என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    சூர்யா
    சூர்யா

    இந்நிலையில், சூர்யா 40 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 2-வது வாரத்தில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடித்து முடித்த பின், நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் மகன்களுடன் கடலில் பயணம் செய்யும் போது எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த 2004-ம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். 

    ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுள்ள நடிகர் தனுஷ், இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் மகன்களுடன் கடலில் பயணம் செய்யும் போது எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

    மேலும் அந்த பதிவில், தந்தையர் தின வாழ்த்துக்கள், குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ பசங்களா. எனது உலகத்தை அர்த்தமுள்ளதாக்கியவர்கள் நீங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.


    நடிகை மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார் பிரித்விராஜ். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

    மீனா
    மீனா

    இதனிடையே, மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணி ‘ப்ரோ டாடி’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது. பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாக இது அமைந்துள்ளது. குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கவுள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தில் நடிகை மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு
    விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இப்படத்தின் முதல் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அடுத்த பாடல் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த அப்டேட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற ஜூலை மாதம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது அவர் இதனை தெரிவித்தார்.
    நடிகர் மகத் தனது சமூக வலைதள பக்கத்தில் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு, அதில் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
    அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மகத். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். இவர் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

    நடிகர் மகத் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படங்கள்
    நடிகர் மகத் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படங்கள்

    கடந்த ஜூன் 7-ம் தேதி மகத் - பிராச்சி தம்பதிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது அந்த குழந்தைக்கு ‘அதியமான் ராகவேந்திரா’ என பெயர் சூட்டி உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மகத், குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
    இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகை சுருதிஹாசன், தனது தந்தை கமல்ஹாசன் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்
    கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாசுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    சுருதிஹாசனின் டுவிட்டர் பதிவு
    சுருதிஹாசனின் டுவிட்டர் பதிவு

    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன், இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, தனது தந்தை கமல்ஹாசன் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ளும் நபரும், உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா” எனக் குறிப்பிட்டுள்ளார்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன.
    தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

    கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன. தற்போது அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் 21ந் தேதி முதல், அதிகபட்சம் 100 பேருடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    படப்பிடிப்பு தளம்
    படப்பிடிப்பு தளம்

    மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  
    கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
    கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

    அந்த வகையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டு உள்ளது. லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து, 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். அப்போது எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.

    சுபாஸ்கரன்
    சுபாஸ்கரன் 

    லைகா புரோடக்சன்ஸ் நிறுவனம் தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தையும், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் டாப்சி, நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
    இந்தி பட உலகில், நம்பர்-1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை கங்கனா ரணாவத் பிடித்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது. அவர்கள் இருவருக்கும் போட்டியாக, தற்போது நடிகை டாப்சியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இவர் நடித்த 6 இந்தி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்தி பட உலகின் ராசியான கதாநாயகியாக டாப்சி உயர்ந்திருக்கிறார். 

    இதுவரை இரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த டாப்சி, இப்போது ரூ.8 கோடி கேட்கிறாராம். அவர் நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் இந்தி படம், ‘ரேஷ்மி ராக்கெட்.’ இது மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். விளையாட்டு துறையில் பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பேசும் கதை, இது. 

    டாப்சி

    இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர், தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் நந்தா பெரியசாமி. ஆகார்ஷ் குரானா இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரேணி ஸ்குருவாலா தயாரித்துள்ளார். இந்த படம் டாப்சியின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. இதைக் கேள்விப்பட்டு, ‘ரேஷ்மி ராக்கெட்’ படத்தின் தமிழ், தெலுங்கு உரிமையை திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
    மாணவர்களின் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை என்று நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம், நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்களிடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.

    இந்நிலையில், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். கருத்துக்களை neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 23ம் தேதிக்குள் அனுப்பும்படி கூறி உள்ளார். 

    நீட் தேர்வு

    ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும், மாணவர்களின் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை என்றும் சூர்யா கூறி உள்ளார்.


    கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள சூர்யா, இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 
    காமெடி நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வரும் யோகிபாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது நடிகர் யோகிபாபு அரண்மனை-3, கடைசி விவசாயி, டிக்கிலோனா உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

    ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய விசித்ராவின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் நடிகை விசித்ரா.

    தொடக்க காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். அதன்பின் சின்னத்திரையில் நுழைந்த விசித்ரா, வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு புனேவில் குடியேறினார்.

    விசித்ரா

    பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் விசித்ராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் நடிகை விசித்ரா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போனதாக குறிப்பிட்டுள்ளனர்.
    ×