என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணாவும், நந்தாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் யோகிபாபு விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளாராம். நடிகர் விஷாலும், யோகி பாபுவும் ஏற்கனவே பட்டத்து யானை, அயோக்யா, ஆக்‌ஷன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    விஷால்
    விஷால்

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
    மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ். 

    தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாராக உள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    மோகன்ராஜா, லூசிபர் படத்தின் போஸ்டர், சிரஞ்சீவி
    மோகன்ராஜா, லூசிபர் படத்தின் போஸ்டர், சிரஞ்சீவி

    இந்நிலையில், இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை தேர்வு செய்து உள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம், கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது தான் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
    மோகன்லால் நடித்துள்ள பிரம்மாண்ட படத்தை போட்டியின்றி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து  ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

    இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

    சுனில் ஷெட்டி, மோகன்லால், அர்ஜுன்
    சுனில் ஷெட்டி, மோகன்லால், அர்ஜுன்

    ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி ஓணம் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அதேநேரத்தில் இந்த படம் ரிலீசாகும் சமயத்தில் மற்ற படங்கள் எதுவும் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு சுமார் 600 திரையரங்குகளில் இப்படத்தை போட்டியின்றி திரையிட முடிவு செய்துள்ளனர்.
    இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.

    மிஷ்கின், ஆண்ட்ரியா
    மிஷ்கின், ஆண்ட்ரியா

    இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் டுவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், தான் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா சிறப்பாக நடித்துள்ளதாகவும், இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் இயக்குனர் மிஷ்கின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
    தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ஜகமே தந்திரம் படம், கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில், கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

    பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த விமர்சனங்கள் குறித்து படக்குழுவினர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த், தற்போது மறைமுகமாக பதிலளித்துள்ளார். 

    தயாரிப்பாளர் சசிகாந்தின் டுவிட்டர் பதிவு
    தயாரிப்பாளர் சசிகாந்தின் டுவிட்டர் பதிவு

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “வெற்றி பெறுவது மட்டும் வெற்றியல்ல, தோற்பது தோல்வியுமல்ல, தொடர்ந்து உங்கள் பாதையில் சென்றுகொண்டே இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கு வந்திருக்கும் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் பொருட்டே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
    சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
    கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பாடங்களில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளதால் அதிக பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி இப்படம் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 

    தனுஷ் 

    நடிகர் தனுஷின் மார்க்கெட் தற்போது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரந்து விரிந்துள்ளதால், இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். தற்போது இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். 
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷி கண்ணா, சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு படத்திலும், இந்தியில் இரண்டு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

    இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, சமீபத்திய பேட்டியில் சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது. ஆனாலும் பெண்கள் திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அனுஷ்கா, சமந்தா மாதிரி திறமையான நடிகையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும். 

    ராஷி கண்ணா
    ராஷி கண்ணா

    அவர்கள் இருவருமே தென்னிந்திய நடிகைகள் மீதான மக்களின் பார்வையை மாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்புவரை நடிகைகள் என்றால் பார்க்க அழகாக இருக்க வேண்டும். பாடல் காட்சிகளில் நடனம் ஆட வேண்டும் என்ற நிலைமைதான் இருந்தது. இப்போது நன்றாக நடிக்க தெரிய வேண்டும் என்ற நிலைமைக்கு மாறி இருக்கிறது”. இவ்வாறு ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
    விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி புதிய சாதனையை படைத்துள்ளது.
    நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.

    பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர், தற்போது டுவிட்டரில் புதிய சாதனையையும் நிகழ்த்தி உள்ளது. வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற சாதனையை ‘பீஸ்ட்’ பட போஸ்டர் படைத்துள்ளது. 

    பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
    பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இதற்கு முன் விஜய்யின் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது பீஸ்ட் பட போஸ்டர் 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகளை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது. 
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.

    விஜயகுமார் நடிகராகப் புகழ் பெற்ற பிறகு, அவர் காதலித்து மணந்தவர் நடிகை மஞ்சுளா.

    விஜயகுமார் -மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்று 3 மகள்கள்.

    ஸ்ரீதேவி தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    தனது குடும்பம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்பா வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். `கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்' என்றொரு பாடல் உண்டு. இந்த வழியில் வந்த சமூகம் எங்களுடையது. பட்டுக்கோட்டையை சுற்றிலும் உள்ள 32 கிராமங்களில் எங்கள் சமூகத்தவர்தான் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ.யின் வெற்றி இந்த 32 கிராமங்களில் உள்ளவர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    இந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்தே திருமணம் நடந்தது. மனைவி முத்துக்கண்ணு நான் நடிக்க வரும் முன்னரே எனக்கு மனைவி ஆனவர். என் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்.

    கலையுலகுக்கு வந்த பிறகு எனக்கு மனைவியான மஞ்சுளா, பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மனைவியர் இருவருமே சொந்த சகோதரிகள் போல் அன்பு செலுத்துகிறார்கள்.

