என் மலர்
சினிமா

ஜிப்ஸி படக்குழு
ஜிப்ஸி
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் முன்னோட்டம்.
ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். மேலும் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: ‘ஜிப்ஸி என்றால் நாடோடிகள் என்று அர்த்தம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள மக்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது, மனித நேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாய சூழல் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி இப்படம் பேசுகிறது. இதில் பல மொழிகள் பேசி நடித்திருக்கிறார் ஜீவா’ என அவர் கூறினார்.
Next Story






