என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விபத்து காரணமாக மூக்கில் மூன்று தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும் அந்த தழும்பு மறைய கொஞ்ச காலம் ஆகும் எனவும் பகத் பாசில் தெரிவித்துள்ளார்.
    தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ள பகத் பாசில், மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். மலையன்குஞ்சு என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது, நடிகர் பகத் பாசில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகத் பாசில் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது: “படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக ஏற்பட்ட காயத்தில் இருந்து தேறி வருகிறேன். ஆபத்துக்கு அருகில் சென்று நான் உயிர் பிழைத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    பகத் பாசில்
    பகத் பாசில்

    கீழே விழும்போது எனது முகம் தரையில் மோதுவதற்கு முன்பு, ஏதோ ஒரு உந்துதலில் கைகளை தரையில் ஊன்றிவிட்டேன். இப்படி சமயோசிதமாக நான் செய்தது அதிர்ஷ்டம் என்று மருத்துவர் சொன்னார். விபத்து காரணமாக மூக்கில் மூன்று தையல்கள் போடப்பட்டு உள்ளன. அந்த தழும்பு மறைய கொஞ்ச காலம் ஆகும்” என பகத் பாசில் தெரிவித்தார்.
    தமிழ், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
    ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. 

    தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது. பாகுபலியில் ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் வந்த ரம்யாகிருஷ்ணனின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர்.

    சமந்தா
    சமந்தா

    பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 தொடரில் சமந்தாவின் போராளி கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனை கருத்தில் கொண்டு அவரை அணுகி உள்ளனர். ஆனால் நடிகை சமந்தா, இந்த வெப் தொடரில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 
    தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், இன்று 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை பற்றிய சிறப்பு தொகுப்பை இதில் காணலாம்.
    சினிமாவில் நகைச்சுவை, நடனம் ஆகியவற்றைத் தாண்டி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றிபெறுவதே ஒரு நடிகருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தரும். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு ‘தமிழன்’, ‘பத்ரி’, ‘பகவதி’ போன்ற படங்கள் ஆக்‌ஷன் ஹீரோ இமேஜை படிப்படியாக வடிவமைத்தன. 

    குறிப்பாக 2003-ல் வெளியான ‘திருமலை’ திரைப்படம் விஜய்யை ஒரு அசைக்கமுடியாத மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியது. பஞ்ச் வசனங்கள், வண்ணமயமான அறிமுகப் பாடல், மாஸான சண்டைக் காட்சிகள் என ஒரு பக்கா மாஸ் ஹீரோவாக விஜய்யை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது இந்தப் படத்தின் வெற்றி.

    விஜய்
    விஜய்

    2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விஜய் ஆக்‌ஷன் படங்களில் அதிகம் நடிக்கத் தொடங்கினார். ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’ ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்ததோடு, விஜய்யை ஒரு மாபெரும் மாஸ் நாயகனாக்கின. குறிப்பாக இந்தப் படங்களில் அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கின்றன. 
    சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
    நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    இந்நிலையில், மாநாடு படக்குழுவினர் டுவிட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினர். அதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

    அப்போது பேசிய சிம்பு, தான் குடி பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு காலம் ஆவதாக கூறினார். மேலும் பிரேம்ஜி  போன்றோர் உடன் இருந்தும் கூட குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம் என நகைச்சுவையாக பேசினார்.

    சிம்பு

    மாநாடு படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

    விஜயகுமார், அப்போது மிகவும் `பிசி'யான நட்சத்திரம். இரவும் பகலுமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு ஸ்டூடியோவிலேயே குட்டித் தூக்கம் போட்டு விட்டு, அடுத்த படப்பிடிப்புக்கு போய் விடுவார்.

    சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார். 1970-ல் மகள் கவிதா, 1973-ல் அடுத்த மகள் அனிதா, 1976-ல் மகன் அருண்குமார் என மூன்று வாரிசுகள்.

