என் மலர்
சினிமா செய்திகள்
உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா பாடலாசிரியர் வைரமுத்து, எஸ்பிபியும் இணைந்திருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகின் பாடலாசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து கொரோனா குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த பாடலை பாடி இசை அமைத்து வெளியிட்டுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம்.
கொரோனா பாடலை எழுதியுள்ள வைரமுத்து அதில் பல வார்த்தை புகுத்தியுள்ளார். அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது என அவரின் ஒப்பீடு எவ்வளவு உண்மை.
கொரோனா சத்தமில்லாமல் நுழைந்து, போரே போடாத நிலையிலும் உலகை நிலைகுலையச் செய்துள்ளது. தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள், கொஞ்சம் அச்சமும் இருக்கட்டும், அதை பற்றிய தெளிவும் இருக்கட்டும் என எழுதியுள்ளார் வைரமுத்து. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக்காக ’குட்டி ஸ்டோரி’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையில் விஜய் பாடிய இப்பாடல் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
தற்போது இந்தப் பாடல் யூடியூபில் 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை சோனி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை காவல்துறையினருக்கு குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு முகமூடிகளை விநியோகம் செய்தார் நடிகர் "மெட்ரோ" சிரிஷ் .
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
காவல்துறையினர், மருத்துவர்கள், ஊடகத்துறையினர் ஆகியோர் மற்றும் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் மெட்ரோ சிரிஷ், காவல்துறையினருக்கு குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு முகமூடிகளை விநியோகம் செய்துள்ளார்.
நடிகர் டாக்டர் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் அவரது உடலை சுமந்து சென்று உள்ளார்.
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சேது ராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். நடிகரும் சேதுராமனின் நண்பனுமான சந்தானம் இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மேலும் கண்ணீருடன் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார் சந்தானம்.
ஜீவாவை வைத்து இப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜூ முருகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து இவர் ஜோக்கர் என்கிற படத்தை இயக்கினார். தற்போது இவரது இயக்கத்தில் ஜிப்ஸி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
இந்நிலையில் இயக்குனர் ராஜுமுருகன் ஹேமா சின்ஹா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவரின் மனைவி ஹேமா சின்ஹா நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதுவரை மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.1 கோடி, ராம்சரண் ரூ.70 லட்சம், நிதின் ரூ.20 லட்சம் என தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சமும் வழங்கி உள்ளார்.
ஜே.வாழவந்தான் இயக்கத்தில் ஜே.பி., துர்கா, வைஷாலி நடிப்பில் உருவாகி இருக்கும் ஏமாத்த போறேன் படத்தின் முன்னோட்டம்.
``டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி, பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடும் ஆசாமிகளை பற்றி ஒரு படம் தயாராகி இருக்கிறது. உண்மை சம்பவங்களின் தொகுப்பாக-பெண்களை எச்சரிக்கும் படமாக இது தயாராகியுள்ளது. படத்துக்கு, `ஏமாத்த போறேன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
படத்தை பற்றி அதன் டைரக்டர் ஜே.வாழவந்தான் கூறியதாவது:- ``தற்போதைய சமுதாயத்தில் ஏமாறும் பெண்கள் அதிகரித்து இருப்பது போல், அவர்களை ஏமாற்றும் ஆசாமிகளும் அதிகரித்து வருகிறார்கள். இதற்கு காரணம், சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். இதுபற்றி இந்த படம் பேசுகிறது. திரைக்கதையில் பல உண்மை சம்பவங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட குற்றங்கள் புரிபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறோம். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறோம்.
அறிமுக நடிகர் ஜே.பி. கதாநாயகனாக நடிக்க, துர்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டா வது கதாநாயகியாக வைஷாலி நடித்துள்ளார். அன்னை சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.பி.துர்கா தயாரித்து இருக்கிறார்.''
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக பாடலாசிரியர் மதன் கார்க்கி வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதாக கூறியுள்ளார்.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பீதி காரணமாக முடங்கி உள்ளது. இதனால் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
Working from home for @RRRMovie with Director @ssrajamouli and Composer @mmkeeravaani
— Madhan Karky (@madhankarky) March 27, 2020
A remote voice recording supervision session.@tarak9999 was brilliant with his Tamil dialogue delivery.
Can’t wait for you to hear his voice for #RathamRanamRowthiram#RRRpic.twitter.com/COauLI7oP9
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருடன் வீடியோ கான்பெரன்ஸிங் மூலம் உரையாடுவது போன்ற புகைப்படத்தை மதன் கார்க்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஊரடங்கில் யாரும் வெளியே போகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள தமன்னா, உயிரை விட எதுவும் முக்கியமில்லை என கூறியுள்ளார்.