    மஞ்சுளா பற்றி சொல்ல வேண்டும். திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி என முன்னணி கலைஞர்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடனும் கதாநாயகியாக நடித்தவர். இவர் கலை மூலம் வெளிப்பட்டாலும் இவரது பூர்வீகம் மற்ற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டிருக்கிறது.

    மஞ்சுளாவின் கொள்ளுத்தாத்தா சர் டி.பி.முத்துசாமி அய்யர் சென்னை ஐகோர்ட்டின் முதல் நீதிபதியாக பணியாற்றியவர். அதை நினைவுபடுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

    மஞ்சுளாவின் தாத்தா சர்.டி.ஏகாம்பரம் அய்யர், தமிழ்நாட்டின் முதல் வருமான வரி ஆணையராக இருந்தவர். அப்பா பானிராவ் ரெயில்வேயில் ஐ.ஜி.யாக இருந்தவர். இவர் ஆற்றிய பணி குறித்து இப்போதும் தென்னக ரெயில்வேயில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

    மூத்த மகள் கவிதா திருமணமாகி கணவர் ரவிசங்கருடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறாள்.

    அடுத்த மகள் டாக்டர் அனிதாவின் கணவர் கோகுலகிருஷ்ணா. இவர்கள் துபாயில் இருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த மகள்கள் வனிதாவும், பிரீதாவும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்டிருக்கிறார்கள்.

    வனிதா மணந்து கொண்ட ஆகாஷ், நடிகர். பிரீதாவின் கணவர் ஹரி, சினிமா டைரக்டர்.

    மகன் அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு திருமணமானது. மனைவி பெயர் ஆர்த்தி.

    பிள்ளைகள் திருமண விஷயத்தில் நான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற கண்ணோட்டத்தில் நடந்து கொண்டேன். ஜாதி மத பேதமின்றி ஒரு இந்தியனாக இருந்து காட்டவேண்டும் என்பது என் முடிவான எண்ணம். கலைத்துறைக்குள் வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, `என்னை ரசிக்கிற நேசிக்கிற இத்தனை மக்களும் என்னை சொந்தம் கொண்டாடியபோதே, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' சிந்தனைக்குள் வந்துவிட்டேன்.

    கோடிக்கணக்கில் நான் சம்பாதிக்காவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர் இதயங்களில் இருக்கிறேன். ஒரு கலைஞனான எனக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்? இந்த வகையில் என்னை கலை மூலம் அடையாளம் காட்டிய கலைத்தாய்க்கும் என் நன்றி.

    என்னை இந்த பூமிக்குத் தந்த என் பெற்றோரையும் நான் கொண்டாடி மகிழ்கிறேன். அப்பா எம்.என்.ரெங்கசாமி என் தன்னம்பிக்கைக்கு ஆணிவேராக இருந்தார். அவர் மட்டும் எனது சினிமா கனவுக்கு உயிர் கொடுக்காதிருந்தால், `நிச்சயம் நீ ஜெயிப்பாய்' என்று வாழ்த்தி சென்னைக்கு அனுப்பாதிருந்தால், பஞ்சாட்சரம் என்ற பெயருடன் கிராமத்தில் சாதாரண பிரஜையாகத்தானே இருந்திருப்பேன்.

    இந்த வகையில் கலை மூலம் என்னை உலகறியச் செய்த அப்பாவுக்கு எங்கள் ஊரில் 1995-ம் ஆண்டு ஒரு சிலை எழுப்பியிருக்கிறேன். அப்பா ரைஸ் மில் நடத்திய இடத்தில் தம்பி சக்திவேல் `எம்.என்.ஆர்' என்ற பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். ரைஸ் மில் இருந்த இடத்தில் என் பங்குக்கான பகுதியில் அப்பாவுக்கு சிலை வைத்திருக்கிறேன்.

    என் தாயாருக்கும் சிலை வைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அப்பா  95 வயதிலும், அம்மா 90 வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள். அது உலகப்பிரகாரம். என் இதயப் பிரகாரம் எப்போதும் என்னுடன் சிலையாக மட்டுமின்றி நிலையாகவும் இருந்து கொண்டிருப்பார்கள்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

    விஜயகுமார் இப்போது நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
    இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசும்போது, அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

    இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை.

    அஜித் - யுவன்

    இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுடன் பேசும் போது, வலிமை படத்தின் முதல் அறிமுக பாடல் எப்போதும் போல் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பதைத் தெரிவித்துள்ளார். அத்துடன் படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் இருப்பதாகவும், படத்தின் முதல் பாடலுக்கு 'கும்தா' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
    முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மகேந்திரன்
    மாஸ்டர் மகேந்திரன்

    அந்த வகையில், மாஸ்டர் படத்தில் குட்டி பவானி கதாபாத்திரத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன், விஜய் பேசும் வசனத்தை பேசி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து பல லைக்குகளை குவித்து வருகிறது.


    இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    நடிகர் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    பேனர்
    நடுக்கடலில் விஜய் பேனர்

    இந்த நிலையில் புதுவையை சேர்ந்த ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் பேனர் ஒன்றை வைத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ×