என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் திறமைக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
    விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரெபா மோனிகா. பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் ’எப்ஐஆர்’, ’மழையில் நனைகிறேன்’ ஆகிய படங்களிலும் கன்னட, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

    விஜய்யுடன் ரெபா மோனிகா
    விஜயுடன் ரெபா மோனிகா

    இந்த நிலையில் ரெபா மோனிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த படத்தின் பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டே பாடி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளார். ரெபா மோனிகாவின் இந்த இசைத்திறமைக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் சமூக வலைத்தள பக்கத்தில் இல்லை என்று முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். மாஸ்டர் படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இவர்கள் சமூக வலைத்தளத்தில் இருப்பதை அறிந்து விஜய் ரசிகர்கள் உட்பட பலர் பின் தொடர ஆரம்பித்தார்கள்.

    விஜய்
    மகன் மகளுடன் விஜய்

    ஆனால், உண்மையில் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா இருவரும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை விஜய் தரப்பில் உறுதி செய்து இருக்கிறார்கள். இவர்கள் பெயரை கொண்ட சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் போலியானவை என்றும் கூறி இருக்கிறார்கள்.
    மிக மிக அவசரம் என்ற படத்தை வெளியிட்ட லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் சந்திரசேகர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    ஶ்ரீ பிரியங்கா நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் மிக மிக அவசரம். சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய இப்படத்தை, லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் சந்திரசேகர் வெளியிட்டு இருந்தார். இந்த படம் பாதுகாப்புக்கு சாலையில் நிற்கும் ஒரு பெண் காவலரின் பிரச்சினைகள் பற்றி பேசியது. சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நிறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கு பாராட்டுகள் குவிந்தது. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்கு நன்றி தெரிவித்து ரவீந்திரன் சந்திரசேகர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
     
    கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தை காண நேரிட்டது. சிறு முதலீட்டில் பெரும் வலியை சொன்ன அந்த படத்தை வாங்கி வெளியிட்டோம். ஆனால் இப்படம், வணிக ரீதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, மிக மிக அவசியமான ஒரு திரைப்படம் மக்களை சென்று சேரவில்லையே என்பதுதான் எங்கள் குழுவின் மிகப்பெரும் வருத்தமாக இருந்து வந்தது. இந்த நேரத்தில் “முதல்வர் உள்ளிட்ட வி.ஜ.பி.க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்கிற முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து காவல்துறை டி.ஜி.பி அவர்களின் உத்தரவால் நடைமுறைக்கும் வந்திருக்கிறது என்கிற செய்தி, இந்த படம் சார்ந்து மனதில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.
     
    இந்த அறிவிப்புக்கு மிக மிக அவசரம் படக்குழுவின் சார்பாகவும், அனைத்து பெண் காவலர்களின் சார்பாகவும், லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாகவும் முதல்வர் அவர்களுக்கும் காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் எண்ணற்ற நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் சில கோரிக்கைளையும் வைக்க விரும்புகிறேன்.

    ரவீந்திரன் சந்திரசேகர்
    ரவீந்திரன் சந்திரசேகர் 
     
    1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கலைஞர் அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.

    2. கொரோனா காலத்தில் திரையரங்குகள் இயங்காததால், அவற்றின் மின்சாரத் தொகை மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டுகிறேன்.

    3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின் போது திரையரங்குகளை திறந்து, லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டுகிறேன்.

    4. கொரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.

    5. பெரும் படங்கள், ஓடிடி தளங்கள் என பல போட்டிகளுக்கு மத்தியில் திரைக்கு வர சிரமப்படும் மிக மிக அவசரம் போன்ற சமூக அக்கறை மிக்க திரைப்படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அமைத்து, சிறு படங்களையும் படைப்பாளிகளையும் தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகவும் உதவிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    தன் மகளுடன் நடந்து செல்லும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் கம்போஸ் செய்த ஆயிரக்கணக்கான பாடல்களில் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடல் மிகவும் ஸ்பெஷலானது.

     ’தங்க மீன்கள்’ என்ற படத்திற்காக இடம்பெற்ற இந்த பாடலை நா முத்துக்குமார் எழுதினார், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடி இருப்பார்.