    1976-ல் ஏ.பீம்சிங் டைரக்ஷனில் ``உன்னிடம் மயங்குகிறேன்' படத்தில் நடித்த போதுதான் நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் படத்தில் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராமல் நிகழ்ந்தது அந்த கல்யாணத் திருப்பம்.

    அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.

    ``தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் சகோதரர்தான் ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே ``ஆசை 60 நாள்'' படத்தை தயாரித்தவர். ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் கதாநாயகியாக மஞ்சுளாவை `புக்' செய்திருந்தார். நான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.

    மஞ்சுளா அப்போது தெலுங்கிலும் பிரபலமாக இருந்தார். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ், சோபன்பாபு என மாற்றி மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் இந்தப் படத்தில் நடித்தபோது `லஞ்ச் பிரேக்'கில், சின்னச்சின்ன இடைவேளைகளில் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். பேச்சு பொதுவாக இருக்கும். பல நேரங்களில் சுவராசியமாக எங்கள் உரையாடல் போய்க் கொண்டிருக்கும்.

    இப்படித்தான் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மஞ்சுளாவிடம், ``மஞ்சு! உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்க என்ன சொல்கிறீங்க?'' என்று கேட்டு விட்டேன்.

    எதிர்பாராத அந்தக் கேள்வியில், மஞ்சுளாவும் திடுக்கிட்டுப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது.

    பொதுவாகவே, உள்மனதின் ஆழத்தில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் புதையுண்டு போயிருக்கும். மஞ்சுளாவிடம் பேசிப்பழக ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவரைப் பற்றி எண்ணங்கள் காதலாக மாறியிருந்தன.

    அதுதான் சட்டென வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது.

    என் கேள்விக்கு பதிலை மஞ்சுளாவின் அதிர்ச்சி முகமே எனக்கு சொல்லிவிட்டது. அவர் பதிலாகக் கூட எதுவும் சொல்லவில்லை.

    மறுநாள் எனக்கு மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்பு. செட்டுக்கு வந்தபோது அங்கே மஞ்சுளா ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை முடித்து விட்டு வந்தவரிடம் ``நேற்று நான் சொன்னதை யோசித்தீர்களா? பதில் ஒன்றும் சொல்ல வில்லையே'' என்றேன் மறுபடியும்.

    இப்போது மஞ்சுளாவின் முகம் எனக்கு பதில் சொல்லத் தயங்கும் `தர்மசங்கடமான' நிலையை உணர்த்தியது. மெதுவாக என்னைப் பார்த்தவர், ``யோசித்து சொல்கிறேன்''  என்றார். பிறகு அவரே, ``இந்த விஷயத்தில் நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா- அம்மாவிடமும் கலந்து பேச வேண்டும்'' என்றார்.

    அடுத்தடுத்து வந்த இரண்டொரு நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்தேன். அவர்களோ, ``எங்கள் பெண் விருப்பம் எதுவோ, அதுவே எங்கள் விருப்பமும். உங்கள் விருப்பம் பற்றி மஞ்சுளா எங்களிடம் சொன்னாள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியது எங்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே திருமண விஷயத்தில் எங்களுக்கும் சம்மதமே'' என்றனர்.

    திருமணத்தை எளிமையாக நடத்தினோம். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் மஞ்சுளா.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    படங்களில் நடிப்பது தொடர்ந்தாலும், ஒரே மாதிரியான கதைகள் விஜயகுமாரை சற்று யோசிக்க வைத்தது. அதனால் வித்தியாசமான கதைகளைத் தேட ஆரம்பித்தார்.

    இந்த சமயத்தில் வில்லனாக நடிக்கவும் அழைப்புக்கள் வந்தன. கதாநாயகனாக ரஜினி நடிப்பில் முன்னணியில் இருந்த நேரத்தில் அவரது படங்களில் கூட வில்லனாக? நடித்தார், விஜயகுமார்.

    தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியின் ``சவால்'', ``தியாகி'' போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்தார்.

