என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை மஞ்சுவாரியரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

    மஞ்சு வாரியர்

    இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. வொண்டர் வுமன் தீமில் வேட்டை நாயுடன் கெத்தாக போஸ் கொடுத்து நிற்கும் அந்த புகைப்படம், பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
    'தி பேமிலி மேன் 2' போன்ற ஈழத் தமிழர்களுக்கு எதிரான படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட உலகிற்கு ஈழத்தமிழ் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.
    2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'தி பேமிலி மேன்' தொடரின் இரண்டாம் பாகம் கடந்த 3 ஆம் தேதி வெளியானது. முதல் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோரோடு இரண்டாம் பாகத்தில் சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தைப் பார்த்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் 'தி பேமிலி மேன் 2' தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று லண்டனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் முன்பு போராட்டம் செய்துள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து, 'தி பேமிலி மேன் 2' தொடரில் நடித்த தமிழ் நடிகர்கள் மற்றும் பங்களித்தவர்கள் குறித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அமைப்புகள் மொத்தமாக சேர்ந்து கடிதம் எழுதியுள்ளார்கள். 

    அதில், 'தி பேமிலி மேன் 2' வலைத் தொடர் "ஒரு கற்பனையான படைப்பு" என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தாலும், 'ஈழத் தமிழர்கள்', 'பருத்தித்துறை', 'ஈழம்' மற்றும் 'வட இலங்கை' ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை, காட்சிகள் ஈழம் போருக்கு மிகவும் ஒத்திருக்கின்றமை ஆனது ஈழத் தமிழர்களை மோசமான முறையில் காட்ட முனையும் நன்கு திட்டமிடப்பட்ட செயலாகவே இது தெரிகின்றது.

    ஈழத் தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று இந்தத் தொடர், பிரச்சாரம் செய்கிறது. மாறாக, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இன அழிப்பு போன்ற அநீதிக்கு எதிராக நாங்கள் உலக நாட்டு சட்டங்களின்படி போராடி வருகிறோம். ஆனால் இன்றும் விடுதலை பற்றிய எங்கள் எண்ணங்களை அடக்குவதற்கான நோக்கத்துடன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    போராட்டம்
    போராட்டம் செய்யும் மக்கள்

    விடுதலைக்காக போராடும் பெண்களின் வாழ்க்கை முறை தவறாகவும், கீழ்த்தரமாகவும், விசமத்தனமாகவும் புனையப்பட்டிருக்கிறது. காரியம் நடக்க வேண்டி தமிழ் பெண்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற அச்சுறுத்தலை வேறு அது உலக மக்களுக்கு விதைக்கிறது. தமிழக மக்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள். திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆதரவளித்துள்ளனர்.

    ஈழத் தமிழர்களை மோசமாக காண்பிக்கும் இது போன்ற திரைப்படங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும், இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்றும், தயாரிக்க வேண்டாம் என்றும் ஒரு சுற்றறிக்கையை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட வேண்டும்" என்று கடிதம் எழுதியுள்ளனர்.
    கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி, மாயநதி ஆகிய படங்களில் நடித்த நடிகர் அபி சரவணன் திடீரென்று தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
    கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர் அபி சரவணன். தற்போது சாயம், கும்பாரி மற்றும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.

    அபி சரவணன்

    இந்நிலையில் தனது பெயரை விஜய் விஷ்வா என்று மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் இன்று முதல் தனது சமூக வலைதள பக்கங்களிலும் தனது பெயரை மாற்றி கொண்டார்.
    பிரபல நடிகை டாப்சி கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் இயக்குனர் திடீரென்று மாற்றப்பட்டுள்ளார்.
    பாலிவுட் நடிகையான டாப்சி, இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேப்டனாக இருந்த கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் பயோபிக் படத்தில் டாப்சி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. 

    டாப்சி

    இப்படத்தை இயக்குனர் ராகுல் தொலக்யா இயக்குவதாக இருந்தது. தற்போது சில காரணங்களால் ராகுல் தொலக்யா இப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீஜிட் முகர்ஜி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் 'தலைவி' படத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தற்போது தமிழில் தலைவி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் தனது விருப்பத்தை கூறியுள்ளார். 

    கங்கனா ரனாவத்

    அதில், இந்தியா என்பது அடிமைப் பெயராக உள்ளது. இதனை மாற்றிவிட்டு மீண்டும் நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை சூட்ட வேண்டும். இந்தியா என்பது சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ஆங்கிலேயர் நமக்கு இந்தியா என்ற பெயரை வைத்துள்ளனர். எனவே பழைய பெயரை மாற்றிவிட்டு பாரத் என்று வைப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது ரசிகர் ஒருவரின் நீண்டநாள் ஆசையை நடிகர் கமல்ஹாசன் நிறைவேற்றியுள்ளார்.
    கமல்ஹாசனின் தீவிர ரசிகர் சாகேத். இவருக்கு மூளைப் புற்றுநோய் மூன்றாம் கட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனிடம் பேசவேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசை. இதுகுறித்து அவர் தனது நண்பர்களிடம் பகிர்ந்திருந்தார்.

    தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் சாகேத்தின் ஆசை குறித்துப் பகிர்ந்திருந்தனர். இதுபற்றிக் கேள்விப்பட்ட கமல்ஹாசன், சாகேத்துடன் வீடியோ காலில், அவரை அழைத்துப் பேசி இருக்கிறார்.

