என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.


ஜான்வி கபூர்
இன்று ஜான்வி, கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, அந்த ஆண் நண்பர் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய 31 வது படத்தில் நடித்து வரும் நடிகர் விஷால், ஐதராபாத் படப்பிடிப்பில் ரவுடிகளிடம் அடிவாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளை பெற்றார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அங்கு விஷால் 31 படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்கள்.
அங்கு நடைபெற்ற சண்டைக்காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகர் விஷால் ரவுடிகளிடம் அடிவாங்குவது போல் காட்சி எடுத்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாராவுடன் விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.


நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்
அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் பல படங்களை கைவசம் வைத்து இருக்கும் வரலட்சுமி சரத்குமார், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.
தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இந்நிலையில் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சாதனை படைத்து இருக்கிறது.
நடிகர் தனுஷ் தற்போது ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டு வாரம் அமெரிக்காவில் ஓய்வெடுக்க உள்ள தனுஷ், அதன்பின் சென்னை திரும்ப இருக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் சமீபத்தில் கோலி சோடா குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதில் ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ஹே கோலி சோடாவே’ என்ற பாடல் வரிகள் தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது இந்த புகைப்படத்திற்கு 1 மில்லியன் லைக்குகளை குவித்து உள்ளது. கோலிவுட்டில் எந்த நடிகருக்கும் இதுவரை இவ்வளவு லைக்குகள் குவிந்தது இல்லை. இதை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பிறந்தநாளில் இரட்டை விருந்து கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அன்றைய தினத்தில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 66' தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் விஜய் கைகோர்க்க உள்ளதாகவும், படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும், விஜய் தற்போது நடித்து வரும், 'தளபதி 65' படத்தின் போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வர இருப்பதால் இரட்டை விருந்து கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபல பாலிவுட் நடிகை ஒருவர், ரூபாய் 20 ஆயிரம் செலவில் மண் குளியல் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா, லெஜண்ட் சரவணன் ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரும், லெஜண்டும் டூயட் பாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.


நடிகை ஊர்வசி ரவ்தெலா
இந்நிலையில் ஊர்வசி ரவ்தெலா மட் பாத் அதாவது மண் குளியல் எடுத்திருக்கிறார். தான் மட் பாத் எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஊர்வசி. அந்த மட் பாத்திற்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகையாக இருக்கும் திரிஷாவிடம் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தள பக்கத்தில், ரகசியத்தை கேட்டு பதிவு செய்திருக்கிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. கொரோனா வைரஸ் பிரச்சினையால் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் ஹேர்கட் செய்திருக்கிறார். தன் புது ஸ்டைலை ரசிகர்களிடம் காட்ட நினைத்த திரிஷா செல்பி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.


திரிஷாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஹேர்கட் சூப்பர், எவர் கிரீன் ஹீரோயின், வயது ஆக ஆக அழகு கூடிக் கொண்டே போகிறது என்று புகழ்ந்துள்ளனர். நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்னும் அப்படியே இருக்கிறீர்களே, அந்த ரகசியத்தை மட்டும் சொல்லிடுங்கள் திரிஷா என சிலர் கேட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்திற்காக சத்தமே இல்லாமல் வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் ஒரு செட் அமைக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு சின்ன குழுவுடன் இரண்டு வாரங்கள் வரை ஷூட்டிங்கைத் தொடர முடிவெடுத்துள்ளர்கள்.

பூஜா ஹெக்டே - விஜய்
இந்த செட்டில் பாடல் காட்சியை படமாக்க இருக்கிறார்கள். இதில் பூஜா ஹெக்டேவுடன் நடனமாட இருக்கிறார் விஜய். படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் வருடப்பிறப்புக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கி இருக்கும் தோப்புக்கரணம் படத்தின் முன்னோட்டம்.
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் தோப்புக்கரணம். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான கைலா படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
தோப்புக்கரணம் படத்தில் கோகன், அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

தோப்புக்கரணம் படக்குழு
இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இந்தியாவாக வலம் வந்த ஸ்டீவ் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தின் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தபடத்தின் கதை மற்றும் திரைக்கதை வசனத்தை கென்னடி ப்ரியன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவை பரணி செல்வம் கவனிக்க, படத்தொகுப்பை லான்சி மோகன் தொகுக்கிறார்.
ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பெல் பாட்டம்’.
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள இந்தி படம் ‘பெல் பாட்டம்’. 1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமாருடன் வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கொரோனா முதல் அலையின்போதே லண்டனில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டனர். பின்னர் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில், கொரோனா 2-வது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. இதனால் இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை கைவிட்டுள்ளனர்.

பெல் பாட்டம் படத்தின் போஸ்டர்
ஜூலையில் திரையரங்குகள் திறப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதால் ‘பெல் பாட்டம்’ படத்தை, ஜூலை 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘பெல் பாட்டம்’ படக்குழுவினரின் இந்த முடிவு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி லைகா தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் முடங்கியதால், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி வருகிறார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இது சர்ச்சையானது.
இதனிடையே, ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி லைகா நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சினையில் இருதரப்புக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஐதராபாத் ஐகோர்ட்டிலும் லைகா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்க உள்ள தெலுங்கு படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.






