என் மலர்
சினிமா செய்திகள்
பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.


சுதீப் - நயன்தாரா
இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஒருவர் இதில் ஒரு படத்தை இயக்குவதாகவும் அதில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட நடிகர் ‘நான் ஈ’ சுதீப் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இராஜமோகன் இயக்கத்தில் அதர்வா, பூஜா ஜவ்வேரி, இசக்கி பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் அட்ரஸ் படத்தின் முன்னோட்டம்.
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம் ‘அட்ரஸ்’. குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களை இயக்கிய இராஜமோகன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கி வருகிறார் இராஜமோகன்.

அதர்வா, இசக்கி பரத்
இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்து கொடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். இவர் ‘மெரீனா’, ‘மூக்குத்திஅம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சினேகன், மோகன் ராஜன், ‘கானா’ ஹரி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆர்யா
அந்த வகையில், தற்போது நடிகர் ஆர்யா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
நடிகர் ஆர்யா கைவசம் எனிமி, பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை, சுந்தர் சி-யின் அரண்மனை 3, சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் உள்ளன.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண்
இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை ஒரு மாதம் படமாக்க ராஜமவுலி திட்டமிட்டு உள்ளாராம். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் இப்பாடல் 8 நிமிட நீளம் கொண்டதாம். மேலும் இப்பாடலில் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளையும் நடனமாட வைத்து பிரம்மாண்டமாக படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கே.ஜி.எப். 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எப்’. மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இப்படம் வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கே.ஜி.எப். 2 படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் பிரபாஸ். இவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. தற்போது ராதே ஷ்யாம், சலார், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஆகிவிட்டதால் அவரின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நடிகர் பிரபாஸை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளன.

கடந்த ஓராண்டில் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இவற்றில் நடித்திருந்தால் அவருக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம். ஆனால் அவர் அவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம். தனக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளதால் குறிப்பிட்ட விளம்பரங்களில் தான் நடிக்க வேண்டும் என அவர் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ஒளிப்பதிவாளர் சிவன், இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
தமிழில் ரோஜா, தளபதி, இருவர், உயிரே, துப்பாக்கி, செக்கச் சிவந்த வானம், தர்பார் உள்பட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானவர் சந்தோஷ் சிவன். இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ள இவர், 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
சந்தோஷ் சிவனின் தந்தை சிவனும் மாலையாள திரையுலகில் கொண்டாடப்படும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர் சிறந்த ஒளிப்பதிவுக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சிவன், இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 89.
ஒளிப்பதிவாளர் சிவனின் மறைவு மலையாள திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்த படம் ‘துப்பாக்கி’. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

கமல்ஹாசன், விஜய்
தற்போது உருவாகி வரும் நடிகர் விஜய்யின் 65-வது படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை விஜய்க்கு திருப்தியாக இல்லாததால் முருகதாஸ் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நெல்சன் திலீப்குமார் ஒப்பந்தமானார். இப்படத்துக்கு ‘பீஸ்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் டாப்சி, அடுத்ததாக தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. பின்னர் காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை போன்ற படங்களில் நடித்த டாப்சி, பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகும் ‘சபாஷ் மித்து’, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

டாப்சி, பரத் நீலகண்டன்
இந்நிலையில், நடிகை டாப்சி மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை, அருள்நிதி நடிப்பில் வெளியான ‘கே 13’ என்ற திரில்லர் படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்க உள்ளாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட படம் என்பதால், நடிகை டாப்சி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிம்பு கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார்.
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம்
அதில், ஸ்விகி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ள நிவேதா பெத்துராஜ், இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார்.
கரீனா கபூர் சீதை வேடத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதால், அவருக்கு பதில் கங்கனாவை நடிக்க வைக்க படக்குழு பரிசீலித்து வருகிறதாம்.
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். தற்போது பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதை படமாகிறது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராகிறது. தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள்.

கங்கனா ரணாவத்
இந்த படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனா கபூரை அணுகியதாகவும், அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. கரீனா கபூர் சீதை வேடத்தில் நடிக்க எதிர்ப்புகளும் கிளம்பின.
இதனால் சீதை வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்தை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதும் விஜயேந்திர பிரசாத், கங்கனா ரணாவத் சீதை வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.