    கமல்
    ரசிகருடன் பேசும் கமல்

    இன்ப அதிர்ச்சிக்கு ஆளான சாகேத் மகிழ்ச்சியுடன் கமல்ஹாசனிடம் உரையாடி இருக்கிறார். 
    இயற்கை, ஈ, பேராண்மை படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் எஸ்.டி.புவி புதிய படத்தை இயக்கி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கத்தில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

    எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் எப்படி தமிழ் சினிமாவில் பேசப்பட்டதோ அதுபோல், அவருடைய உதவியாளராக பணியாற்றிய எஸ்.டி.புவி, புதிய படத்தை இயக்கி வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து அனைவரையும் கவர இருக்கிறார். 

    எஸ்பி ஜனநாதன்
    எஸ்பி ஜனநாதன் - எஸ்.டி.புவி

    இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்த எஸ்.டி.புவி, விஜயன் என்னும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். விஜயன் படத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி, ஆர்த்தி வினோ, லைலிதா, ஶ்ரீனிதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சங்கர், ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அலிமிர்ஷாக் இசையமைத்துள்ளார். ஓகே சினிமாஸ் வழங்க சுப்பிரமணிய சக்கரை, செந்திலரசு சுந்தரம், தொல்காப்பிய புவியரசு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ச.முருகானந்தம் இணை தயாரிப்பை கவனித்திருக்கிறார்.

    விஜயன்

    தலித் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதுவரை இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான புதிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

    நானே வருவேன்

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் அதர்வா, தற்போது புரட்சி வாலிபராக புதிய படத்தில் நடித்துள்ளார்.
    “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்தாக அட்ரஸ் என்னும் படத்தை இயக்கி இருக்கிறார்.

    உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அதர்வா, புரட்சி வாலிபராக நடித்திருக்கிறார். காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் அதர்வா, நட்புக்காக சிறிய வேடத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்.

    அதர்வா
    அட்ரஸ் படத்தின் போஸ்டர்

    இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருக்கிறார்.

    கலை உலகின் பொக்கிஷமாக திகழ்ந்த கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. காலத்திற்கும் அழியாத, மறக்க முடியாத பாடல்களை கொடுத்துச் சென்றவர் கவிஞர் கண்ணதாசன். இந்து மதத்தில் பிறந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

    பாரதியாரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட கண்ணதாசன், 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். நவீனங்கள், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்துள்ளார். சிறந்த படைப்புக்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.

    நல்ல பாடல் என்றாலே அது கண்ணதாசன்தான் எழுதியிருப்பார் என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் மனதில் அவரது பாடல்கள் ஆழமாக பதிந்திருந்தன. கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

    இதுபற்றி சில நிகழ்வுகளை கவிஞர் வாலி பதிவு செய்திருக்கிறார். நான் எழுதிய ‘காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்!’ பாடலை கண்ணதாசன் எழுதியதாக, அவ்வை நடராஜன் ஒரு விழாவில் பேசினார், என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே இவ்வாறு சொன்னபோது மக்கள் ஆரவாரம் செய்து ஆமோதித்தனர் என, வாலி குறிப்பிட்டார்.

    கவிஞர் வாலி

    இதேபோல், கண் போன போக்கிலே கால் போகலாமா?... என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதாக நடிகை மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.

    ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’ என்ற பாடலை கண்ணதாசன் எழுதியதாக பிரபல பட அதிபர் `ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்? என்றும் அவர் கூறியிருந்தார்.

    இவ்வாறு தனது பாடலை கண்ணதாசன் எழுதியதாக குறிப்பட்டதால் விசனப்படவில்லை என கூறிய வாலி, நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை என்றார். இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகம் என்று எடுத்துரைத்தார்.

    `வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருக்கிறார்.

    தமிழ்நாடு அரசு, கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மணிமண்டபம் அமைத்துள்ளது. 
    எஸ்.டி.புவி இயக்கத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஜயன்’ படத்தின் முன்னோட்டம்.
    ஓகே சினிமாஸ் வழங்க சுப்பிரமணிய சக்கரை, செந்திலரசு சுந்தரம், தொல்காப்பிய புவியரசு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் விஜயன். இப்படத்தை எஸ்.டி.புவி இயக்கி இருக்கிறார். இவர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

    இப்படத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி, ஆர்த்தி வினோ, லைலிதா, ஶ்ரீனிதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சங்கர், ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அலிமிர்ஷாக் இசையமைத்துள்ளார். ராஜேந்திரன், திருச்செல்வம் படத் தொகுப்பையும், ச.முருகானந்தம் இணை தயாரிப்பையும் கவனித்திருக்கிறார்கள். 

    விஜயன் படக்குழு
    விஜயன் படக்குழு

    தலித் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    டுவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிரபல இயக்குனர், நடிகர் விஜய்யை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படம் இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
    ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து ‘அஞ்சாதே,’ ‘நந்தலாலா,’ ‘யுத்தம் செய்,’ ‘முகமூடி,’ ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,’ ‘பிசாசு,’ ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம்வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

    மிஷ்கின்
    மிஷ்கின்

    இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் டுவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், “உங்கள் இயக்கத்தில் விஜய் நடித்தால் அவரை எந்த வேடத்தில் நடிக்க வைப்பீர்கள்” என கேள்வி எழுப்பினார். இதற்கு ‘ஜேம்ஸ்பாண்ட்’ என பதிலளித்தார் மிஷ்கின். 
    ×