என் மலர்
சினிமா

சிவகார்த்திகேயன்
கொரோனா பரவல் குறைவதால் அதிரடி முடிவெடுத்த ‘டாக்டர்’ படக்குழு
டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன், நெல்சன்
கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது. இதனிடையே இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு முயன்றது. சில பிரச்சனைகளால் அந்த முடிவை கைவிட்ட படக்குழு, தற்போது டாக்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் குறைந்து வருவதால், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் டாக்டர் படத்தை வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story






