடன் செலவிடுகிறோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

    1990களில் முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ப்ரூஸ் வில்லிஸ் (Bruce Willis).

    வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவற்றில் தனி முத்திரையுடன் நடித்து, பிற முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், சில்வெஸ்டர் ஸ்டாலோன், ஜாக்கி சான் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக தனது திரைப்படங்களையும் வசூலை குவிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படங்களாக அமைத்து கொண்டார்.

    தற்போது 68 வயதாகும் ப்ரூஸ் வில்லிஸிற்கு எம்மா ஹெமிங் எனும் மனைவியும் மேபல் மற்றும் எவ்லின் என இரு மகள்களும் உள்ளனர்.

    துரதிர்ஷ்டவசமாக, கடந்த பிப்ரவரி மாதம் "ஃப்ரன்டோ டெம்போரல் டிமென்சியா" (FTD) எனப்படும் மருத்துவ தீர்வு இல்லாத மூளை நோயினால் ப்ரூஸ் பாதிக்கப்பட்டார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிவித்தனர்.

    இத்தகவல், உலகெங்கும் உள்ள ப்ரூஸ் வில்லிஸின் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    "சில வருடங்களாகவே ப்ரூஸ் வாழ்வில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் அதிகம் இருந்தாலும், 2 மாதங்களாக அவருக்கு கெட்ட நாட்களையே அதிகம் அனுபவிக்கும்படி உள்ளது. இது எங்கள் மொத்த குடும்பத்தையும் ஒன்றாக இணைத்துள்ளது. அவர் வாழ்வில் இன்னும் எத்தனை நாட்கள் மீதமுள்ளது என தெரியவில்லை. எனவே, கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் அவருடன் இருந்து முழுவதுமாக உணர்ந்து செலவிடுகிறோம்" என ப்ரூஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


    மூளை திசுக்களை தாக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பு, ஆதரவு, அரவணைப்பு மிக முக்கியம் என்றும் அது நோயின் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, "ஜான் மெக்லேன்" எனும் நியூயார்க் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் ப்ரூஸ் வில்லிஸ் கதாநாயகனாக நடித்து 1988ல் வெளிவந்த டை ஹார்டு (Die Hard) திரைப்படம் 45 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×