என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன், சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் மற்றும் ஆணாதிக்கம் பற்றி கூறியிருக்கிறார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற வித்யாபாலன் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

''ஆணாதிக்கம் எல்லா துறைகளிலும் இருக்கிறது. அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது. எங்கள் வீட்டிலும் அது இருந்தது. பெண்கள் உரிமையை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இல்லை. பெண்கள் சமையல் அறைக்கு உள்ளேதான் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் சமையல் செய்யத்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்வது சரியல்ல. அவர்களால் அதையும் மீறி சாதிக்க முடியும்.

நிறைய பெண்கள் சாதித்து நிரூபித்து விட்டனர். எனக்கு சமைக்க தெரியாது. சிறிய வயதில் இருந்தே எனது அம்மா, ஒழுங்கா சமையலை கற்றுக்கொள் என்று சொல்வார்கள். நான் காதில் வாங்கிக்கவே மாட்டேன். அவசியமானால் நான் வேலைக்காரியை வைத்துக்கொள்வேன். இல்லையென்றால் சமையல் செய்ய தெரிந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என்பேன். எனக்கு பிடிக்காததை செய்ய சொல்லி என்னை வற்புறுத்தாதே என்று கறாராக சொல்லி விட்டேன்.''
இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.
புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கத்தில் அபி சரவணன், ஷைனி நடிப்பில் உருவாகி இருக்கும் சாயம் படத்தின் முன்னோட்டம்.
ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா, பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி, இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாயம் படத்தின் போஸ்டர்
நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில், கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். தற்போது போஸ்ட புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும்.
இயக்குனர் ஷங்கரும், இசையமைப்பாளர் அனிருத்தும் ஏற்கனவே ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது.
பின்னர் அடுத்தடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், தளபதி 65 போன்ற படங்கள் உள்ளன.

ராம்சரண், ஷங்கர்
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக ஷங்கர் இயக்க உள்ள தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஏற்கனவே இயக்குனர் ஷங்கரும், இசையமைப்பாளர் அனிருத்தும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

எல்வின்
இந்நிலையில், ராகவா லாரன்ஸின் தம்பி எல்வினும் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். எல்வினின் பிறந்தநாளான இன்று, அவர் நடிக்கும் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ராட்சசன், ஓ மை கடவுளே, மரகதநாணயம் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த அக்சஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தான், எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தையும் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
‘குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்தியவர் பாடகி தபு மிஷ்ரா.
ஒடிசாவில் புகழ் பெற்ற சினிமா பின்னணி பாடகியாக வலம் வந்தவர், தபு மிஷ்ரா (வயது 36). இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், அதற்கு பிந்தைய பாதிப்புகளால் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ந் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், 2 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்திய பாடகி தபுவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாடகி தபு மிஷ்ரா
தபு மிஷ்ரா
பாடகி தபு மிஷ்ராவின் தந்தை கடந்த மாதம் 10-ந் தேதி கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது தபு மிஷ்ராவும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் மரணமடைந்திருப்பது அவர்களுடைய குடும்பத்தினரை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பல்வேறு காரணங்களால் ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்த நயன்தாரா படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டு தெலுங்கில் கோபிசந்துக்கு ஜோடியாக அவர் நடிக்க ஒப்பந்தமான படம் ‘ஆறடுகுலா புல்லட்’.
இப்படத்தை முதலில் தமிழ் திரையுலகை சேர்ந்த பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக அவர் படத்திலிருந்து விலகிவிட்டதால், பின்னர் பிரபல தெலுங்கு இயக்குனர் பி.கோபால் படத்தை இயக்கினார். சுமார் ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த இப்படத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் கிடைத்தது.

