search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்டு"

    கேரள வெள்ள நிவாரண நிதி திரட்ட கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். #KeralaFlood #SupremeCourt
    புதுடெல்லி:

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில், சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு பத்திரிகையாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். சமீபத்தில், பதவி உயர்வு பெற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தவர், நீதிபதி கே.எம்.ஜோசப். அவர், ஒரு மீனவனின் கதையை சொல்லும் ‘அமரம்’ படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார்.

    அப்போது, ‘கேளாவில் வெள்ளம் வந்தவுடன் முதலில் உதவிக்கு வந்தவர்கள், மீனவர்கள். அவர்களுக்கு இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்’ என்று அவர் கூறினார். பத்திரிகையாளர்கள் சிலரும் தங்கள் திறமையை காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதி திரண்டது. #KeralaFlood #SupremeCourt
    ×