என் மலர்
சினிமா

தனுஷ்
சாதனை படைத்த தனுஷின் புகைப்படம்... கொண்டாடும் ரசிகர்கள்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சாதனை படைத்து இருக்கிறது.
நடிகர் தனுஷ் தற்போது ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டு வாரம் அமெரிக்காவில் ஓய்வெடுக்க உள்ள தனுஷ், அதன்பின் சென்னை திரும்ப இருக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் சமீபத்தில் கோலி சோடா குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதில் ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ஹே கோலி சோடாவே’ என்ற பாடல் வரிகள் தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது இந்த புகைப்படத்திற்கு 1 மில்லியன் லைக்குகளை குவித்து உள்ளது. கோலிவுட்டில் எந்த நடிகருக்கும் இதுவரை இவ்வளவு லைக்குகள் குவிந்தது இல்லை. இதை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
Next Story