ஊரடங்கில் யாரும் வெளியே போகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து நடிகை தமன்னா கூறியிருப்பதாவது:- “‘பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு என்பது, வரும் அழிவில் இருந்து முன்கூட்டியே நம்மை பாதுகாத்து கொள்ளும் முயற்சியாகும். இதை அலட்சியமாக நினைக்க வேண்டாம். நம்மை காப்பாற்றுவதற்காகத்தான் இந்த முடிவு. நமக்கான முதல் நல்ல அடியாக இதை பார்க்க வேண்டும். நாம் உயிரோடு இருப்பதைவிட எதுவும் முக்கியம் இல்லை.

நான் குடும்பத்தோடு வீட்டில் இருக்கிறேன். நீங்களும் இதையே கடைபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நல்ல நிலையில் இருப்பவர்கள் வீட்டில் இருப்பது வேறு. ஆனால் சாதாரண ஏழைகள், படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலிபோட்டு அவர்கள் வெளியே வராமல், மற்றவர்களையும் ஊருக்குள் வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களை பார்த்து படித்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தமன்னா கூறினார்.
கொரோனா பீதியால், துபாயில் ஆடம்பரமாக நடைபெற இருந்த திருமணத்தை ரத்து செய்து விட்டு, பிரபல நடிகர் ஒருவர் வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் செய்ய உள்ளாராம்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நிதின். இவர் தெலுங்கில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்த படம், அதே பெயரில் ஜெயம் ரவி நடிக்க தமிழில் ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் நிதின் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ராம்கோபால் வர்மா இயக்கிய ‘அக்யுத்’ இந்தி படத்திலும் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இவருக்கும், ஷாலினி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தை ஏப்ரல் 15 மற்றும் 16-ந் தேதிகளில் துபாயில் நடத்த திட்டமிட்டனர். துபாய்க்கு நடிகர்-நடிகைகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்று அதிகமானோரை அழைத்து சென்று ஆடம்பரமாக திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, துபாய் திருமண ஏற்பாடுகளை நிதின் ரத்து செய்துவிட்டார். ஐதராபாத்தில் உள்ள வீட்டிலேயே திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கழிப்பது எப்படி என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு ஓய்வு நேரத்தை தான் கழிப்பது எப்படி என்பது பற்றி காஜல் அகர்வால் கூறியதாவது:- “கொரோனா ஊரடங்கில் பழைய பழக்கங்களை கை கழுவிவிட்டு, புதிய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளலாம். நான் ஆன் லைனில் புதிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ளேன். தியானம் கற்கிறேன். புத்தக வாசிப்பு பழக்கத்தையும் தொடங்கி இருக்கிறேன். சமையல், வீட்டு வேலை செய்வது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது என்று இருக்கிறேன்.

மற்றவர்களும் இதை செய்யுங்கள். இதற்கு முன்பு ஓய்வில்லாமல் உழைத்து, எப்போது ஓய்வு கிடைக்குமோ என்று காத்திருந்தவர்களுக்கு இந்த ஊரடங்கு வசதியாக உள்ளது. வெளியே செல்லாமல் இருப்பது நமக்கு மட்டுமே நல்லது என்று இல்லை, நாட்டுக்கு செய்யும் சேவையாகவும் இருக்கும். 21 நாட்களும் சுய கட்டுப்பாட்டுடன் வீட்டுக்குள்ளேயே இருங்கள். தேவைகளையும், பயன்பாட்டையும் குறைத்து கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விவாகரத்து செய்து பிரிந்த இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஆடை வடிவமைப்பாளர் சுசேன்னாவும் கொரோனாவால் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
ஹிருத்திக் ரோஷன்-சுசேன்னா தம்பதிக்கு 2000-ல் திருமணம் நடந்தது. 2 மகன்கள் இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக 2014-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். மகன்கள் ஹிருத்திக் ரோஷனுடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியா முழவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியில் வராமல் அனைவரும் வீட்டிலேயே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மகன்கள் வீட்டில் தனிமையில் முடங்கி கஷ்டப்பட கூடாது என்பதற்காக ஹிருத்திக் ரோஷனின் வீட்டுக்கு வந்து மகன்களுக்கு துணையாக இருக்கிறார் சுசேன்னா. அவர் தனது வீட்டு, கட்டிலில் காப்பி குடித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஹிருத்திக் ரோஷன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எனது முன்னாள் மனைவி சுசேன்னா எங்கள் குழந்தைகளுக்காக தானாக முன்வந்து எனது வீட்டில் தங்கி இருக்கிறார். அவருக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.






