search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பீஸ்ட் படத்தின் போஸ்டர்
    X
    பீஸ்ட் படத்தின் போஸ்டர்

    நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு

    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்துக்கு பீஸ்ட் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இது தொடர்பாக பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

    அதில், நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கில பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ என வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார். மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? என நடிகர் விஜய்க்கு, வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.


    Next Story
    ×