நயன்தாரா, கோபிசந்த்
இருப்பினும் பல்வேறு காரணங்களால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதால், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்த பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம்.
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் கடற்கரையில் யோகா செய்து அசத்தி உள்ளார்.
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிவரை முன்னேறினார். இந்நிகழ்ச்சிக்கு பின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

ரம்யா பாண்டியன்
இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி, நடிகை ரம்யா பாண்டியன் கடற்கரையில் யோகா செய்தவாறு போடோஷூட் நடத்தி உள்ளார். வெள்ளை நிற மாடர்ன் உடையில் அவர் நடத்தி உள்ள, இந்த போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச யோகா தினத்திற்காக நடிகை ரம்யா பாண்டியன் நடத்திய இந்த ஸ்பெஷல் போட்டோஷூட்டுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கடந்த 2 மாதங்களாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளித்துள்ள தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை இன்று முதல் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா, கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்தவகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம்.
நம் மண்ணின் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள்... கொரோனா காலகட்டத்திலும் தீவிர செயலாற்றி அதன் எண்ணிக்கையை உதிர்த்தது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முனைப்பெடுக்கும் இந்த அரசின் செயல்பாடுகளை மிகவே இரசிக்கிறோம்.
சீரிய வேகத்தில் செயலாற்றும் முதல்வருக்கும் துறைசார்ந்த அரசு இயந்திரத்திற்கும் எம் நன்றிகள். கட்டுப்படுத்தப்பட்ட இக்கொரோனா காலகட்டத்திலிருந்து மக்கள் இயல்பை நோக்கித் திரும்ப கவனமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் வேளையில் திரைத்துறையும் மீள தளர்வுகள் அறிவித்தமைக்கு நன்றிகள்.

பாரதிராஜா, மு.க.ஸ்டாலின்
முடங்கிக் கிடந்து திரையரங்குகள் இல்லாமல் தவிக்கும் எம் படங்கள் ஒருபுறம்... பாதி படப்பிடிப்பை முடித்து மீதி முடிக்க காத்திருக்கும் படங்கள் ஒருபுறம்... என பத்துமாதம் சுமக்க வேண்டிய குழந்தையை இரண்டு வருடங்கள் சுமந்தது போன்ற வலி மறுபுறம் என இருந்த நிலைக்கு உங்கள் அறிவிப்பு பெருமலர்ச்சியைத் தந்திருக்கிறது. படப்பிடிப்பை நடத்திக்கொள்ளத் தந்த அனுமதி எங்களுக்கு மீண்டும் உயிர் பெற்றது போல உள்ளது.
மேலும் இயல்பு நிலை திரும்பும் தருணத்தில் தாங்கள் திரையரங்குகளையும் திறந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் தயாரிப்பாளர்களும் வழிகாட்டல் நடைமுறையைப் பின்பற்றி கொரோனா நோய்த் தொற்றை முறியடிக்கும் விதமாக தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவோம் என உறுதியளிக்கிறோம். செய்த அனைத்து நல்லவைகளுக்கும் நன்றிகளை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் தமன்னா, அடுத்ததாக கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தான் தற்போது, தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். முதலில் இப்படத்தை நார்தன் தான் இயக்கினார். பின்னர் அவர் விலகியதால் ஓபிலி கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தமாகி உள்ளார்.
சிம்பு படம் கைநழுவி போனதால், இயக்குனர் நார்தன், அடுத்ததாக கேஜிஎப் நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யாஷ், தமன்னா
இந்நிலையில், இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை தமன்னா ஏற்கனவே கே.ஜி.எப் படத்தில் யாஷுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கி உள்ளார்.

சுசீந்திரன்
கடந்த ஜூன் 14-ம் தேதி ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்பு நடத்திய சுசீந்திரன், அதன்மூலம் ரூ.5 லட்சம் நிதி திரட்டினார். அந்த தொகையை தான் தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக அவர் வழங்கி உள்ளார். இயக்குனர் சுசீந்திரன், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை.

மைதானத்தில் பதாகையுடன் அமர்ந்திருக்கும் அஜித் ரசிகர்
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண வந்த அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் என எழுதப்பட்ட பதாகையுடன் மைதானத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.
#ValimaiUpdate 😀#ThalaAjith#Valimai#Ajithkumar#WTCFinal21#INDvsNZ#Thalapic.twitter.com/vM53SwONOT
— TRENDS AJITH | ᴡᴇᴀʀ ᴍᴀꜱᴋ - ꜱᴛᴀʏ ꜱᴀꜰᴇ (@TrendsAjith) June 20, 2021
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம்.
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.
அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இதையடுத்து நடிகை நயன்தாரா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒருபடம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவையாம். தமிழில் தயாராகும் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






