என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் தனுஷ் நடிக்க உள்ள நேரடி தெலுங்கு படத்தை, சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்குகிறார்.
    நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து, சம்பளமும் அதிகமாகி உள்ளது. 

    அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க தனுசை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படம் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்குகிறார். 

    தனுஷ், சேகர் கம்முலா
    தனுஷ், சேகர் கம்முலா

    இந்த படத்தில் நடிக்க நடிகர் தனுசுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இதுவரை வாங்கிய சம்பளத்தில் இது மிக அதிகம் என்கின்றனர். இந்த படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.
    நடிகை கார்த்திகா தமிழில் கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
    தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. இவரது மகள் கார்த்திகா ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். பின்னர் அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்த இவர், சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    நடிகை கார்த்திகா கடைசியாக வா டீல் படத்தில் நடித்தார். கடந்த 2016-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் உள்ளது. அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை. இதனால் 2017-ல் ஆரம்ப் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தார். தொடர்ந்து டி.வி தொடர்களில் நடிக்கவும் அழைப்பு வரவில்லை.

    கார்த்திகா
    கார்த்திகா

    தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திகாவின் தங்கை துளசியும் 2013-ல் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துளசி நடிப்பில் கடைசியாக யான் படம் 2014-ல் வெளிவந்தது. அதன்பிறகு அவருக்கும் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜனனி, தற்போது யாக்கை திரி, பகீரா, முன்னறிவான், கசட தபற போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    தமிழில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள், தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஜனனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கைவசம் தற்போது யாக்கை திரி, பகீரா, முன்னறிவான், கசட தபற போன்ற படங்கள் உள்ளன.

    மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்து நடிகை ஜனனி கூறியதாவது: “கொரோனா 2-வது அலை எல்லோரையும் அதிகமாக பயமுறுத்தி உள்ளது. எனக்கு தெரிந்த பலர் இந்த கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். எல்லாமே மாறிவிட்டது. இப்போது மீண்டும் படவேலைகளில் ஈடுபட்டு இருக்கிறேன்.

    ஜனனி

    இது சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னொரு புறம் பயமாகவும் இருக்கிறது. ஆனாலும் எப்போதும் வீட்டிலேயே முடங்கி இருக்க முடியாது. நான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இதனால் நம்பிக்கை வந்து இருக்கிறது. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருப்பேன். 

    நான் நடித்துள்ள இரண்டு படங்களுக்கான டப்பிங்கை கொரோனா பரவல் அதிகமானதால் தொடர முடியாமல் நிறுத்த வேண்டி வந்தது. இப்போது தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் ஸ்டுடியோவுக்கு செல்லும் அளவு நம்பிக்கை வந்திருக்கிறது” என்றார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.

    "சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.

    நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.

    இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.

    அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

    "சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.

    திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.

    சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை

    விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.

    அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.

    பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.

    நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.

    டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர்,  "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.

    மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.

    பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்

    னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.

    "கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''

    "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.

    பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்
    கமலைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்தித்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
    புற்று நோயால் பாதித்த ஒருவரை ஜூம் கால் மூலம் நடிகர் கமல் நேற்று உரையாடினார். இந்த உரையாடல் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. கமலை தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் சேதுபதி புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார்.

    விஜய் சேதுபதி

    தன்னை நேரில் பார்க்க வேண்டும் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் விருப்பப்படுவதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அந்த சிறுவனை குடும்பத்தினரோடு தனது வீட்டிற்கு அழைத்து கட்டி அணைத்து தனது பாணியில் முத்தம் கொடுத்து அந்த சிறுவனுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறார். 
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து 'சீயான் 60' படத்தில் நடித்து வரும் விக்ரம், திடீர் முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.
    விக்ரம் நடிப்பில் 'கோப்ரா', 'சீயான் 60' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. இதில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'கோப்ரா', நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை.

    இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து 'சீயான் 60' படத்தில் நடிக்க ஆரம்பித்தார் விக்ரம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிவடைந்துவிட்டது.

