என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை, பாத்ரூமில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.
    விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அமிர்தா ஐயரை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

    அந்த வகையில் சமீபத்தில் அவர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

    அம்ரிதா ஐயர்
    அம்ரிதா ஐயர்

    மேலும் போட்டோஷூட் எடுக்க இது தான் சரியான இடம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பல லைக்குகள் குவிந்துள்ளது.
    பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கேட்ட கேள்விக்கு நடிகர் கமல் தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.
    கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான 'தசாவதாரம்' திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆனதையொட்டி நடிகர் கமல் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், 'நேரம்', 'பிரேமம்' பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் 'படம் இயக்குவதில் 'தசாவதாரம்' பிஹெச்டி போன்றது என்றால், 'மைக்கேல் மதன காமராஜன்' டிகிரி கோர்ஸ் போன்றது. மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காட்சிகளை எப்படி எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?' என்று கேட்டிருந்தார்.

    அல்போன்ஸ் புத்திரன் - கமல்
    அல்போன்ஸ் புத்திரன் - கமல்

    அதற்கு, இன்று பதிலளித்துள்ள கமல், 'நன்றி அல்ஃபோன்ஸ் புத்திரன். சீக்கிரம் சொல்கிறேன். உங்களுக்கு எந்த அளவுக்கு கற்றுக்கொள்ள உதவும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் சொன்ன மாதிரி அது ஒரு மாஸ்டர் கிளாஸ். படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்தும் இதுகுறித்துப் பேசுவது எனக்கு புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது' என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
    நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ், தன்னுடைய மகள் எழுதிய கதையை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
    மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து 'லூசிபர்' படத்தை இயக்கினார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் பிரித்விராஜ்.

    இந்நிலையில் பிரித்விராஜ் தனது தனது சமூக வலைத்தள பக்கத்தில், தன் மகள் சிலேட்டில் எழுதிய ஒன்லைன் கதையை பகிர்ந்தார். இந்தக் கதை 2-ஆம் உலகப் போரின் பின்னணியில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தந்தை-மகன் இரட்டையரைப் பற்றியது. இந்த சிலேட்டின் படத்தை பகிர்ந்து, 

    பிரித்திவிராஜ் பகிர்ந்த கதை

    ``இந்த லாக்டவுனில் நான் கேட்ட சிறந்த ஒன்லைன் கதை இது. ஆனால் ஒரு பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் இதைப் படமாக்குவது சாத்தியமற்றது என்று தோன்றியதால், நான் மற்றொரு ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுத்தேன். ஆம், மீண்டும் கேமராவுக்குப் பின்னால் செல்ல இருக்கிறேன். விவரங்கள் விரைவில் வெளியாகும்" என்று தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
    திரைப்படங்களில் ஒன்றாக நடித்து சின்னத்திரையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வரும் ரஞ்சித், பிரியாராமன் இருவரும் திருமண நாளில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
    நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது, இருவரும் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றனர்.

    பிரியா ராமன் - ரஞ்சித்

    இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது திருமண நாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மாறி மாறி இருவரும் வாழ்த்துக்களை கூறிக் கொண்டுள்ளனர். திருமண நாளில் ஒன்று சேர்ந்த இந்த ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
    நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 படக்குழுவினர் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள்.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். 

    கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    இதற்கான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் விமர்சனம்.
    மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன ரவுடிசமும் செய்து வருகிறார். இதேசமயம் லண்டனில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ் என்ற இரண்டு மாபியா கும்பல் சண்டை போட்டு வருகிறார்கள்.

    அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக ஜோஜு ஜார்ஜை அழிக்க, ஜேம்ஸ் காஸ்மோ கும்பலிடம் இணைந்து வேலை பார்க்க மதுரையில் இருந்து லண்டன் செல்கிறார் தனுஷ். அங்கு ஜோஜு ஜார்ஜிடமும் மறைமுகமாக டீல் பேசி வரும் தனுஷ், ஒரு கட்டத்தில் அவருக்கு துரோகம் செய்து அவரை கொல்வதற்கும் காரணமாகிறார். 

    விமர்சனம்
    ஐஸ்வர்யா லட்சுமி - தனுஷ்

    அதன் பின் லண்டனில் லிட்டில் மதுரை என்று உருவாக்கி பரோட்டா கடை வைத்து ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் கொல்லப்பட்ட ஜோஜு ஜார்ஜின் ஆட்களான கலையரசன் உள்ளிட்ட சிலர் தனுஷை துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர்.

    தனுஷ் சுடப்படுவதற்கு காரணமாக ஐஸ்வர்யா லட்சுமி செயல்படுகிறார். இறுதியில் தனுஷ் உயிர் பிழைத்தாரா? ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு எதிராக செயல்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், தனக்கே உரிய நக்கல், நையாண்டி என்று நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பல காட்சிகளை சாதாரணமாக நடித்து அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். தனுஷின் உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் ஆகியவை ரசிக்க வைக்கிறது. 

    விமர்சனம்
    ஜேம்ஸ் காஸ்மோ - சரத் ரவி - தனுஷ்

    நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் அதைப் புரிந்துகொண்டு சிறப்பாகவே நடித்திருக்கிறார். பிளாஷ்பேக் சொல்லும் காட்சியில் பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்திருக்கிறார்.

    பீட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜேம்ஸ் காஸ்மோ, சிவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கதைக்கு சிறந்த தேர்வு. சிவதாஸ் அடியாளாக வரும் கலையரசன், தனுஷின் நண்பராக வரும் சௌந்தர ராஜா, சரத் ரவி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவனிக்க வைத்திருக்கிறார்கள். தனுஷின் அம்மாவாக வரும் வடிவுக்கரசி அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

    விமர்சனம்
    ஜோஜு ஜார்ஜ் 
    கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து அதில் ஈழத்தமிழர்கள், அரசியல், காதல் என படத்தை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சிவதாஸ் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் காட்சிகளை சேர்த்திருக்கலாம். 

    படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பல காட்சிகளை இவருடைய இசை தாங்கிப் பிடித்து இருக்கிறது. குறிப்பாக தனுஷ் துப்பாக்கி எடுத்து வரும் காட்சியில் பின்னணி இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா, மதுரை மண்ணின் அழகையும், லண்டன் அழகையும் மாறாமல் படம் பிடித்திருக்கிறது. 

    மொத்தத்தில் 'ஜகமே தந்திரம்' ஜகஜால கில்லாடி.
    சமீபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், ஆர்.பி.சவுத்ரி ஆவணங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சக்ரா திரைப்படத்தை தயாரிப்பதாக நடிகர் விஷால், ஆர்.பி.சவுத்ரியிடம் பணம் பெற்று இருந்தார். அதற்கு பிணையாக சில ஆவணங்களையும் கொடுத்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பணம் கொடுத்த பின்பும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அந்த ஆவணங்களை திருப்பி தர மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள ஆர்.பி.சவுத்ரி, அந்த ஆவணங்களை கொடுத்து வைத்திருந்த அவரது மேலாளர் சிவக்குமார் மறைந்து விட்டதாகவும், நடிகர் விஷால் முன்னெச்சரிக்கையாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது நல்ல விஷயம் என்றாலும் அதற்கு முன்பு தன்னிடம் ஒருமுறை ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்ற ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். இதுநாள் வரையிலான தன்னுடைய திரை அனுபவத்தில், பணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் ஆர்.பி.சவுத்ரி அப்போது குறிப்பிட்டுள்ளார். 

    விஷால் - ஆர்.பி.சவுத்ரி
    விஷால் - ஆர்.பி.சவுத்ரி

    விஷாலின் ஆவணங்களை சிவக்குமார் வேறு யாரிடமாவது கொடுத்து வைத்திருந்தால், அதனை உடனடியாக திருப்பி கொடுக்குமாறும், அதனை பயன்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி, டயானா அமீது, பார்வதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெமரீஸ்’ படத்தின் முன்னோட்டம்.
    சஸ்பென்ஸ்-திகிலுடன் கூடிய ‘மெமரீஸ்’ என்ற படம், அடர்ந்த காட்டுக்குள் படமாகி இருக்கிறது. அதில் கதாநாயகனாக வெற்றி நடித்து இருக்கிறார். இவர், ‘8 தோட்டாக்கள், ’ ‘ஜீவி’ ஆகிய படங்களில் நடித்தவர். அவருக்கு ஜோடியாக டயானா அமீது, பார்வதி ஆகிய 2 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள். சாம் பிரவீன் இயக்கியிருக்கிறார். சிஜூ தமீன்ஸ் தயாரித்து இருக்கிறார். 

    ‘மெமரீஸ்’ படத்தை பற்றி அவர் கூறியதாவது: ‘‘இது ஒரு சஸ்பென்ஸ் திகில் படம். காதலும் இருக்கிறது. மேலும் இது ஒரு புதிய முயற்சி. பெரும் பகுதி காட்சிகளை அடர்ந்த காட்டுக்குள் படமாக்கி இருக்கிறோம். 

    வெற்றி
    வெற்றி

    படத்தின் கதை எனவென்றால் ‘‘ஒரு வனப்பகுதி. அங்கு ஒரு பாழடைந்த கட்டிடம். அந்த இடத்தில் கதாநாயகன் கண் விழிக்கிறார். நினைவாற்றலை இழந்த அவருக்கு மருத்துவ உதவி கிடைக்கிறது. டாக்டரிடம் அவர், ‘‘நான் யார்?’’ என்று கேட்கிறார். ‘‘முதலில் உன்னை யார் என்று நீயே கண்டுபிடி’’ என்கிறார், டாக்டர்.

    தான் யார் என்று கண்டுபிடிக்க கதாநாயகன் மீண்டும் வனப்பகுதிக்குச் செல்கிறார். அவர் யார்? என்பதை கண்டுபிடித்தாரா? என்பது உச்சக்கட்ட காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது’’. இவ்வாறு சாம் பிரவீன் தெரிவித்துள்ளார்.
    நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

    தனுஷ், சாய் பல்லவி

    இந்நிலையில், நடிகர் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் சேகர் கமுலா இயக்க உள்ளார். நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடலுக்கு இவர்கள் இருவரும் ஆடிய நடனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
    பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள ‘கே.ஜி.எப். 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எப்’. இப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது. இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    யாஷ்

    ஆனால், தற்போதுள்ள சூழலில் திரையரங்குகளைத் திறப்பது எப்போது என்பது தெரியாமல் உள்ளது. அவ்வாறு திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கவே அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே, இந்தியா முழுவதும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்த பிறகு ‘கே.ஜி.எப். 2’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க உள்ள வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
    வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.

    சூர்யா, வெற்றிமாறன்
    சூர்யா, வெற்றிமாறன்

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படம் உருவாகி வருகிறது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மாஸ்டர் பட தயாரிப்பாளர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த படம் மாஸ்டர். பொங்கல் பண்டிகையன்று வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்தாண்டு திரையரங்குகளில் ரிலீசான படங்களில் அதிக வசூல் செய்த படமும் மாஸ்டர் தான். 

    இப்படத்தை நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். 

    மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்ட போஸ்டர்
    மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்ட போஸ்டர்

    வருகிற ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இதுவரை நடித்த 64 படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ×