search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sethuraman"

    • தேவர் ஜெயந்தி:தமிழக அரசுக்கு ந என்று ன்றி சேதுராமன் கூறி உள்ளார்.
    • இந்த ஆண்டு கொரோனா இல்லாததால் பல லட்சம் மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.ந.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருது சகோதரர்கள் வீரவணக்க நாள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் அசம்பாவிதமும் நடைபெறாமல் இந்த ஆண்டு விழாவை மிகவும் சிறப்புடன் நடத்திய ஒத்துழைப்பு அளித்த தமிழக முதல்வருக்கும், தென்மண்டல காவல்துறை தலைவர், சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தென் மாவட்ட மக்கள் கொண்டாடும் மிகப்பெரிய விழா மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா இந்த விழா காலங்களில் வன்முறை சம்பவங்களை தூண்டி விட்டு அரசியல் செய்த காலம் மலையேறி சென்று விட்டது. இந்த ஆண்டு கொரோனா இல்லாததால் பல லட்சம் மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொண்டனர். மேலும் 22 ஆண்டுகளுக்கு பிறகு பசும்பொன்னில் நடந்த கும்பாபிஷேக விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தது தமிழக அரசு தான். இதே நாளில் அகில இந்திய மூவேந்தர் கழகத்துடன் பசும்பொன் கிராம மக்கள் இணைந்து நடத்திய தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பசும்பொன் ஜெயந்தி விழாவில் தமிழக அரசு சார்பில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் கலந்து கொண்ட அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×