என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தில் ராம்சரணை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது வெளியிடப்படவில்லை. குறிப்பாக இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி ஆலியா பட், மாளவிகா மோகனன் போன்றோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கியாரா அத்வானி
ஜூலையில் நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்களாம். நடிகை கியாரா அத்வானி நடிப்பில் கடைசியாக லட்சுமி படம் வெளியானது. இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜகமே தந்திரம்’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு, நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தனுஷின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில் ‘ஜகமே தந்திரம்’ பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “‘ஜகமே தந்திரம்’ படத்தில் சுருளி கதாபாத்திரத்தை வழங்கிய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. உங்களுடன் பணிபுரிந்தது மற்றும் மிகவும் கொடூரமான கேங்க்ஸ்டரான சுருளி கதாபாத்திரத்தில் நடித்தது என ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன். எல்லாப் புகழும் உங்களையும் உங்களது குழுவினரையும் சேரும்”. இவ்வாறு தனுஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற்போது ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’ படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள தனுஷ், பின்னர் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இதுதவிர ராட்சசன் பட இயக்குனர் ராம் குமாருடன் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் 2 படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தனுஷ், சேகர் கமுலா
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன்மூலம் நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
The two Men who crossed the barriers to Celebrate Cinema 🎥
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) June 18, 2021
The National Award Winners @dhanushkraja 🤩 & @sekharkammula 🔥 collaborating for a Tamil-Telugu - Hindi Trilingual FILM
Proudly Produced by #NarayanDasNarang & #PuskurRamMohanRao under @SVCLLP Banner ! pic.twitter.com/GcBkGqzd1R
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த படக்குழு, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் கடந்த 2 மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். முதலில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். இதற்கான செட் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
அறிவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள பார்டர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளார்.
‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இப்படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

பார்டர் படத்தின் போஸ்டர்
தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ளதால், ஜூலை மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பார்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிடும் முடிவை படக்குழு கைவிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.
மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.
ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்
2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.
அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.
பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.
அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.
எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.
ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.
மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.
எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.
இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.
சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.
படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.
அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து
கொண்டார்.
"அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.
"எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.
ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.
எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த
அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.
படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.
அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.
அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.
அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.
சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
ஜகமே தந்திரம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ஹாலிவுட் இயக்குனர்கள் தனுஷை வாழ்த்தி பதிவு செய்து இருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர்.
இப்படம் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அனைவரும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இருக்கும் நிலையில், அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அந்தோனி மற்றும் ஜோ ரூசோ ஆகியோர் தனுஷை வாழ்த்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
அந்தோனி மற்றும் ஜோ ரூசோ இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Super da thambi! Excited to be working with @dhanushkraja and good luck with #JagameThandhiram@karthiksubbaraj@StudiosYNot
— Russo Brothers (@Russo_Brothers) June 17, 2021
Watch the trailer HERE: https://t.co/ERrt7vfNy8
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் சல்மான் கான், தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பை மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் நடிக்கும் ஒரு படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு கபி ஈத் கபி தீபாவளி என முதலில் தலைப்பு வைக்க எண்ணியிருந்தனர்.


பூஜா ஹெக்டே - சல்மான் கான்
இந்த தலைப்புக்கு பிரச்னை வருமோ என எண்ணிய படக்குழு தற்போது பைஜான் என மாற்றி உள்ளனர். இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் பூஜா ஹெக்டே.
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பரத், தற்போது நடித்துள்ள படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
பரத் கதாநாயகனாக நடித்துள்ள ஒரு திகில் படத்துக்கு, ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக விவியாசன்த் நடித்து இருக்கிறார். படத்தை தயாரிக்கும் அனூப் காலித், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேஷ் கதை எழுத, சுனிஷ்குமார் இயக்கி இருக்கிறார். இவர் ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக இருந்தவர்.


திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம், தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி நடிகர் விஜய்சேதுபதி பேமிலி மேன் தொடரின் 3 ஆம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான தொடர் தி பேமிலி மேன் 2. இந்த தொடரில் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்தனர்.


இந்நிலையில் தி பேமிலி மேன் 3 தொடரில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. காரணம் விஜய் சேதுபதி சில மாதங்களுக்கு முன்னர் பேமிலி மேன் தொடரின் இயக்குனர்கள் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். அதில் ஷாகித் கபூரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த தொடர் பேமிலி மேன் தொடரின் மூன்றாம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்திய வடிவேலுவின் பட பிரச்சனையில் தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து இம்சை அரசன் 24ம் புலிகேசி பட வேலையை துவங்கினார்கள்.

சிம்புதேவன் இயக்க அந்த படத்தை சங்கர் தயாரித்தார். 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு அந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஈடுபட்டுள்ளாராம். இதனால், விரைவில் இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனை தீர்ந்து படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் நடிகை ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான கவிதா என்பவரின் மகன் சாய் ரூப் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் கவிதாவின் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். கொரோனாவால் மகனை பறிகொடுத்த நடிகை கவிதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

நடிகை கவிதா
நடிகை கவிதா, ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண்டவர் பூமி, அவள் வருவாளா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் கங்கா, நந்தினி உள்பட ஒருசில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






