search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அட்ரஸ் படத்தின் போஸ்டர்
    X
    அட்ரஸ் படத்தின் போஸ்டர்

    அட்ரஸ்

    இராஜமோகன் இயக்கத்தில் அதர்வா, பூஜா ஜவ்வேரி, இசக்கி பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் அட்ரஸ் படத்தின் முன்னோட்டம்.
    காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம் ‘அட்ரஸ்’. குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களை இயக்கிய இராஜமோகன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். 

    இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கி வருகிறார் இராஜமோகன். 

    அதர்வா, இசக்கி பரத்
    அதர்வா, இசக்கி பரத்

    இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்து கொடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி,  ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன்,  கோலிசோடா முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். இவர் ‘மெரீனா’, ‘மூக்குத்திஅம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சினேகன், மோகன் ராஜன், ‘கானா’ ஹரி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
    Next Story
    ×