என் மலர்
சினிமா செய்திகள்
லீனா மணிமேகலை இயக்கத்தில் அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் நடிப்பில் உருவாகி இருக்கும் மாடத்தி படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் லீனா மணிமேகலை தன் கருவாச்சி பிலிம்ஸ் பேனரில் எழுதி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் மாடத்தி. "ஏதிலிகளுக்குத் தெய்வமில்லை. அவரே தெய்வம்" என்ற மேற்கோளுடன் வரும் இப்படம் தமிழ்நாட்டின் தென்கோடியில், 'காணத்தகாதோர்' என்று அடையாளப்படுத்தப்படும் புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப் பேசுகிறது.
தலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய் துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமான அடக்குமுறைகளை இப்படம் தோலுரிக்கிறது. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று மற்றவர்களால் கருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில் படாமல் ஒளிந்து செல்லும் அவல நிலைக்குள்ளாகிய இம்மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலின, சாதி அடையாளங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்து அவதானிக்கும் ஒரு 'அ'தேவதைக் கதை மாடத்தி.

மாடத்தி படக்குழு
மாடத்தி படத்தின் திரைக்கதையை லீனா மணிமேகலையுடன் இனைந்து ரஃபிக் இஸ்மாயில் மற்றும் யவனிகா ஸ்ரீராம் எழுதியுள்ளனர். ஜெஃப் டோலென், அபிநந்தன் ராமானுஜம் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கூட்டுநிதியில் தொடங்கப்பட்ட இப்படத்தை பின்னர் பாவனா கோபராஜு, பியூஷ் சிங் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து தயாரித்துள்ளனர்.
அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் மற்றும் அருள் குமார் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்ட மற்ற கதாபாத்திரங்களாக அச்சமூக மக்களே பங்கேற்றுள்ளனர். தங்கராஜ் படத்தொகுப்பு செய்ய தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். மோகன மகேந்திரன் கலை இயக்கம் செய்ய, இப்படத்திற்கான இசையை கார்த்திக் ராஜா அமைத்துள்ளார். பவிசங்கர் விளம்பர வடிவமைப்பு செய்துள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்ற இப்படம் வருகிற ஜூன் 24-ந் தேதி நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே அட்லீயுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.
இதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

ஷாருக்கான், அட்லீ
இந்நிலையில், அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே அட்லீயுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நயன்தாரா நடித்துள்ள படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படத்தை வருகிற ஜூலை 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நெற்றிக்கண் படத்தின் போஸ்டர்
நடிகை நயன்தாராவின் சம்பளம் தவிர்த்து இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.5 கோடியாம். ஆனால் தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ரிலீசுக்கு முன்பாகவே ரூ.20 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளனர். நயன்தாரா நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்கபட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்கு சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி, இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் கோரி இருந்தார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் வருகிற ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனர். நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகை ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர் ரேவதி சம்பத் (வயது 27). இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘பட்னாகர்’ எனும் மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இவர் தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என, 14 பேருடைய பட்டியலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில் “இவர்கள் என்னை பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்வு ரீதியாக துன்புறுத்தியவர்கள்” எனக் குறிப்பிட்டு 14 நபர்களின் பெயர்களை வரிசையாக பட்டியலிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
1) ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
2) சித்திக் (நடிகர்)
3) ஆஷிக் மஹி (புகைப்படக் கலைஞர்)
4) சிஜூ (நடிகர்)
5) அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
6) அஜய் பிரபாகர் (டாக்டர்)
7) எம்.எஸ்.பாதுஷ் (துஷ்பிரயோகம் செய்தவர்)
8) சவுரப் கிருஷ்ணன் (இணையதளத்தில் கேலி செய்தவர் )
9) நந்து அசோகன் ( டி.ஒய்.எப்.ஐ யூனிட் கமிட்டி உறுப்பினர், நெடுங்கர்)
10) மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
11) ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் கேக்குகள் (விளம்பர இயக்குனர்)
12) ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்)
13) சாருன் லியோ (ஈஎஸ்ஏஎப் வங்கி ஏஜெண்ட், வலியத்துரா)
14) பினு (சப் இன்ஸ்பெக்டர், பூந்துரா போலீஸ் நிலையம், திருவனந்தபுரம்)

ரேவதி சம்பத்
நடிகை ரேவதி சம்பத் குற்றம்சாட்டியிருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பும், விளம்பரத்திற்காக அவர் இப்படி செய்வதாக மற்றொரு தரப்பும் விமர்சனம் செய்து வருகிறது. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடிகர் அஜித் ஹீரோவாக நடித்து வருகிறார்.
‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது.
அதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தனது அடுத்தபடத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அஜித், ஹெச்.வினோத்
இந்நிலையில், வலிமை படத்துக்கு பின் அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளாராம். குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில், நடிகர் அஜித் இரண்டே மாதத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் அஜித்தின் புதிய பட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு, விரைவில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில், நடிகர் சிம்பு விரைவில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சர்வதேச அளவில் பிரபலமான 'சர்வைவர்' நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் விதிப்படி, ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, அவர்களுக்கு விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அவை அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து இறுதிவரை தாக்குப்பிடிக்கும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில் வெற்றி பெறுபவருக்கு பெரும் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
ஏற்கனவே நடிகர் கமல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும், நடிகர் விஜய் சேதுபதி ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஷமன் மித்ரு, இன்று காலை உயிரிழந்தார்.
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற தொரட்டி படத்தின் மூலம் நாயகனகாக அறிமுகமானவர் ஷமன் மித்ரு. இப்படத்தை அவரே தயாரித்திருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் ஷமன் மித்ரு, கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 43. நடிகர் ஷமன் மித்ருவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், மோக்ஷா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளது.

ஷமன் மித்ரு
சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான அவர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாலும், தொரட்டி படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தான் பிரபலமானார். அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கிய நேரத்தில் அவர் கொரோனா தொற்றால் மரணமடைந்தது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஷமன் மித்ருவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன.
இதனிடையே, நடிகை சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும், இதற்காக அவருக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், நடிகை சமந்தா தரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர் மீண்டும் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை, அது வெறும் வதந்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போதைக்கு படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக சமந்தாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள கனிகா, வரலாறு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கனிகா. சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கனிகா, திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில், நடிகை கனிகா, விரைவில் தமிழ் சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேவையானி நடித்த கோலங்கள் தொடரை இயக்கியதன் மூலம் பிரபலமான திருச்செல்வம் தான், தற்போது கனிகா நடிக்க உள்ள சீரியலை இயக்க உள்ளாராம். பட வாய்ப்பு இல்லாததால் நடிகை கனிகா சீரியலில் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா 2-வது அலை குறைந்த பின் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

விஜய், நெல்சன்
இந்நிலையில், விஜய்யின் 65-வது படத்துக்கு ‘டார்கெட்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழுவினர் டார்கெட் தலைப்பு உண்மைதானா என்பதை உறுதிப்படுத்தவில்லை. விஜய்யின் பிறந்த நாளையொட்டி வருகிற 22-ந் தேதி படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-
"1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.
நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே''
என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,
"நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.
அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.
அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.
பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.
"சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
"அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.
உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.
மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக இருந்தது.
நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.
சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.
மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.
அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.
அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.
சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.
சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.
பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.
மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.
படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.
அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.
என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.
அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.
எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.
திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.
நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்யூலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.
நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.
"ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.
அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.
எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!
இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.
சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.
நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.
"சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று
சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.
நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.
சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.
பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.






