என் மலர்
சினிமா

தமன்னா, யாஷ்
கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா?
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் தமன்னா, அடுத்ததாக கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தான் தற்போது, தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். முதலில் இப்படத்தை நார்தன் தான் இயக்கினார். பின்னர் அவர் விலகியதால் ஓபிலி கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தமாகி உள்ளார்.
சிம்பு படம் கைநழுவி போனதால், இயக்குனர் நார்தன், அடுத்ததாக கேஜிஎப் நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யாஷ், தமன்னா
இந்நிலையில், இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை தமன்னா ஏற்கனவே கே.ஜி.எப் படத்தில் யாஷுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