    மகள் வைத்திருக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் இந்த பாடல் பிடிக்காமல் இருக்காது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் நடந்து செல்லும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து, அதன் பின்னணியில் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலைப் பயன்படுத்தியுள்ளார். இந்த வீடியோ அதிக லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.


    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் படத்தின் முன்னோட்டம்.
    இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

    அயலான் படக்குழு
    அயலான் படக்குழு

    அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
    சிம்பு நடித்துள்ள படத்தை வெளியிட தடை கோரி இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
    நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    இதனிடையே, தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

    மஹா படத்தின் போஸ்டர்
    மஹா படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்தின் உருவாக்கம், தலைப்பு உள்ளிட்ட எதிலும் இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் ‘மஹா’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இயக்குனர் யு.ஆர்.ஜமீலுக்கு ரூ.5,50,000 ஊதியதொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதன்மூலம் முக்கிய அப்டேட்டையும் கொடுத்துள்ளது.
    பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

    இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதன்மூலம் முக்கிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் 190 நாடுகளில் ஓடிடி-யில் வெளியாக உள்ளதாம். 

    ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலிஷ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பேனிஸ் கேஸ்டிலியன், ஸ்பேனிஸ் நியூட்ரல், தாய், இந்தோனேசியன், வியட்நாமீஸ் போன்ற 17 மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக அப்போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் இத்தனை மொழிகளில் வெளியாவது இதுவே முதன்முறை.
    நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்னா போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    சலார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ஜூனியர் என்.டி.ஆர், விஜய் சேதுபதி

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்னா போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது.
    அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.

    இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். இந்த காட்சியை படமாக்கியதும் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். 

    அஜித்
    அஜித்

    ஆனால் கொரோனா அச்சுறுத்தலால், வலிமை படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா விதிமுறைகளால் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே வெளிநாட்டில் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சிகளை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் படமாக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
    கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

    முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் என ஏராளமான திரைப்பிரபலங்கள் நிதியுதவி வழங்கி இருந்தனர். 

    விஜய் சேதுபதி
    விஜய் சேதுபதி

    இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார் விஜய் சேதுபதி.
    கரீனாவுக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் கங்கனா அல்லது யாமி கவுதமை நடிக்க வைக்குமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராமாயண கதையை 3டி தொழில் நுட்பத்தில் சினிமா படமாக எடுக்கின்றனர். சீதை பார்வையில் கதை நகர்வதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்த படத்தில் சீதை வேடத்துக்கு பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    சீதையாக நடிக்க அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. கரீனா கபூர் கேட்ட தொகையை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு நடிகையை பார்ப்பதா? என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளனர். 

    இந்த நிலையில், சீதை வேடத்தில் கரீனா கபூர் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சீதையாக நடிக்க கரீனா கபூருக்கு அருகதை இல்லை என்றும் அவரை புறக்கணிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    கரீனா கபூர்
    கரீனா கபூர்

    மேலும் இந்து கடவுளை கவுரவிக்காத கரீனாவை சீதையாக நடிக்கவிடக் கூடாது. கரீனா தனது வாழ்க்கையில் ராமாயணத்தை படித்தே இருக்க மாட்டார் என்றெல்லாம் பதிவுகள் வெளியிட்டு கோபத்தை வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள், அந்த கதாபாத்திரத்தில் கங்கனா அல்லது யாமி கவுதமை நடிக்க வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியான ‘டெடி’ படத்துக்கு டி.இமான் இசையமைத்து இருந்தார்.
    ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஓடிடியில் வெளியான படம் டெடி. சக்தி சவுந்தரராஜன் இயக்கியிருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் இடம்பெறும் டெடி என்கிற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.  

    இந்நிலையில், விரைவில் டெடி படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் டெடி இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாகவும் ஆர்யா கூறியுள்ளார்.  

    ஆர்யா
    ஆர்யா

    நடிகர் ஆர்யா கைவசம் சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஷாலுடன் எனிமி, பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் உள்ளன. இந்த மூன்று படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    ×