என் மலர்
சினிமா

மைதானத்தில் பதாகையுடன் அமர்ந்திருக்கும் அஜித் ரசிகர், அஜித்
கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை.

மைதானத்தில் பதாகையுடன் அமர்ந்திருக்கும் அஜித் ரசிகர்
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண வந்த அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் என எழுதப்பட்ட பதாகையுடன் மைதானத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.
#ValimaiUpdate 😀#ThalaAjith#Valimai#Ajithkumar#WTCFinal21#INDvsNZ#Thalapic.twitter.com/vM53SwONOT
— TRENDS AJITH | ᴡᴇᴀʀ ᴍᴀꜱᴋ - ꜱᴛᴀʏ ꜱᴀꜰᴇ (@TrendsAjith) June 20, 2021
Next Story