    விக்ரம்

    இந்நிலையில் ஜூலையில் 'சீயான் 60' படத்தைத் தொடங்கி முடிக்க திட்டமிட்டுள்ளார் விக்ரம். ஒரே கட்டமாக 'சீயான் 60' படத்தை முடித்துவிட்டு, பின்பு 'கோப்ரா' படத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார். 
    இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதாக நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
    மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘எமெர்ஜன்ஸி’ என்ற படம் தயாராகிறது. இதில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார்.

    தற்போது இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதாக கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

    கங்கனா ரனாவத்

    அவர் பதிவில், ''ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு புதிய பயணத்தின் அழகிய தொடக்கம். இன்று நாங்கள் ‘எமர்ஜென்ஸி’ படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக உடல், முகம் பரிசோதனையின் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். இந்தக் கனவை நனவாக்க பல்வேறு அற்புதமான கலைஞர்கள் ஒன்றிணைய உள்ளனர். இது மிகவும் சிறப்புமிக்க ஒரு பயணமாக இருக்கப்போகிறது'' இவ்வாறு கூறியுள்ளார்.

    தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி' படத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது ரீ என்ட்ரி கொடுத்து வரும் நடிகை சிம்ரன், பிரபல நடிகர் ஒருவருக்கு வில்லியாக நடிக்க இருக்கிறார்.
    விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் அடுத்ததாக கார்த்தியை வைத்து சர்தார் என்னும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

    கார்த்தி
    கார்த்தி நடிக்கும் சர்தார்

    இதில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சிம்ரன் இப்படத்தில் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    பல வெற்றி படங்களை இயக்கிய வெற்றிமாறனும் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸும் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
    பொல்லாதவன், ஆடுகளம் படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்த கதிரேசனும், காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை படங்களை கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் தயாரித்த வெற்றிமாறனும் இணைந்து அதிகாரம் என்னும் படத்தை தயாரிக்கிறார்கள்.

    இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் அதிகாரம் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க இருக்கிறது. மலேசியாவில் சுமார் 50 நாட்களும் இந்தியாவில் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    அதிகாரம்
    அதிகாரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பேரில் உணவு சப்ளை செய்த ஓட்டல் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.
    ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் ஸ்விகி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.   

    இந்நிலையில் நிவேதாவின் புகார் அடிப்படையில், உணவு சப்ளை செய்த மூன்லைட் ஓட்டல் செயல்படுவதற்கு தற்காலிகமாக தடை விதித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

    நிவேதா

    3 நாட்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்து புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் ஓட்டலுக்கு உத்தரவு விடப்பட்டுள்ளது. மேலும், 10 கிலோ பழைய இறைச்சியை பறிமுதல் செய்து அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
    நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு புதிய நிபந்தனை விதிக்கப் பட்டிருக்கிறது.
    பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பிக்பாஸ் குழுவினர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    கமல்

    இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே போட்டியாளர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 
    பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து அதில் கிடைத்த மாம்பழங்களை விற்பனை செய்து இருக்கிறார்.
    தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் நரேஷ். தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல நடிகர்கள் வைத்துள்ளதைப் போன்று இவரும் விவசாயப் பண்ணை வைத்துள்ளார். கடந்த வருட லாக்டவுனின் போதே விவசாயம் செய்வதில் இறங்கினார். இந்த லாக்டவுனில் மாம்பழம், நாவல்பழம் விற்பதிலும் இறங்கியுள்ளார்.

    நரேஷ்
    நடிகர் நரேஷ்

    இது குறித்து தனது சமூக வலைத்தள பதிவில், “நரேஷ் என்கிற விவசாயி அவரது கையால் பறிக்கப்பட்ட மாம்பழம், நாவல் பழங்கள் ஆகியவற்றை, கிலோ 50 ரூபாய்க்கு விற்றார். அதன் மூலம் 3600 ரூபாய் சம்பாதித்தார். ஒரு நடிகராக அதிகபட்ச சம்பளம் வாங்கியதை விட இது மகிழ்ச்சியானது. விவசாயம் செய்து உண்மையான மகிழ்ச்சியை உணருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
    ×