என் மலர்
சினிமா செய்திகள்
"பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்" என்று வரதட்சணை கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.
கேரளாவில் கடந்தவாரம் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்தும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும் கேரளா முழுக்க எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
இந்த நிலையில், கேரளாவின் முன்னணி நடிகர் மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு' என்று அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'ஆராட்டு' படக்காட்சியின் வீடியோவை வெளியிட்டு "வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்" என்று அழுத்தமுடன் வரதட்சணைக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.
Say No to Dowry. Let’s strive forward and create a Kerala where there’s justice and equality for women.#Equality#Aaraattu@unnikrishnanbpic.twitter.com/K24xojSJUF
— Mohanlal (@Mohanlal) June 26, 2021
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர்.

இப்படம் 16 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் உலக அளவில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற படம் என நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சாதனையை தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
வி.சாய் தயாரிப்பில் தி.சம்பத் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாயத்திரை படத்தின் முன்னோட்டம்.
பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். இசையமைப்பாளர் S .N அருணகிரி இசைமைக்கிறார். V.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு சென்சார் குழுவினரால் யூ/ஏ சான்றிதழ் வழங்க பட்டுள்ளது. திரையரங்குகள் திறந்த சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வர இருக்கிறது.

மாயத்திரை படத்தில் அசோக் - சாந்தினி
இது ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, ரசிகர்களுக்கு ஆறு மொழியில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளனர். இதனை அடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் நன்றி கூறியிருக்கிறார்.
கே.ஜி.எப், சுல்தான் படங்களில் வில்லனாக மிரட்டிய ராமச்சந்திர ராஜு, மஹா சமுத்திரம் படத்தில் பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தில் கருடா ராம் என்ற மிரட்டலான வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் ராமச்சந்திர ராஜு. இதை தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இவர் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் படத்தில் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன் நடனம் ஆடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் டப்பிங் கொடுத்தது தற்போது தெரிய வந்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இவருக்கு தமிழில் டப்பிங் கொடுத்தது ரவீனா என்பது அனைவருக்கும் தெரியும்.


ஆனால், மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதனை சுஜிதாவே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் கதை பற்றி புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சூரரைப்போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தை தற்சமயம் சூர்யா 40 என்று அழைத்து வருகிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பாண்டிராஜ் படம் என்பதால் இது கிராமத்து கதையம்சத்தில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக புதிய தகவல் கசிந்துள்ளது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. பல இளம் பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை திரைக்கதையாக உருவாக்கி, படமாக்கி வருவதாகவும் பாலியல் குற்றவாளிகளை தேடிப்பிடித்து தண்டிக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் படக்குழுவினர் தரப்பில் இந்த தகவல் பொய்யானது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் கதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருக்கும் நடிகர் ரஜினியின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.


மகளுடன் ரஜினி
தற்போது மீண்டும் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் ரஜினி. இந்நிலையில் அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
தன்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால், அதில், எந்த ஹீரோ நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற விருப்பத்தைத் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார்.
தோனி, மேரி கோம், சாய்னா நேவால் என விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு அவை வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


சுரேஷ் ரெய்னா - சூர்யா
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பேட்டியளித்தார். அப்போது, ’உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் யார் நடிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, “தென்னிந்தியாவில் என்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் என்னுடைய பேவரைட் ஹீரோ சூர்யாதான் நடிக்கவேண்டும். அவரால்தான், என்னுடைய கதாபாத்திரத்தைச் செய்யமுடியும்” என்று பதிலளித்துள்ளார்.
ஜிகர்தண்டா படம் மூலம் தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது வசந்த முல்லை என்னும் திரைப்படம் உருவாகி உள்ளது.
எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் வசந்த முல்லை. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார்.


ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் கடலுக்கடியில் இருக்கும் பாபி சிம்ஹாவை நாயகி காஷ்மீரா தன் மூச்சு காற்றை கொடுத்து காப்பாற்றுவது போல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இளம் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான ரைசா, சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகளை செய்து வருவார். அந்த வகையில் தற்போது சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் நானும் சிங்கிள்... நீங்களும் சிங்கிள்... என்று பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.