    இப்படி வில்லன் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு விஜயகுமார் போனார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம், ``ஹீரோவாக நடித்து எங்களை சந்தோஷப்படுத்திய நீங்கள், இப்போது வில்லனாக நடிப்பது எங்களுக்கு வேதனை தருகிறது'' என்று சொல்ல, ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதை எடுத்துக் கொண்டு நடிப்பதையே நிறுத்தி விட்டார், விஜயகுமார்.

    மூன்றாண்டுகள் இந்த நிலை நீடித்தது. மறுபடியும் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்தது குணசித்ர வேடங்களில்.

    அதற்கான வாய்ப்பு, `ஜீ.வி.' பட நிறுவனம் மூலம் வந்தது
    விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் செகண்ட லுக் போஸ்டரை படக்குழுவினர் நள்ளிரவில் வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வந்தனர்.

    இதற்கிடையே, இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    மேலும், நள்ளிரவு 12 மணிக்கு 2வது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
    பிரபல நடிகர் ஹம்சவர்தனின் மனைவி சாந்தி ஹம்சவிர்தன் இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
    பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் (42) இன்று காலமானார். 

    இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நடிகர் ஹம்சவர்தனின் மனைவி
    நடிகர் ஹம்சவர்தனின் மனைவி 

    கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். 

    தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு நாளை மதியம் 2:30 மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
    ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
    ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பாட்ஷா. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் சின்னத்திரை தொடர்களையும் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இவர் ‛இன் த நேம் ஆப் காட் என் தெலுங்கு வெப்சீரிசை தயாரித்துள்ளார். பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் முத்துகுமார் எழுதி இயக்கியுள்ளார்.

    சுரேஷ் கிருஷ்ணா
    பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா

    வெப்சீரிஸ் குறித்து அவர் கூறுகையில், ‛‛காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் இந்த வெப்சீரிஸ். இத்தளத்தின் மீது இரண்டு ஆண்டுகளாகவே ஈர்ப்பு இருந்தது. நல்ல எதிர்காலம் உள்ள, சுதந்திரமான தளமிது. நினைத்ததை அப்படியே கொண்டு வரமுடிகிறது. இதை தயாரிக்க அல்லு அர்ஜுன் முக்கிய காரணம். அவருக்கு நன்றி. தெலுங்கில் வெளியாகியுள்ள இத்தொடர், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வரலாம்,'' என்றார்.
    விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தற்போது மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு 2வது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்த நடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் இன்று காலமானார்.
    சினிமா, சின்னத்திரை தொடர்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் அமர சிகாமணி (74). கவிஞராகவும் அறியப்பட்ட இவருக்கு திடீரென நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அமர சிகாமணி

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 21) அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருக்கு சியாமளா தேவி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
    நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான ரேஷ்மா தனது மகன் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
    விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்திருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
     
    இந்நிலையில் ரேஷ்மாவின் மகன் தந்தையர் தினத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இசையமைத்து தனது தாய் ரேஷ்மாவிற்கு வாழ்த்து கூறுகிறார்.

    இதற்கு ரேஷ்மா, "அன்பு, பொறுமை, இரக்கம், பாராட்டு, உந்துதல், குழந்தைகளுக்காக நாம் செய்யும் எல்லாவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இப்படி ஒரு மகன் பெற்றதற்கு நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். நாம் நம் குழந்தைகளிடம் நண்பனாகவும் ஆசிரியராகவும் இருக்கவேணும். என்ன ஆனாலும், நான் உன் கூடவே இருப்பேன்" என பதிவிட்டுள்ளார்.

    மெட்ராஸ், காலா, கபாலி படங்களை இயக்கிய இயக்குனர் பா.இரஞ்சித் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்களிடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

    அறிக்கை
    பா. இரஞ்சித் அறிக்கை

    சமீபத்தில், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்தார். தற்போது இயக்குனர் பா.இரஞ்சித், நீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும்
    நீலம் பண்பாட்டு மையம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×