என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்துக் கூறி இருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் நடித்த ‘யூத்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு நடனமாடி தனது வாழ்த்தை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

    சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. 

    அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    சூர்யா ஜோதிகா

    அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு ரசிகர்கள் பலரும் குவிந்து கோஷம் போட்டுள்ளனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரசிகர்கள்
    கோஷம் போட்ட ரசிகர்கள்

    இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜய் வீட்டுக்கு வந்த ரசிகர்கள் சிலர், விஜய் அண்ணா.. வெளியில் வாருங்கள் என கோஷம் எழுப்பினர்.

    ரசிகர்கள்
    விஜய் ரசிகர்கள்

    பெண் ரசிகர்கள் சிலர் பரிசுப் பொருட்களுடன் விஜய் வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர். மேலும் சிலர் சாலையில் வரும், குடியிருப்புவாசிகளின் சொகுசு கார்களை மறித்து காருக்குள் விஜய் இருக்கிறாரா என்றும் ஆர்வமிகுதியால் பார்த்து வருகின்றனர். மேலும் விஜய் வெளியில் வந்து பார்க்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா, தன்னை பிரபல நடிகர் ஒருவர் செல்ல பெயர் வைத்து அழைத்து வருவதாக கூறி இருக்கிறார்.
    விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அப்போது, நடிகர் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று தான் அழைப்பார் என்று அவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார். மேலும் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று அழைத்தாலும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை ’மாலு’ என்றே அழைப்பார்கள் என்றும் கூறினார்.

    தனுஷ்
    தனுஷ் - மாளவிகா மோகனன்

    மாளவிகா மோகனன் தற்போது தனுஷுடன் ’D43’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்துள்ளது.
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    கமலின் பதிவு

    அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ் ராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார்.
    தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் கிருஷ்ணாவின் மகன் நரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் பதவி காலம் முடிவதால் அடுத்த சில மாதங்களில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரகாஷ்ராஜை எதிர்த்து பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

    பிரகாஷ் ராஜ்

    தெலுங்கு நடிகர் சங்கத்தில் மொத்தம் 900 ஓட்டுகள் உள்ளன. தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழரசன் படத்தின் முன்னோட்டம்.
    எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

    விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்
    விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்

    படம் குறித்து இயக்குநர் பாபு யோகஸ்வரன் கூறியதாவது: "இந்தப் படம் சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். இது பக்கா கமர்சியல் படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என கூறினார்.
    சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. 

    அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    விக்ரம் பிரபு
    விக்ரம் பிரபு

    அந்த வகையில், தற்போது நடிகர் விக்ரம் பிரபு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். நடிகர் விக்ரம் பிரபு கைவசம் பொன்னியின் செல்வன், டாணாக்காரன், பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்கள் உள்ளன.
    கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தலைவி படத்தின் தமிழ் பதிப்பிற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் சென்சார் தகவல்கள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    தலைவி படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    தலைவி படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 
    கலகலப்பு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய சுந்தர் சி-யும், ஜெய்யும் தற்போது மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    இதையடுத்து இவர் தயாரித்த படம் ‘நாங்க ரொம்ப பிஸி’. சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி இப்படத்தை இயக்கினார். இவர் ஏற்கனவே வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

    சுந்தர் சி, ஜெய்
    சுந்தர் சி, ஜெய்

    இந்நிலையில், சுந்தர் சி அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தையும் பத்ரி தான் இயக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சுந்தர் சி, ஜெய் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கலகலப்பு 2 படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்துக்கு பீஸ்ட் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இது தொடர்பாக பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

    அதில், நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கில பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ என வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார். மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? என நடிகர் விஜய்க்கு, வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.


    நடிகர் விஜய்யின் 47-வது பிறந்தநாளான இன்று, சினிமாவில் அவர் பாடிய பாடல்கள் குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.
    நடிப்பு, நடனம், ஆக்‌ஷன் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரும் விஜய்யின், வசீகர குரலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய்யை பாடகராக அறிமுகம் செய்தது இசையமைப்பாளர் தேவா தான். 1994-ல் வெளிவந்த ரசிகன் படத்தில் இடம்பெற்ற ‘பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி’ என்ற பாடலை பாடகி சித்ராவுடன் இணைந்து பாடியிருந்தார் விஜய்.

    இதையடுத்து விஷ்ணு, தேவா, காலமெல்லாம் காத்திருப்பேன், மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், நெஞ்சினிலே என தேவா இசையமைத்த படங்களில் தொடர்ந்து பாடிவந்த விஜய்க்கு, காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெறும் ‘ஓ பேபி பேபி’ பாடலை பாட வாய்ப்பளித்தார் இளையராஜா. அப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

    அதுவரை தன் படங்களில் மட்டும் பாடி வந்த விஜய், பின்னர் மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடினார். ரகுவரன் நடித்த ‘துள்ளி திரிந்த காலம்’ படத்தில் ஜெயந்தின் இசையில் ‘டக் டக் டக் டக்’ என்ற பாடலையும், யுவனின் இசையில் வேலை படத்திலும் பாடிய விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பெரியண்ணா படத்திற்காக பாடிய  2 பாடல்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

    விஜய்

    இதையடுத்து தமிழன் படத்தில் டி.இமானின் இசையில் ‘உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து பாடினார் விஜய். பகவதி படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘கொக்ககோலா பிரவுன் கலருடா’ என்ற பாடலையும், தேவி ஸ்ரீபிரசாத் இசையில் சச்சின் படத்தில் இடம்பெறும், ‘வாடி வாடி வாடி கைபடாத சிடி’, பத்ரி படத்தில் இடம்பெறும் ‘ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு’ ஆகிய பாடல்களையும் பாடினார். 

    2005-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை எந்த பாடத்திலும் பாடாமல் இருந்த விஜய். 2012-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்திற்காக ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ‘கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன்’ பாடல் மூலம் பாடகராக ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

    இதைத்தொடர்ந்து தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி, பைரவா ஆகிய படங்களில் தலா ஒரு பாடலை பாடியிருந்த விஜய், மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்களில் எந்த பாட்டும் பாடவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வேண்டும் என்ற அவரது நீண்டநாள் ஆசை பிகில் படத்தின் மூலம் நிறைவேறியது. அப்படத்திற்காக அவர் பாடிய வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 

    அண்மையில் வெளியான மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்திலும் நடிகர் விஜய் பாட்டுப்பாட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
    ×