என் மலர்tooltip icon

    சினிமா

    நயன்தாரா
    X
    நயன்தாரா

    சைலன்டாக 3 புதிய படங்களில் கமிட் ஆன நயன்தாரா

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம்.
    நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார். 

    அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

    நயன்தாரா

    இதையடுத்து நடிகை நயன்தாரா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒருபடம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவையாம். தமிழில் தயாராகும் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×