என் மலர்
சினிமா செய்திகள்
எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், நிகிஷா பட்டேல், ஈஷா ரெப்பா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் முன்னோட்டம்.
ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படம் ஆயிரம் ஜென்மங்கள். எஸ்.எழில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல், ஈஷா ரெப்பா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஈஷா ரெப்பா, ஜிவி பிரகாஷ் குமார், சாக்ஷி
இந்த படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். திகில் கலந்த காமெடி படமாக இது உருவாகி உள்ளது. கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
சுந்தர பாண்டியன், தர்மதுரை, பிகில் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சௌந்தரராஜாவின் சமீபத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்த சௌந்தரராஜா, தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வருகிறார்.

நடிகர் சௌந்தரராஜா
இந்நிலையில் இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களில் நடிகர் சௌந்தரராஜா, கே.ஜி.எப் ஹீரோ யாஷ் ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் 19-ந் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: “மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.
பிறகு எப்படி, ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.
தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும். ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். இது இன்னும் கவலை அளிக்கிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல் நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவர்கள் வழக்கமான பரிசோதனை என்று சொன்னார்கள்?

அமெரிக்காவில் ரஜினிகாந்த்
மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது. நான் இதைப் பற்றி அதிகம் நினைக்க நினைக்க இது இன்னும் மோசமானதாக தோன்றுகிறது. மேலும் ரசிகர்களே, தயவுசெய்து ‘ரஜினிகாந்திற்கு விதிகள் பொருந்தாது’ போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம்.
அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப்பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்”. இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
US has banned direct travel from India for all Indian citizens from May onwards . No medical exceptions have been granted. How and why did @rajinikanth travel during this time? His sudden backing out of politics, now this... things are not adding up. Rajini Sir pl clarify.
— Kasturi Shankar (@KasthuriShankar) June 27, 2021
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

நரேன், லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில், பிரபல நடிகர் நரேன், விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். இதன்மூலம், கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடிகர் நரேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 2-வது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஷங்கர், தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

ஷங்கர் மகள் திருமணத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம்
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய ஆசிர்வாதம் மணமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும், அந்த அருமையான நிகழ்வை என்றும் தங்களால் மறக்க முடியாது என்றும் ஷங்கர் கூறியுள்ளார்.
மேலும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்..
My heartfelt thanks & gratitude to our Hon.Chief Minister @mkstalin for his precious time to grace us with his warm&loving presence at my daughter’s wedding & making it a memorable blessing.Thanks to Health Minister @Subramanian_ma &MLA @Udhaystalin for blessing the couple 🙏🙏🙏 pic.twitter.com/vaPNjuoaGv
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 28, 2021
நடிகை நதியா இதுவரை ஒரு படத்தில் கூட நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

கவுதமி, நதியா
தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை நதியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால், நடிகை நதியா, கமலுடன் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள புதிய பாடலை சிம்பு பாடியுள்ளதாகவும், இந்தப் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர் சிம்புவும் நெருங்கிய நண்பர்கள். இவர் இருவரும் இணைந்து பணியாற்றிய ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்திற்கும் யுவன் தான் இசையமைக்கிறார்.

ஆல்பம் பாடல் ஷூட்டிங்கில் யுவன்
இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை சிம்பு பாடி உள்ளார். இதில் காளிதாஸ் ஜெயராமும், மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். பிரபல நடன இயக்குனர் சாண்டி இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த ஆல்பம் பாடலின் வீடியோ விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ராட்சசன் திரைப்படம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.
விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்த இது, விஷ்ணு விஷாலின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. ராம்குமார் இயக்கி இருந்த இப்படத்தில், விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார்.
தமிழில் ஹிட்டான இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. அதன்படி ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். இந்தியிலும் ராட்சசன் படத்தை ரீமேக் செய்கின்றனர். இந்தியில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அக்ஷய் குமார்
முதலில் ஆயுஷ்மான் குரானா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ராட்சசன் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், ரமேஷ் வர்மா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை நயன்தாரா ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தனர்.

விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், ‘ஏன் நீங்கள் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், “திருமணத்துக்கு ரொம்ப செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, சமீபத்தில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். விரைவில் இந்தியிலும் அறிமுகமாக உள்ளார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர், ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவு செய்து, சுமார் 900 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அவரால் ராஷ்மிகாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில், அவரது வீட்டு விலாசம் கேட்டு விசாரித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த சிலர், இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷிடம் விசாரணை நடத்திய போலீசார், குடகு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அறிவுரை கூறி தெலங்கானாவுக்கு திருப்பி அனுப்பினர்.

நடிகை ராஷ்மிகாவின் டுவிட்டர் பதிவு
மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகாவுக்கு இதுகுறித்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது ரசிகரிடம், ‘டுவிட்டர்’ வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். தயவு செய்து இனி இது போல் செய்ய வேண்டாம்.
உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. இருப்பினும் ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் 11 பாடல்கள் உள்ளதாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், அவர் அடுத்ததாக ‘பாட்டு’ எனும் மலையாள படத்தில் நடிக்க உள்ளார். பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்குகிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

பாட்டு படத்தின் போஸ்டர்
காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான் இசையமைக்க உள்ளார். அவர் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும். இதன் தலைப்புக்கு ஏற்ப, படத்திலும் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. பாட்டு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐபிசி 376 படத்தின் முன்னோட்டம்.
நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நந்திதா
படத்தின் தலைப்பில் உள்ள ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டூடியோ சார்பாக எஸ்.பிரபாகர் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.






