என் மலர்
சினிமா செய்திகள்
விவாகரத்து செய்து பிரிந்த இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஆடை வடிவமைப்பாளர் சுசேன்னாவும் கொரோனாவால் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
ஹிருத்திக் ரோஷன்-சுசேன்னா தம்பதிக்கு 2000-ல் திருமணம் நடந்தது. 2 மகன்கள் இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக 2014-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். மகன்கள் ஹிருத்திக் ரோஷனுடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியா முழவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியில் வராமல் அனைவரும் வீட்டிலேயே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மகன்கள் வீட்டில் தனிமையில் முடங்கி கஷ்டப்பட கூடாது என்பதற்காக ஹிருத்திக் ரோஷனின் வீட்டுக்கு வந்து மகன்களுக்கு துணையாக இருக்கிறார் சுசேன்னா. அவர் தனது வீட்டு, கட்டிலில் காப்பி குடித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஹிருத்திக் ரோஷன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எனது முன்னாள் மனைவி சுசேன்னா எங்கள் குழந்தைகளுக்காக தானாக முன்வந்து எனது வீட்டில் தங்கி இருக்கிறார். அவருக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா பரவலால் வேலை இழந்திருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் திரையுலகம் முடங்கி உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று ரஜினிகாந்த், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதி வழங்கினர்.

நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கினார்கள். தற்போது நடிகர் தனுஷ், ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். தயாரிப்பாளர் கே.ராஜன் ரூ.25 ஆயிரம் வழங்கி உள்ளார். மேலும் பல நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அரிசி மூட்டைகள் வழங்கி வருகிறார்கள்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த நடிகரும் டாக்டரும் ஆன சேதுராமன் காலமானார்.
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சேது ராமன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க என்று காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு, நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க என்று உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படக்குழுவினர் சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்திருக்கிறார்கள்.
மத்திய அரசு அறிவித்த 21 ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய தேவை தவிர மற்ற விஷயங்களுக்காக மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பிராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ, கொஞ்சம் சில் பண்ணு மாப்பி. வெளியில் சுற்ற முடியாத போது நாங்கள் என்ன பண்ணுவோம் ? மாஸ்டர் டீம் சோஷியல் டிஸ்டன்ஸிங்கில் இருக்கிறோம் நீங்கள் ?'' என்று விஜய், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோருடன் வீடியோ கால் பேசும் போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு பணியில் யோகி பாபு ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப்பணியில் தன் பங்களிப்பாக தமிழக அரசுக்காக யோகி பாபு நடித்த குறும்படம் பரவலான கவனம் பெற்றது. அதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய கருத்தைப் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வூட்டியவர் நடிகர் யோகிபாபு. இந்த விழிப்புணர்வுப் பணியில் அவரைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தன்னலம் கருதாது நேரம் காலம் பாராது ஈடுபட்டிருக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு மாஸ்க் வாங்கிக்கொடுத்து தங்களால் இயன்ற சமூக சேவையைக் தொடங்கி இருக்கிறார்கள். இதற்காக இப்பணியில் ஈடுபட்டு இயங்கிவரும் காவல்துறையினர், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என சென்னையில் 2000 பேருக்கு முகம் மூடும் 'மாஸ்க்' தொடங்கிய கொடுத்து தங்களால் இயன்ற பணியைத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த பணி மேலும் தொடரும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
பல வெற்றிப் படங்களில் நடித்தவரான யோகிபாபுவுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு சமூகப் பணி என்று இதைக் கூறலாம்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
இதுவரை பவன் கல்யாண் ரூ.1 கோடி, ராம்சரண் ரூ.70 லட்சம், நிதின் ரூ.20 லட்சம் என தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். தற்போது மகேஷ் பாபுவும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் என்ற பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களை கவர்ந்து டிக் டாக்கில் 100 மில்லியன்களை கடந்து சாதனை படைத்து இருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டில் இருக்கும் மக்களுக்கு நடிகர் சௌந்தரராஜா டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடை உத்தரவு போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
வீட்டில் இருப்பார்களுக்காக நடிகர் சௌந்தர ராஜா டிப்ஸ் கொடுத்திருக்கிறார். அதில், ஆரோக்கிய உணவுகளை உண்ணுங்கள், அளவாக உண்ணுங்கள். முடிந்த அளவு உடற்பயிற்சி செய்யுங்கள், வீட்டை வாகனங்களை கழுவி சுத்தம் செய்யுங்கள். அதிக அளவு டிவி மற்றும் செல்போன் உபயோகிக்காமல் புத்தகம் படியுங்கள். சமையல் செய்யப் பழகுங்கள், குடும்பத்தினர் மற்றும் உறவுகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அதிக அளவு ஏசியை பயன் படுத்தாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை மற்றும் அறிவின் அளவை சுயபரிசோதனை செய்யுங்கள்.
கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் அருண்ராஜா. இவரது அடுத்த படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. விஜய்யின் 65 வது படத்தை இவர் இயக்குவதாக கூறப்பட்டது. இருப்பினும் அது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தடைபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்த பின் படப்பிடிப்பு நடைபெறும்.
இப்படத்தை தொடர்ந்து மிஸ்கின் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்திய தகவலின் படி, அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இதில், ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தி உள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தினர். கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட வேண்டி இந்த யாகத்தை தனது வீட்டில் நடத்தியதாக ரோஜா தெரிவித்தார்.






