என் மலர்tooltip icon

    சினிமா

    அதிகாரம் படத்தின் போஸ்டர்
    X
    அதிகாரம் படத்தின் போஸ்டர்

    அதிகாரம்

    துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘அதிகாரம்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை தயாரித்த கதிரேசனின் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அதிகாரம்’. இப்படத்திற்கு  வெற்றிமாறன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். 

    பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    ராகவா லாரன்ஸ்

    ‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை,  வெற்றிமாறன் உதவியாளர் துரை செந்தில்குமார் ஏற்றுள்ளார். எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றி படங்களை இயக்கிய இவர் முதல்முறையாக இப்படம் மூலம் ராகவா லாரன்ஸ் உடன் இணைகிறார். 

    இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×