என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ஒன்று அடுத்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் கைவசம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி என ஏராளமான படங்கள் உள்ளன.
இதில் சபாபதி படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபாபதி படத்தின் போஸ்டர்
‘சபாபதி’ படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சினம்’ படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அருண் விஜய்யின் 30-வது படம் சினம். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்கி உள்ளார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. இதனால் சினம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சினம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜய், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

சினம் படத்தின் போஸ்டர்
கொரோனா தொற்று பரவல் குறைந்து தற்போது பாதுகாப்பான சூழ்நிலை மாறி வருவதால், சினம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க வரும்’ என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விரைவில் ‘சினம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார். தற்போது விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார்.

இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள சுமார் 800 இலங்கை தமிழர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொடுத்து உதவி உள்ளார். அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.
டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன், நெல்சன்
கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது. இதனிடையே இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு முயன்றது. சில பிரச்சனைகளால் அந்த முடிவை கைவிட்ட படக்குழு, தற்போது டாக்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் குறைந்து வருவதால், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் டாக்டர் படத்தை வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

ஐஸ்வர்யா ஷங்கர் - ரோகித்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோகித் தம்பதி
அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
தமிழில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற அசுரன் திரைப்படம், தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.
அசுரன் படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணியும் நடித்துள்ளார். மேலும் அம்மு அபிராமி வேடத்தில் அமலா பால் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.

வெங்கடேஷ்
இந்நிலையில், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று தான் தயாரிப்பாளர் சுரேஷ் காத்திருந்தாராம். ஆனால், கொரோனா மூன்றாவது அலையும் வரும் என சொல்லப்பட்டு வருவதால், திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா என்ற சந்தேகத்தால் ஓடிடியில் வெளியிட அவர் முடிவு செய்ததாகச் சொல்கிறார்கள்.
கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்து சண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் இவர், முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் பணியாற்றி உள்ளார்.
கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும் தொடர்ந்து மூன்று முறை தேர்வாகி பணிபுரிந்து வந்தார். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அங்கமுத்து சண்முகம் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து வெளியேறுவதைக் கண்ட ரசிகர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது.

வைரமுத்துவின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் - நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மனோரஞ்சிதம் படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது. மனோரஞ்சிதம் படப்பிடிப்பின் போது எஸ்.வி.சுப்பையா கோபம்
"மனோரஞ்சிதம்'' படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.
அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-
"மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.
ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!
எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.
4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!
"ரத்தக்கண்ணீர்'' படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!
10 முறை படம் எடுத்தும் காட்சி "ஓகே'' ஆகவில்லை.
நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். "ஒன் மோர் டேக்'' என்றேன்.
சுப்பையாவோ, "சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே'' என்றார்.
நான் விடவில்லை. "அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!'' என்றேன்.
ஆனால் சுப்பையா, தன் "விக்''கை கழற்றி எறிந்தார். "பிரேக்'' என்று கூறிவிட்டார்.
படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் "பிரேக்'' என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.
"மிஸ்டர் சுப்பையா! `பிரேக்' சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!'' என்றேன்.
சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு
நடைபெறவில்லை.சிவாஜிகணேசன் தீர்ப்பு
நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.
அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.
இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.
பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, "நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்' என்று நீங்கள் சொன்னது தவறு'' என்றார்.
ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.
"வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்'' என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.
அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, "சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!'' என்றார்.
சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.
சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.
படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.
மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.
சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.
மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.
அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.
நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். "முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?'' என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.
மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை
சுற்றியது."கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது'' என்று கிருஷ்ணன் - பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.
பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்?
சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.
மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!''
இவ்வாறு மணிசேகரன் கூறினார்.

தமிழில் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் மயில்சாமியின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பல்வேறு படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. இவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். அரசியல் நிகழ்வுகள் குறித்து தொடர்ச்சியாகக் கருத்து தெரிவித்து வருபவர். மேலும், பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

மயில்சாமியின் புதிய புகைப்படங்கள்
இந்நிலையில் இவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பிகில் படத்தில் விஜய் நடித்த ராயப்பன் கதாபாத்திரம் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். பிரபல காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, மயில்சாமியின் தோற்றத்திற்கு வடிவமைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
'மன்மதன்', 'வல்லவன்' போன்று யுவன் இசையில் சிம்பு இயக்கும் ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறேன் என்று பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருக்கிறார்.
நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் கடந்த 2004 ஆம் ஆண்டு 'மன்மதன்', 2006 ஆம் ஆண்டு 'வல்லவன்' படங்களை இயக்கினார் சிம்பு. இரண்டு படங்களும் வெற்றி பெற்றதோடு பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. இப்படங்கள் வெளியாகி 15 வருடங்களுக்குமேல் ஆனாலும் இப்போதும் பலருக்கு பிடித்த பாடல்களாக அமைந்துள்ளது.

'மன்மதன்', 'வல்லவன்', 'சிலம்பாட்டம்', 'வானம்' படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு-யுவன் கூட்டணி 'மாநாடு' படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின், முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா சிம்புடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்
அந்த பதிவில், 'நேரம்', 'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் 'மன்மதன், வல்லவன் போன்ற யுவன் ஷங்கர் ராஜா இசையுடன் சிம்பு இயக்கும் ஒரு படத்தை பார்க்க விரும்புகிறேன். நீங்கள் இரண்டு பேரும் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் இணைந்து பணிபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்கள் படைப்புக்கு ஒரு சிறிய ரசிகரிடமிருந்து ஒரு சிறிய வேண்டுகோள்' என்று கமண்ட் செய்துள்ளார்.
"பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்" என்று வரதட்சணை கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.
கேரளாவில் கடந்தவாரம் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்தும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும் கேரளா முழுக்க எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
இந்த நிலையில், கேரளாவின் முன்னணி நடிகர் மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு' என்று அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'ஆராட்டு' படக்காட்சியின் வீடியோவை வெளியிட்டு "வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்" என்று அழுத்தமுடன் வரதட்சணைக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.
Say No to Dowry. Let’s strive forward and create a Kerala where there’s justice and equality for women.#Equality#Aaraattu@unnikrishnanbpic.twitter.com/K24xojSJUF
— Mohanlal (@Mohanlal) June 26, 2021