என் மலர்
சினிமா செய்திகள்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் டி 43 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் ஆந்திராவில் குறைவான பஸ் போக்குவரத்து மட்டுமே இயக்கப்படுவதால் நடிகர் ராம் சரணை அவரது ரசிகர்கள் மூன்று பேர் 231 கிலோ மீட்டர் நடந்தே சென்று சந்தித்துள்ளனர்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவர் நடிப்பில் தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அடுத்து சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தீவிர ரசிகர்களான சந்தியா ஜெயராஜ், ரவி, வீரேஷ் ஆகியோர் ராம் சரணை நேரில் சந்திக்க நினைத்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமான பேருந்துகள் அதிக அளவில் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நடந்தே சென்று ராம் சரணை சந்திக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

தெலுங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்திலிருந்து ஐதராபாத் வரை, நான்கு நாட்கள் 231 கிலோ மீட்டர்கள் இந்த மூவரும் நடந்தே சென்று ராம் சரணை சந்தித்துள்ளனர். நடிகர் ராம் சரணும் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து கட்டி அணைத்து வரவேற்றுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மாணவர் ஒருவரின் மார்க் லிஸ்ட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் அப்போது வெளியிடப்படவில்லை, வெளியிடப்படாத ரிசல்ட்டுகள் இப்போது பீகார் அரசு இணையதளத்தில் வெளியிட்டது.
இதில் மாணவர் ஒருவரின் மார்க் லிஸ்ட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சையடைந்த அவர் இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மார்க் லிஸ்ட்டில் அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம்
இதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப்பட்டியல் வெளியானது. அதில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பல படங்களை கைவசம் வைத்து நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தன்னைத்தானே கலாய்த்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இவர் இந்தியன் 2, பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் கயிற்றில் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்து இருக்கிறார். மேலும், அந்த புகைப்படங்களுக்கு ’ஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன்’ என்று தன்னைத்தானே கலாய்த்து பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
No amount of motivation quotes out there are enough! ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ day 😎 pic.twitter.com/zMdcWVPhZD
— Priya BhavaniShankar (@priya_Bshankar) June 25, 2021
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்யை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ஷாருக்கான். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவார்.
அந்த வகையில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் இன்று ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தைக் குறிப்பிட்டு, இவரைப்பற்றி ஒரு வார்த்தையில் கூற முடியுமா என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ‘வெரி கூல்’ என ஷாருக்கான் பதிலளித்திருக்கிறார். இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகிறார்கள்.
Very cool https://t.co/bFjbEgmeij
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2021
துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘அதிகாரம்’ படத்தின் முன்னோட்டம்.
‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை தயாரித்த கதிரேசனின் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அதிகாரம்’. இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்.
பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை, வெற்றிமாறன் உதவியாளர் துரை செந்தில்குமார் ஏற்றுள்ளார். எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றி படங்களை இயக்கிய இவர் முதல்முறையாக இப்படம் மூலம் ராகவா லாரன்ஸ் உடன் இணைகிறார்.
இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.
விஜய்சேதுபதி ஜோடியாக கருப்பன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை தன்யா, தற்போது கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றை வலியுறுத்தி பதிவுகள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
தடுப்பூசி போடும் புகைப்படங்களை பகிர்ந்து நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம் நீங்கள் போட்டு கொண்டீர்களா? என்ற பதிவுகள் வெளியிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய்சேதுபதி ஜோடியாக கருப்பன், சசிகுமார் ஜோடியாக பலே வெள்ளையத்தேவா, அருள் நிதியுடன் பிருந்தாவனம் படங்களில் நடித்துள்ள தன்யா ரவிச்சந்திரன் குறும்படம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.

நடிகை தன்யா, இயக்குனர் கணேஷ்பாபு
ஏழைகளுக்கு உதவும் வகையில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவது குறித்தும் குறும்படத்தில் விளக்கி உள்ளார். இந்த படத்தை கட்டில் பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி உள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படம், தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராவதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மீண்டும் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து ‘சூர்யா 40’ எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பெண்களுக்காக போராடுபவராக நடிக்கிறாராம் சூர்யா. அதனால் பொள்ளாச்சியில் நடந்த சில உண்மை சம்பவங்களை இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் முழுமையாக முடிவடைந்துவிடுமாம். இதையடுத்து பின்னணி பணிகளை வேகமாக முடித்து, படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.
இயக்குனர் ஷங்கரின் மகளுக்கும், இளம் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் வருகிற ஜூன் 27-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாம்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.
இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்தை தான் ஐஸ்வர்யா மணக்க இருக்கிறாராம். 29 வயதாகும் ரோகித், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகன் ஆவார்.

ரோகித்
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரி அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித், அந்த தொடரில் அதிகபட்சமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்திருந்தார்.
ஐஸ்வர்யா - ரோகித் திருமணம் வருகிற ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளதாம். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

யுவன் சங்கர் ராஜா
இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். அதன்படி நானே வருவேன் படத்தின் இரண்டாவது பாடலை கம்போஸ் செய்து கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த பாடலை கேட்க ரசிகர்கள் அனைவரும் தயாராக இருங்கள் எனவும் யுவன் தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது.
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை அடுத்த மாதம் படமாக்க உள்ளனர்.

இந்நிலையில், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டரோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






