என் மலர்
சினிமா செய்திகள்
இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதையை தனுஷ் பட இயக்குனர் படமாக எடுக்க உள்ளார்.
கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் செஸ் மேட் கோவிட் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் கலந்துகொண்டு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாடினார். அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பேசிய ஆமிர் கான், விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார்.

விஸ்வநாதன் ஆனந்த், இயக்குனர் ஆனந்த் எல் ராய்
ஏற்கனவே, விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கை படமாக்கும் பணியில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இறங்கி உள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது நடிகர் ஆமிர் கான் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதால், அவரையே இதில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கொரோனா தொற்று 2வது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளார்களாம்.
பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷிவானி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஷிவானி நாராயணன்
இந்நிலையில், நடிகை ஷிவானி கருப்பு நிற சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். வைரலாகி வரும் நடிகை ஷிவானியின் இந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.
மும்பையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழ் பட நடிகை ஒருவர் காதலருடன் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெண் ஒருவர் ஆண் நண்பருடன் சந்தேகப்படும் படியாக அங்குள்ள அறைக்கு சென்றதை கண்டனர். இதையடுத்து போலீசார் அந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நடிகை நைய்ரா ஷா என்பவர் சிகரெட்டில் சரஸ் என்ற போதைப்பொருளை புகைத்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் நடிகை நைய்ரா ஷா மற்றும் அவரது காதலரை பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது.

நைய்ரா ஷா
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த நடிகையும் அவரது காதலரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். நடிகை நைய்ரா ஷா, மிருகா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார் சீனு ராமசாமி. சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகவில்லை.
இதையடுத்து விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பின்னர் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

விஜய் சேதுபதி, சீனு ராமசாமி
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர்கள் இருவரும் 5-வது முறையாக இணையும் படத்தை, அசுரன், கர்ணன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தான் தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் பார்வதி, தமிழில் பூ, சென்னையில் ஒருநாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். முதலில் இதனை மறுத்த வேடன் பின்னர் தவறை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டார். ஆனாலும் அவர் தவறை வெளிப்படையாக ஏற்கவில்லை என்று கண்டங்கள் எழுந்தன.
இந்த நிலையில் வேடன் பதிவை தமிழில் பூ, சென்னையில் ஒருநாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி முதலில் ‘லைக்' செய்திருந்தார். பின்னர், பாலியல் குற்றவாளியை ஆதரிப்பதா? என்று அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதும் டிஸ்லைக் செய்துவிட்டார்.

பார்வதி
இதுகுறித்து நடிகை பார்வதி விளக்கம் அளித்துள்ளதாவது: “வேடன் மீது குற்றம்சாட்டிய பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேடனின் மன்னிப்பு பதிவு பாராட்டும்படியானது இல்லை என்பதை அறிவேன். வேடன் கேட்ட மன்னிப்பு பதிவு சரியானது அல்ல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்த்ததும் எனது 'லைக்'கை நீக்கி தவறை திருத்தி விட்டேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்பேன். எனது செயலால் பாதிக்கப்பட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்
மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.
"சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.
நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.
இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.
அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-
"சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.
திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.
சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை
விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.
அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.
பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.
நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.
டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர், "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.
மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.
பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்
னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.
அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.
"கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''
"ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.
பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''
இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷாலு ஷம்மு, ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
தமிழில் 2013ல் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அதன் பிறகு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். தற்போது பவுடர், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.

ஷாலு ஷம்முவின் பதிவு
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஆபாசமாக கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு தயங்காமல் பதிலடி கொடுத்து இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் சிவாஜி. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் 14 வருடத்திற்கு முன் இதே நாளில் வெளியானது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார்.

ரஜினியுடன் வடிவுக்கரசி, மணிவண்ணன், சாலமன் பாப்பையா, ராஜா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

சிவாஜி படத்தில் ரஜினி
இப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதை கொண்டாடி வருகிறார்கள்.
முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் பிரபல தொலைக்காட்சியில் முதல் முறையாக தொகுப்பாளராக பணியாற்ற இருக்கிறார்.
முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் தான் டிவி பக்கம் செல்வார்கள். ஆனால், போகப் போக அந்த நிலை மாறியது. கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால், விஜய் சேதுபதி என பலரும் டிவி பக்கம் பெரிய ஷோக்களை தொகுத்து வழங்கினார்கள்.

விஜய் சேதுபதி அடுத்தாக 'மாஸ்டர் செப்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் 'நான் ஈ' சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

தமன்னா
தமன்னா இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதில்லை. முதல் முறையாக இந்த 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார்.
அவன் இவன் படத்திற்குப் பிறகு ஆர்யா - விஷால் இணைந்து நடித்து வரும் எனிமி படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எனிமி படத்தின் டீசர் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசையால் பல ரசிகர்களைக் கவர்ந்த யுவன் சங்கர் ராஜா, ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்து நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்.
தனது தந்தையே போலவே, இசையில் தனக்கென ஒரு பாணி அமைத்து, கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார் யுவன். சிம்புவின் மாநாடு, அஜித்தின் வலிமை, மன்னவன் வந்தானடி, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பதிவு
இவர் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதிலளித்து வருவார். தற்போது ஒரு புகைப்படத்திற்கு கீழே ரசிகர் ஒருவர் "தல மூணு மாசமாக கேக்கிறேன், ப்ளீஸ் ஒரு லவ் யூ ப்ரோ சொல்லுங்க" என பதிவிட்டிருந்தார். இதற்கு யுவனும் "லவ் யூ ப்ரோ" என ரிப்ளை செய்துள்ளார். யுவனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது.